Saturday, September 8, 2007

கீதை-1

திங்கள் காலை அலுவலகம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். அன்றைக்கும் அப்படியே இருந்தது, மதிய இடைவேளை வரை சென்ற வார வேலை கணக்கும், வாரகடைசியில் நிகழ்ந்த பிரச்சனைகள் என்று கணக்கு கொடும் முகமாக கழிந்தது. மதியம் 12 மணிக்கு பசி எடுக்க, உணவு தேடும் படலமாக வெளியே வந்தான். எங்கே போவது என்ன உண்பது இது அன்றாட அவலம் அவனுக்கு. அனேகமான இடங்கள் எல்லாம் பார்த்தாகிவிட்டது அலுத்தும் போய்விட்டது. இருக்கும் பசிக்கு நல்ல எதாவது சாப்பிடனும் மனது சொல்கிறது ஆனால் எங்கே சாப்பிடுவது வந்த பசி மறக்கும் அளவிற்கு அலுப்பு.

இப்படி அலுப்புடன் கிளம்பியவன் கடைசியாக அங்கேயே வந்து சேர்ந்தான், ஒன்றுக்கு பலமுறை அந்த அட்டையும், பலகையும் முறைத்து பார்த்தாகிவிட்டது, மீண்டும் குழப்பம். சே வீட்க்கு போயிருந்தாலாவது மிச்சம் இருந்த ரசத்திலே கொஞ்சம் சாதமாவது சாப்பிட்டு இருக்கலாம், என்ன கொடுமை இது..நேரம் போக..அங்கே இருந்தவன் என்ன வேண்டும் முகத்தில் ஆயிரம் கேள்வி அவனுக்கு, இருந்தாலும் ஒரு வியாபார புன்னகை. ஆரம்பத்தில் இந்த புன்னகையும் அவனுக்கு ஆச்சரியத்தை கொடுத்து இருந்தாலும் காலம் செல்ல செல்ல அவை வெறும் வியாபார புன்னகை மட்டுமே என்று புரிந்து இருந்ததனால் கவனம் செலுத்தாமல், யோசனையாகவே இருந்தான்.

அருகில் அதிகம் பரீட்சயம் இல்லாத ஒரு முகம், மன்னிக்கவும் தாண்டி சென்று ஏதோ ஒன்றை கேட்க்க. இவனும் அதையே இன்றைக்கு சாப்பிடுவது என்று முடிவு செய்தான். மேசையில் உணவுக்காக காத்துக்கொண்டிருக்கையில் மீண்டும் மனது ஏதேதோ எண்ணத்தில் மிதந்துகொண்டிருந்தது. அந்த அலங்காரமான தட்டுடன் உணவு பறிமாரினாள், மீண்டும் அதே வியாபார புன்னகை, நன்றாக சாப்பிடு சொல்லிவிட்டு மறைதாள்.

அலங்கார தட்டில் வகை வகையாக உணவு வகைகள், அந்த வகைகளும், வாசனையும் அவனுக்கு மேலும் பசியைகூட்டியது. மெல்ல ஒன்று ஒன்றாக சுவைகத்துவங்கினான். மெல்ல எல்லா வகைகளையும் சுவைத்தபின் இதை தானா அப்படி கேட்டு வாங்கினாளா என்று திடிய வண்ணம் அங்கும் இங்கும் திரும்பினான், சரியாக அந்த அரிமுகம் இல்லாத முகமும் ஒரு அசட்டு சிரிப்பது தெரிந்தது. அதோடு இல்லாமல் உதட்டை வளைத்து கோனி இது நல்லா இல்லை சைகையே அது, திட்டவட்டமாக காட்டினாள். தானும் பாதிக்கப்பட்டோம் மறந்துவிட்டான். இவனும் பதிலுக்கு அதே அதிருப்தி சைகைகள்.

ஒரு வகையாக உணவு வேதனை முடிந்து அலுவலகம் நோக்கி விரைந்தான். கடையில் ஏற்பட்ட பாதிப்பு மீண்டும் அந்த அலுப்பு எண்ணத்தில் மூழ்க்கியது. சனியும், ஞாயிறும், பல இடங்களுக்கு பேசியதின் விளைவுவேர இன்னமும் தாக்கியது. எதற்கு இவ்வளவு வேதனை, இவ்வளவு அலுப்பு மனது நொடிக்கு ஒரு முறை சன்னியாசம் தேடியது.

சிறுவனாக இருக்கும் போது 10வது படிக்கும் வரை கவனமாக இரு, பிறகு ஒன்னும் பிசகு இருக்காது போதும் என்றார்கள். 10வதுக்கு பிறகு இன்னமு 2 வருடம் தான் +2வில் நல்ல மதிபெண் பெற்றுவிட்டால் மட்டுமே போதும் பிறகு ஒன்றும் வேண்டாம். வாழ்க்கை நன்றாக அமைந்துவிடும், மீண்டும் அதே வாசகங்கள். இப்படியே படிப்பு படிப்பு 2 வருடங்கள் ஓடியது. முடிந்ததும் அப்பாடா என்று இருந்தது 3 மாதங்களுக்கு பிறகுதான் முடிவுகள் வெளியிடுவார்கள் நிம்மதி. நடந்ததோ இது தான், திங்கட்கிழமையில் இருந்து நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்பு துவங்கிறது ஞாயிறு ஊருக்கு போகவேண்டும் இருக்கிற 2 மூன்று நாட்களில் நன்றாக ஓய்வெடுத்துகொண்டு பயண ஏற்பாடுகளை கவனி கட்டளை பிறந்து கொண்டிருந்தது...................

பிறகு 4 ஆண்டுகள் பொறியில் படிப்பு, அடுத்த வனவாசம். இல்லை பொட்டல் காடு வாசம் தான் சரியான பதமாக இருக்கும். கல்லூரிக்கு அவன் புறப்படும் முன்பு அனைவரின் வாழ்த்துகளை பெற்றுகொண்டான், அனைவரும் சொல்லிவைதாற் போல் இனிமேல் என்னடா கவலை. அதான் இடம் கிடைத்துவிட்டதே இனி ஒன்றும் இல்லை, காலம் போவதே தெரியாது சட்டு என்று முடிந்துவிடும்.....அப்புறம் என்ன வேலை, திருமணம்....வெட்க்கம் கொண்டான்....

இனிய கனவுகளோடு கல்லூரி திருவிழா, முதல் நாள் அனைத்து மாணவர்களும் சுற்றம் சூழ வந்திருந்தார்கள். அவனது கல்லூரி, விடுதி, நூலகம், என்று காலை முதல் கல்லூரி விரிவுரையாளர்களது கல்லூரி சுற்றுலா. மதியம் உணவுவகத்தில் உணவு, பெற்றோர்களோ நிம்மதி பெருமூச்சு. உணவு நன்றாக இருக்கிறது, உனக்கு ஒன்றும் கவலை இல்லை அனேகமாக அனைத்து பெற்றோர்களும் ஒரே மாதிரியாக சான்றிதழ்கள் வழங்கிக்கொண்டு இருந்தார்கள்.

கண்ணீரும் கம்பலையுமாக முடிந்த பிரிவுக்கு பிறகு முதல் நாள் கல்லூரியில் விரிவுரையாளர் அன்பு மாணவர்களே என்று துவங்கியவரின் அடுத்து அடுத்து வந்த வசனங்கள் அனேக மாணவர்களின் வயிற்றில் புளியை கறைத்துக்கொண்டு இருந்தது. இனிய நினைவுகளோடு வந்த அனைவருக்கும் அனேகமாக இவைகள் இடிகளாகவே இருந்தது. என்ன நண்பா ஆரம்பமே இப்படி பயமுருத்துகிறார்கள் பக்கத்தில் இருந்து ஒரு குரல், முறுவலித்தான் வலிந்து. அவ்வளவுதான் அவனால் முடிந்தது அப்போது.

ஒரு நாளைக்கு 8 வகுப்புகள் காலை 9 மணிக்கு வகுப்புகள் ஆரம்பம், காலை ஒரு அரை மணி நேரம் ஓய்வு, மதியம் 1 மணி நேரம் உணவுக்கு, பிறகு மாலையில் ஒரு அரை மணி நேர ஓய்வு, மாலை 5 வரை வகுப்புகள். வாரம் 6 நாட்கள் வகுப்புகள், சனி மட்டும் அரை நாள் 12:30 வரையில். வாரம் 2 சோதனை, ஒரு பட்டறை. அரையாண்டுகளுக்கு இடையே விடுமுறை இல்லை, ஆனால் பரீட்டைக்கு மட்டும் 1 மாதம் விடுப்பு இருக்கும் அது படிக்க விடுப்பு இப்படி 8 வகுப்பும் வந்து போனவர்கள் விரிவுரைக்கு பதில் அறிவுரைகளையும், பயமுறுத்தல்களையும் அள்ளிவீசினார்கள். அவர்கள் அனைவரின் பேச்சிலும் ஒரே ஒரு நம்பிக்கை தரும் செய்தி, இவ்வளவு தூரம் வந்துவிட்டீர்கள், இந்த இடத்தை பிடிக்க எவ்வளவு உழைத்திருப்பீர்கள் என்று நன்றாகவே தெரியும். ஆகவே சுனங்காமல் இன்னமும் ஒரு 4 ஆண்டு காலங்கள் அதே உழைப்பை போடுங்கள், போகும் போது பட்டத்துடன் வேலையும் கிடைக்கும் என்ற வசனங்களே.

1, 2, 3, 4 என்று ஆண்டுகள் போனதே தெரியவில்லை, பிறகு சென்னையில், வெங்களூரில், இப்போ இங்கு......நினைவில் தொலைந்தவனுக்கு கவனம் திரும்பியது. என்ன கொடுத்த வேலை முடிந்ததா, மின்னஞ்சல் சலம்பியது, முடித்தாகிவிட்டது, கொடுத்துமாகிவிட்டது, பதிலுக்கு இவன் அலம்பல் மின்னஞ்சலில்.

தொடரும்

0 comments: