Saturday, September 8, 2007

கனவு

இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை, கண்ணை மூடினால் கனவும் தூங்க விடவில்லை. எப்பொழுதுவிடியும் என்று இருந்தது அவனுக்கு. விடிந்ததும் என்ன என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்ற கணக்கிலே மீதி நேரத்தையும் கடத்தினான். மணி 4கை தாண்டி இருக்கும், இவனுக்கு அதற்குமேல் பொருத்துக்கொள்ள முடியவில்லை, மற்றவர்கள் எழுவில்லை அவனும் காத்துக்கொண்டிருகவில்லை. நேரே குழாயடியில் தண்ணீர் முகர்ந்து குளியல் முடித்து, வீடு திரும்புகையில் அம்மா, அப்பா அவனை கட்டுப்படுத்தியும் அவன் கேட்க்கவே இல்லை.

அறைக்கு சென்று நேரே தயாராக வைத்திருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அவசரத்தில் வெளியில் வந்துவிட்டான், வீதியில் விளக்குகளும் இல்லை வெளிச்சமும் இல்லை. திகைத்து நின்றவன் பிறகு வீட்டிற்கு உள்ளே வந்தான். வந்தவனை பார்த்ததும் அனைவரும் சிரித்தனர். அவனுக்கு மிகவும் அவமானமாக போனது. வெளிச்சத்திற்கு விளக்கும், தீப்பொட்டியுமாக பெட்டியுடன் வந்தான்.

அதே வேளையில் இவனது நண்பனும் இவனைபோல் அவனுடைய பெட்டியுடன் இருவரும் பேசிவைத்த இடத்தில் வந்து தயாராக காத்துகொண்டு இருந்தான். இவன் அங்கே சென்று சேர்ந்ததும், இருவருமாக நடக்க தொடங்க்கினர். விளக்கு வெளிச்சத்தில் தடம் பார்த்து நடப்பது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும் மனதுக்குள் வீராப்பு என்று வந்துவிடுமானால், அதர்க்காக என்ன விலையும் கொடுப்பார்கள் இவர்கள் என்ன விதிவிலக்கா.

இவன் ஒரு வீராப்பில் வந்துவிட்டானே ஒழிய, வீட்டில் நேற்று இரவு அம்மாவும், அப்பாவும் பேசிக்கொண்டதை மனதுக்குள் அசைபோற்றவாரே நடந்தான். நீண்ட மௌனம் இவனது நண்பன் பேச்சில் கலைந்தது. என்னதான் இருந்தாலும் இதற்காக இந்த நேரத்தில் இத்தனை தூரம் போகதான் வேண்டுமா என்ன. வீட்டு நினைப்பில் இருந்தவனுக்கு அரையும் குறையும்மாய் காதில் விழுந்தது. என்ன என்ன என்றான், இல்லை வீட்டில் ஒன்றும் சொல்லவில்லையா என்றான்.

சொல்லாமல் எங்க, பெரிய கலாட்டாவே வடந்ததுதான். இருந்தாலும் இதை எல்லாம் பார்த்தால் நம்ம பொழப்பை யார் பார்ப்பது. வெளியே வந்தாகிவிட்டது இனி வந்தவேலையை கவனிப்போம் என்றபடியே நடந்தான். கையில் கொண்டு வந்த விளக்கின் வெளிச்சமும் குறைந்துகொண்டே வந்தது. மெல்ல விடியவும் காலை கதிரவனின் கதிர் மெல்ல பூமியை போர்த்த தொடங்கியது.

நடந்த களைப்பு தாளாமல் அங்கேயே வேம்பு மரத்தடியில் இருவரும் அமர்ந்தார்கள். தூக்கி வந்த பெட்டியின் பாரமோ அவர்களை இன்னமும் களைப்புர செய்திருந்தது. மேற்கொண்டு இனிமேல் என்னால் இனிமேல் நடக்கமுடியாது, கட்டாயம் அவ்வளவு தூரம் போகத்தான் வேண்டுமா என்றான்.

அதற்கு அவனது நண்பனோ, இப்படி ஒரு முடிவுக்கு வர காரணம் என்ன. எதை நினைத்து இந்த செயலை துவங்கினோம், இப்படி பாதியிலே விடுவதாக இருந்தால் இப்படி ஒரு செயலுக்காக இவ்வளவு நாள் ஏன் பாடு பட்டிருக்கவேண்டும் என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக, இவனுக்கு என்ன பதில் சொல்ல என்று மனம் திண்டாட, சரி கொஞ்சநேரம் கழித்து போகலாம் என்று அமைதியானான்.

சிறிது நேரத்திற்கு பிறகு அந்த மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள் இருவரும். தூரத்தெரியும் அவர்களது ஊரை ஒருமுறை பார்த்துவிட்டு, கொண்டு வந்த பாட்டிலை எடுத்தார்கள், மற்ற இத்தியாதிகளை எல்லாம் எடுத்து தயார் படுத்திகொண்டு இருக்கும் போது அவனது நண்பன் கேட்டான் ஒன்றும் ஆகிவிடாதே ஒரு ஆச்சரியமும் பயமும் கலந்த முகத்துடன். இவனோ அதெல்லாம் ஒன்னும் ஆகாது சும்மா இரு, அந்த தீ பெட்டியை கொடு என்றான்.

மெல்ல ஊரை ஒரு முறை பார்த்துவிட்டு திறந்து வைத்திருந்த பாட்டிலருகே வந்தான், அவனது நண்பன், ஆனது ஆகட்டும் முதலில் தீபெட்டியை என்னிடம் கொடு என்று வாங்கியவன் கட கடவென பற்றவைத்தான். முதலில் மெல்ல புகைய தொடங்கி பின்னர் மெல்ல அதிலே தீ பரவியது. அதிலிருந்து கிளம்பிய நீண்ட புகையினை பார்த்து இரசித்தவாரே இவன் வாயை பிளந்தவாரே நின்றான். என்ன பாத்துகிட்டு இருக்க, இந்தா நீயும் ஒன்னு பத்தவை நீட்டினான் தீ பெட்டியை.

ஊரிலே இவனது பெற்றோர்கள் இவனது வேட்டு சத்தம் கேட்டு சிரிக்க தொடங்கினார்கள். குடிசைகள் அருகே ராக்கட் வெடியெல்லம் கொலுத்த கூடாது என்று சொன்னாலும் சொன்னோம், காலையில இவ்வளவு தொலவு போய் வெடிக்குரானுக பாரு என்று. ராக்கட் வெடி இவனது இந்த வருட கனவு அது. அதும் அப்துல் கலாம் அவது பள்ளியில் வந்து பேசி சென்ற போது, இவனுக்கு அவரது பேச்சு ஒன்றும் புரியவில்லை என்றாலும், இந்தியாவின் ராக்கட் திட்டத்தின் முன்னோடி என்ற வார்த்தைகளில் அவனை கவர்ந்தது ராக்கட். அது முதல் எப்படியாவது ஒரு ராக்கட்டை செலுத்தி பார்க்கவேண்டும் என்று ஆலாய் பறந்தான். ஆனால் 5ஆம் வகுப்பு படிக்கும் இவனுக்கு என்ன சொல்லி என்ன செய்ய என்று விட்டு விட்டார்கள்.

அன்றைகு தோன்றிய கனவு இன்றைக்கு நினைவில். மகிழ்ச்சி தாளவில்லை இவனுக்கும் அவனது நண்பனுக்கும் ஏரக்குறைய ஒரு டசன் ராக்கெட்டுகளை கொளுத்திவிட்டு வீடு திரும்பினார்கள் இருவரும் தீபாவளிக்கு. அடர்த்தியாக இருந்த குடிசைபகுதியில் சென்று மறைந்தார்கள்.

0 comments: