Saturday, September 8, 2007

பார்ன் அல்டிமெடம்

இந்த வரிசையில் வரும் 3வது படம் இது. இந்த பட வரிசையை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு வெற்றி விழா படம் ஞாபகம் இருக்கும் என்று நினைகின்றேன் கமலகாசன், பிரபு, அமலா, குட்பு, சசிகலா நடிக்க, பிரதாப்போத்தன் இயக்கத்தில் வெளிவந்த படம். அனேகமாக அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கின்றேன்.


இந்த பாகம் துவங்கிய முதல் இறுதி வரை, முதல் பாகத்தில் உள்ளது போல் மிகவும் பர பரப்பாக செல்கிறது. ருஷ்ய பகுதியைவிட்டு வெளியேரியவன், அவனை கொல்ல கிளம்பியவனை கொன்றுவிட்டு கிளம்பிய காட்சிகளை பார்த்துவிட்டு, பார்ன்னை இனியும் விட்டு வைப்பது உளவு நிறுவனத்துக்கு ஆபத்தாய் முடியும் என்ற முடிவு எட்டப்படுகிறது.




அதே வேளையில் தன்னை கொல்ல நினைப்பவர்கள் யார் என்றும், தான் யார் என்றும் தேடித்திரியும் சேசன் பார்ன் செய்திதாளில் வெளிவரும் அவனை பற்றிய ஒரு மர்ம முடிச்சு செய்தியை பார்த்ததில் துவங்குகிறது அடிதடியாட்டம்.


சும்மா சொல்லக்கூடாது, என்ன காட்சி அமைப்பு, திரைக்கதை, மற்றும் இசை. பின்னனி இசையும் காட்சியமைப்பும் பின்னி எடுக்கிறது. ஒரு உளவாளிக்கும், உளவு நிருபருக்கும் சம்பவங்களை கணிப்பதிலும், நிலைமைக்கு ஏற்ப செயற்பாடுகளை மாற்றிகொள்ளுவதில் 100% வித்தியாசம் உண்டு என்று என்ன அழகாய் காண்பித்து இருக்கிறார்கள்.


உளவு நிறுவனத்தின் உரையாடலில் உள்ள சங்கேத மொழிகளும், அதன் விளக்கங்களும் அருமை. குறிப்பாக, உளவு நிருபருக்கு கோப்புகளை விற்பதாக சொன்னவனின் அலுவலக சூறையாடலி நடைபெறும் சங்கேத மொழிகளும். சேசனையும், மிக்கியையும் ஒரு சேர தீர்த்துக்கட்ட கட்டளை பிறப்பிப்பதையும் இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம். கடைசியில் அந்த செயல் தலைவனிடம் அவனது அலுவலகத்தில் இருந்தே பேசுவதும், இவன் அதுக்கு அலுவலகதுக்கு வாயேன் நிதானமாய் பேசுவோன் என்று மழுப்புவதும், அதற்கு சேசன் சொல்லும் அசத்தல் பதில்கள் என்று, கதை, திரைக்கதை, வசனம், சண்டை, இசை என்று எல்லோரையும் மொத்தமாக புகழ்ந்தே ஆகவேண்டும்.

கதையும் கதையின் ஓட்டத்தையும் வரிக்கு வரி எழுதவேண்டும் என்று தான் துவங்கினேன். ஆனால், எல்லாம் தெரிந்த பின் படம் பார்ப்பதால் அலுக்கும். ஆகவே யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

குறிப்பாக, ஆங்க்கில படம் என்றால் அதுவும் உளவாளி படம் என்றால் குறைந்தது 5 படுக்கையறை காட்சியாவது இருக்கும், ரட் அவர் 2, கசினோ ரயலே எல்லாம் அந்த ரகம் தான். அப்படி ஏது எதிர்பார்த்து படத்திர்க்கு போவோருக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

0 comments: