Wednesday, December 19, 2007

வன்முறை ஒரு தொழிலாகுமா - 5

அதிகாரத்தை விட்டுக்கொடுப்பது எளிதான செயலில்லை தான். இருந்தாலும் எதற்குமே ஒரு முடிவு உண்டு, அப்படி முடியும் கால் அடுத்து அந்த அதிகாரத்தை கைபற்றுவது யார் என்ற போட்டியும் விரும்பதகாத காரியங்களும் நிகழ்வதும் உண்டு. உதாரணத்திற்கு இராமாயண பாரதத்தில் துவங்கி உண்மையாக நடந்த்த நலங்கிள்ளி வரலாறுவரை எடுத்துகொள்ளலாம்.

இராமனுக்கு அரச அதிகாரம் இல்லை சரி, பிறகு காட்டுக்கு சென்று வாழவேண்டும் என்ற உத்தரவு எதற்கு. பாண்டவர்கள் தங்களது அதிகாரம் முதல் மனையாள் வரை சூதாட்டதில் தோற்றார்கள் சரி, பிறகு எதற்கு நாட்டைவிட்டு காட்டுக்கும், பிறகு எங்கே இருக்ககிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஒரு தலைமறைவு வாழ்க்கையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டளை.

இன்னமும் இப்படி எத்தணையோ உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி வரும் உதாரணங்களை ஆய்ந்தோமானால், பொதுவாக ஒரு செய்தி தெரியும். அதிகாரத்தில் இருப்பவர்கள் விலக மறுப்பதும். அதிகாரத்தில் இல்லாதோர் அதிகாரத்தை அடைய என்ன எல்லாம் செய்யமுடியுமோ அவைகள் அனைத்தும் செய்து பார்ப்பதையும் பார்க்கமுடியும்.

இதில் இதைவிட கொடுமை, அதிகாரத்தில் வரும் புது குழு அல்லது நபர். தனக்கு முந்தைய அதிகார குழுவை படுத்தும் பாடுதான் நாடு கடத்தியல் இருந்து கொலைவரை சென்று நிற்கின்றது.

அவர்கள் தான் இப்போது பதவியில் இல்லை, பிறகு அவர்களை ஒட்டு மொத்தமாக ஒழிக்கவேண்டும் என்ற தேவை எதனால் இவர்களுக்கு வருகின்றது. அவர்களும் இதே தேசம், பூமியில் தான் வார்ழ்கிறார்கள். அதிகாரத்தை இழந்த உடன் அவர்களை, அவர்களது சொந்த தேசத்தைவிட்டோ அல்லது உலகத்தைவிட்டோ மன்னர்கள் அனுப்பி வைத்ததன் காரணம். முன்னாள் மன்னனது விசுவாசிகள், அவரின் வாரிசுகளை கொண்டு வந்து தங்க்களுக்கு எதிரான ஒரு கருத்தாக்கத்தை மக்களின் மனதில் விதைத்துவிட்டால், இத்தணை ஆண்டு காலம் ஆண்ட மன்னனிடமே நாட்டை கொடுத்தால் என்ன என்று இன்னாள் மன்னனுக்கு எதிராக மக்கள் செயல்பட துவங்கினால் என்ன செய்வது செய்வது என்ற அச்சம். அச்சத்தின் துவக்கமாக நம்பாமை, நம்பாமையின் துவக்கமாக, இவர்கள் பிறருக்கு செய்துவந்த துரோகங்கள் என்று ஒரு சங்கிலி தொடராக செல்லுவதை நோக்கமுடியும். மொத்தத்தில் தனது மேலும், தன்னை சார்ந்தவரின் மேலும் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லாமல் இருப்பவர்களது செயலாக அது தெரிகிறது.

ஆட்சி அதிகாரம் என்று இருப்பவர்கள் அனைவரும் இப்படி தான் இருப்பார்களா. அல்லது ஒரு சிலர் மட்டுமே இப்படி இருப்பார்களா?

அமெரிக்காவின் இரட்டைகோபுர தகர்ப்புக்கு பிறகு சவுதி அரேபியாவின் மன்னர் தொலைகாட்சியில் பேட்டி கொடுக்கிறார். அதில் அவர் சொன்ன செய்தி இந்த உகத்தில், உங்களுக்காவது பதவி போனால் உயிராது மிஞ்சும், ஆனால் எங்களுக்கு பதவி போனால் குடும்பம் கூட மிஞ்சாது என்று உலகத்தார் முன்னிலையில் போட்டு உடைத்தார் பார்க்கனும்.

ஆட்சி அதிகாரத்தில் மட்டும் இல்லை இந்த சண்டையும் சச்ரவுகள். வீட்டில் தொடங்கி, காடுவரை அனைதிலும் உண்டு. சாதாரண வரப்பு தகராரில் இருந்து நாட்டு எல்லை வரை இது நீளுவதையும் பார்க்கமுடியும்.

அக்கம் பக்கத்து மாநிலத்து மக்களையும், ஆட்சியர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டுவது. பிறகு அதனால் ஏற்படும் அரசியல் விளைவுகளில் குளிர் காயுவதும் தற்பொழுது வழக்கமாக நடப்பதை பார்த்தும் வருகின்றோம்.

மொத்தத்தில் அரசியல்வாதிகளால் இவ்வளவு இடர்பாடுகள் தோன்றுவது ஏன்?...............

தொடரும்..............

4 comments:

Anonymous said...

//வன்முறை ஒரு தொழிலாகுமா?//

ஏன் ஆகாது?தி மு க,தி க,பெ தி க,ம க இ க,பா ம க போன்ற கும்பலுக்கு இது தொழில் தான்.

')) said...

அரசியலில் என்ற தொகுப்பில் அனைவரும் அடக்கம், எதற்கு அடுத்தாலும் இராமாயணத்தையும் பாரதத்தையும் சுட்டுவதால் எனது உதாரணமாக கொண்டேன். அவைகள் புனிதம் என்றால் இவர்கள் செய்வதையும் புனிதம் என்று எடுத்துகொள்ளலாமா........

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

ஆ மகாபாரததித்திலும்,ராமாயணத்திலும் வன்முறை இருக்கிறது.அதனால் தி மு க,பா ம க,தி க,பெ தி க,ம க இ க,போன்ற பொறிக்கி பசங்க செய்யற வன்முறை நியாயமானது என்ற உங்களது கருத்து போற்றப்பட வேண்டிய ஒன்று.நீங்க தாடிக்காரன் கும்பலை சேர்ந்தவங்க தானே.அறிவு கரை புரண்டு ஓடுகிறது.வாழ்த்துக்கள்.

')) said...

தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும், பாரத்திலும் இராமாயணத்திலும் வன்முறை இருக்கிறது, உங்கள் பட்டியலில் அவர்களை பொறுக்கிகள் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் என்றால் நன்றாக இருக்கும். நான் எந்த கும்பலிலும் இல்லை, எனது பதிவுகளிலே அது தெளிவாகத்தெரியும். வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே.