Thursday, September 20, 2007

இந்து கோவில் நிலம் மண்டலமய அதிகார குழு விசாரணையும், பத்திரிக்கை செய்தியும் ஒரு பார்வை

http://www.news-gazette.com/news/local/2007/03/16/hindu_temple_discussion_to_continue

இந்த விசாரணைக்கு வந்திருந்தவர்களுக்கு நன்றாகத்தெரியும் இந்துகளின் தரப்பில் கேட்க்கபட்ட அத்தணை கேள்விகளுக்கும் அந்த வழக்குரைஞர் எனக்கு சரியாக தெரியவில்லை, அது பொறியாளரைத்தான் கேட்க்கனும். இது வரையில் சிறு மற்றும் பெரு நகரங்களில் எல்லாம் இப்படி எல்லாம் இருக்கிறது என்று சொன்னாரே தவிற இங்கே நாம் காட்டிய கிராம சூழழில் உள்ள உதாரணங்களை எடுத்துக்காட்டவோ தொகுத்து சொல்லவோ அவரால் முடியவில்லை. அது மட்டும் அல்லாது, சிவ மொனார்டு அவர்களின் கடிதம் வாசிக்கப்பட்டதையோ அதைத்தொடர்ந்து வாசித்தவர் சொன்ன வாசங்களோ செய்தியில் இடம்பெறவில்லை.

மேலோட்டமாக பார்த்தால் சுருக்கமான செய்தியாக தெரியும் ஆனால் உண்மையில் இது சுருக்கிய செய்தி என்று அங்க வந்து இருந்தவர்களுக்கு தெரியும்.

மக்களாட்சி என்றும், எங்களுக்கு அடுத்த பெரிய மக்களாட்சி இந்தியா என்றும் செய்திகளிலும் ஊடகங்களிலும் விளம்பரபடுத்தப்பட்டாலும். அமெரிக்காவின் உண்மை முகம் அதைவிட முக்கியமாக வாத்தைக்கு வார்த்தை இந்து இந்து என்று விளித்து எழுதி இருப்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். நேரிலே பார்க்கும் போது எப்படி இருக்கிறீர்கள், நலமா, வாரகடைசி எப்படி போனதுன்னு அன்போடும் பண்போடும் விளிக்கும் அன்பின் அடையாளத்தை இங்கே காண்கின்றோம். ஒட்டு மொத்த அமெரிக்காவையும் சொல்லவில்லை, அங்கே விசாரணைக்கு வந்து நமக்கு சாதகமாக வாதாடிய அந்த நல்ல உள்ளங்களுக்கு நாம் என்றும் கடமை பட்டுள்ளோம்.

அதே வேளையில் பத்திரிக்கையின் இத்தகைய ஒருதலை பட்ச்சமான போக்கு சரியில்லையே. செய்தியை படிக்கும் மற்ற குடிமக்களது எண்ணத்தில் நாம் அங்கே நாசவேலைகளை புரியவும், இந்தியானா ஜோன்சிலே காட்டும் காளிகோயில் வழிபாட்டினை(படத்தின் செய்தி அதுவே உண்மைக்கு புரம்பான தகவல்) அதைபோல எதுவோ நடக்கும் அதனால் எங்களால் மாலையில் வெளியில் அமர்ந்து குடியும் கும்மாளமுமாக இருக்க முடியாது என்ற அளவிற்கு வெளியிட்ட செய்தியை என்ன என்று சொல்லுவது.

அருகில் அளவுக்கு அதிகமாக வாகன போக்குவரத்து அந்த இடத்தின் சூழ்நிலைக்கு பங்கம் விளைவிக்குமாம், ஆனால் அதுவே ஐ 57ல் நொடிக்கு 20 வண்டிகள் போகும் சத்தமும், அணி அணியாக அங்கே செல்லும் வண்டிகள் மட்டும் அழகு சேர்க்குமாம். அங்கே இப்படி தான் சொன்னார்கள்.

என்ன என்னவோ அழகு வார்த்தைகளில் சொன்னாலும் இடம் இல்லை, தரமாட்டேன், விடமாட்டேன், வராதே, பொடுரதை சாப்பிட்டுவிட்டு படுத்து இரு, என்ற வசனங்களின் பொருளில் அழகு இருக்கவே இருகாது.

வால்மார்டு வரலாம், கடைகள் வரலாம், பெட்ரோல் கடை வரலாம், சம்பந்தமே இல்லாமல் அங்கே புதிய ரேடார் மேடை வரலாம், கிராமத்து விவசாயத்துக்கும் விமானத்துக்கும் என்ன சம்பந்தமோ அது வரலாம், அதிலே கிராமத்துக்கு சம்பந்தமே இல்லாமல் தொழிலதிபர்கள் வரலாம், கிராம சம்பந்தமே இல்லாத கோட்டும் சூட்டும் போட்டு ஹம்மர்ரும், இன்ன என்ன பிற சொகுசு வண்டிகளில் வரலாமே அத்தனையிலும் வரலாம், கிராமத்துக்கு சம்பந்தமே இல்லாத தொலைக்காட்சி, தொலைபேசி முதல் அத்தனை நவ நாகரிக விசயங்களும் வரலாம், ஆனால் சாமின்னு சொல்லிக்கிடு ஒருத்தனும் அந்த பக்கம் போயிடக்கூடாது. அப்படி போனா இவர்களின் நிம்மதி கெட்டுப்போகுமாம், இவர்களின் நிம்மதி எதிலே இருக்கிறது பாருங்கள்.

கிராமம், கிராம அழகு, கிராம பாரம்பரியம் என்றும் சொன்னார்கள். அங்கே கட்டி இருக்கும் வீட்டையும், அவர்கள் வாழும் முறையும் உடுத்தும் முறையும் பாருங்கள், என்ன வித்தியாசம் என்று. பிறகு என்ன கிராமம் கிராம சூழல்.

இவர்கள் இருப்பது மேட்டு நிலம், கோவில் நிலமோ மட்டநிலம், மட்டநிலத்தில் கோவில் கட்டினால், மழை நீர் வடியாதாம். இவர் வீட்டு வீட்டி நீரேற்றி அன்றாடம் ஓடும்மாம். கோவில் என்ன தண்ணீர் போகும் வடிகாலில்லா கட்டப்போகிறார்கள் என்று கேட்டால் இல்லை என்றார் அந்த வழக்குரைஞர். பின்னே நீர் எங்கே தேங்கும்? புன்னகை, வழியல், திருட்டு முழி இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் அந்த வாதியின் வழக்குரைஞரின் பதிலை.

ஏப்பிரல் 26ல் பார்க்கலாம் என்ன சொல்லுகிறார்கள் என்று, நமது தரப்பு பிரதிவாதம் அப்போது தான் துவங்குகிறது.

ஏப்ரலில் நடந்த விசாரணையில் அனுமதி வழங்கப்பட்டு விட்டது. ஆனால் அது வரைக்கும் இவர் அடித்த கூத்தை என்னவென்று சொல்ல.

0 comments: