வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பிய மகள் இடிந்து நொறுங்கி மௌனமாக அமர்ந்து இருப்பதை பார்க்க முடியாமல் வெளியே சென்றார். எப்போதும் போகும் போது சொல்லிக்கொள்ளாமல் போவதிலை அவர், அன்று அப்படி செல்லுவதையே, தன்னை எல்லோரும் இப்படி வேடிக்கை பார்க்கிறார்கள் என்றோ என்று எதையும் அவளால் உண்ர முடியாத நிலை அவளுக்கு. எங்கோ நெடுந்தொலைவில் பொதிந்த அவளது நினைவில் மின்னியது எல்லாம் அவன் அவளிடம் கடைசியாக கூறிய வார்த்தைகளும், அதனால் ஏற்பட்ட அவமானமும் ஏமாற்றமும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுகொண்டிருந்தது.
இனி இந்த உலகம் இவளை இழிவாக பேசும் என்றோ, இனிமேல் ஒரு நல்ல வாழ்க்கை எங்கே அமையபோகிறது என்றோ அவள் கலங்கவில்லை. உடன் வந்த நண்பர்கள் கூறும் ஆருதல் வார்த்தைகள் எல்லாமே அவன் மேல் அவர் அவருக்கு தெரிந்த இன்ன எல்லாம் என்றும் போட்டு கொடுக்கும் விதமாக பல விடயங்களை தெரிவித்துக்கொண்டு இருந்தாலும் இவளின் கவனம் அவைகளை காதில் வாங்க்கியதாகக்கூட தெரியவில்லை.
கொஞ்சம் தயங்கி தயங்கி கூறியவர்கள் எல்லாம் இன்னமும் அழுத்தமாகவும் ஆழமாகவும் விடயங்க்களை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார்கள். கேட்டு கொண்டு இருந்த அவளது குடும்பத்தாரால் இவைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல், சாமாதானம் கூறி அந்த நண்பர் பட்டாளத்தை அனுப்பினர்.
படுக்கையில் படுத்தவள் படுத்தவள் தான், மாலை இரவாகி, இரவு காலையாகி, காலை மதியமாகி, மதியம் மாலையாகி, இப்படி நாள், வாரம், மாதம் கடந்தது. சிட்டாக துள்ளித்திரிந்தவள், இன்றோ அமைதியின் பேருவமாக பவணி வருவதை யாராலுமே பொறுத்துகொள்ளவே முடியவில்லை தான். இருந்தாலும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற போட்டி பெற்றோர் முதல் நண்பர்கள் வரை இருந்தது.
சுமார் 3 மாதத்திற்கு பிறகு சென்னையில் பேசவேண்டும் என்று ஒரு அழைப்பு வந்தது, வந்து இருந்தவர் அவளிடன், நீங்கள் கூட்டத்தில் போசுவீங்களா என்று தலைவர் கேட்டு வர சொன்னார். இவள் அம்மாவின் முகத்தை பார்க்க, அம்மா அப்பாவின் முகத்தை பார்க்க. அப்பா, போம்மா, போய் பேசிட்டு வா இன்னமும் எத்தனை காலம் தான் கலை இழந்து இருப்பே, ஒரு மாற்றமாக இருக்கும் போயிட்டு வா என்றார். அவரின் வாய்தான் அதோடு நின்றது, ஆனால் கண்களோ இன்னமும் பேசிக்கொண்டே இருந்தது. வீடே இவளின் பதிலிக்காக அமைதியானது.
சற்று தயங்க்கியவள், அப்பாவின் கண்களையே பார்த்தவளாக சொன்னால், தலைவரிடம் சொல்லுங்கள் நான் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அப்பாவையே பார்த்தாள். கவலை தோய்ந்த அவர்முகம் மெல்ல மலர்ந்தது. வந்தவரும் மகிழ்சியுடன் சென்றார். நடப்பதை எல்லாம் பார்த்துகொண்டிருந்த அம்மா என்ன நடக்கிறது என்று ஊகிக்க முடியாதவளாக சென்றாள்.
மேடை பேச்சுக்கு தயாராகும் விதமாக, என்ன கூட்டம், என்ன கரு பொருள். என்ன என்ன கோடிட்டு காட்டவேண்டும், காகிதமும் கையுமாக நாட்க்கள் நகந்துகொண்டிருந்தது. ஒரு மாதிரியாக இறுதி வரைவு தாயாரானது, அப்பவிடம் காட்டி அவரது திருத்தங்களை பெற எண்ணி காட்டினாள். முழுவதும் படித்தவர் அமைதியாக சொன்னார், கண்ணா ஒன்னு சொன்னா கோவிசுக்க மாட்டியே என்றார். சொல்லுங்கப்பா சொன்னாள், இல்லடா தயாரிப்பிலே இவ்வளவு வேகம் குறைவா இருக்கே மேடையில எப்படிடா பேசப்போறே என்றார் கவலையுடன். அதெல்லாம் நான் பாத்துகிறேன்பா என்று காகிதத்தை வாங்கியபடி சென்றாள்.
அந்த நேரத்தில் அங்கே வந்த அவளது நண்பன், திருவாசகம் மற்றும் ஆணிவேர்(இந்தியாவில் தடைசெய்யப்பட்ட திரைப்படம்) குறுந்தகடுகளை கொடுத்துவிட்டு இத்தனை நாள் வலையிலோ அல்லது திருட்டு பதிவோ கிடைக்கும் என்று பார்த்தேன். ஆனால் இதுவரையில் அப்படி ஏதும் வரவே இல்லை, அதனால் கடைசியாக கடையிலே வாங்கி வந்தேன் வைத்துக்கொள், கொடுத்துவிட்டு சென்றான்.
காகிதமும், குறுந்தகடும்மாக சென்றவள், திருவாசகத்தை கேட்டுக்கொண்டே வரைவை மீண்டும் படித்துக்கொண்டு இருந்தாள். ஆனால் மனமோ இத்தனை நாளாய் இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் நீதியும், நேர்மையும், வெல்லும். இதிகாசங்களிலும் கதைகளிலும் சொல்லுவதை போல ஒரு நீதியும் நேர்மையும் கொண்ட ஒரு சமுதாயமாக இந்தியா மலரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. எத்தனை தான் திரைபடங்க்களும் கதைகளும் கட்டுரைகளும் நீதிக்கு புறம்பானவர்கள் வெற்றிகொள்வதாகவும் அதன் தேவையையும் அதற்கான காரணங்களயும் சொல்லி வந்தாலும், சரி மட்டுமே சரி, தவறு என்றைக்குமே சரியாகாது இது இவளின் ஆணித்தனமான எண்ணம். எல்லோருடைய எண்ணமும் இப்படி தான் இருக்கவேண்டும், தேவை இல்லாமல் தவறானவர்கள் குழப்புகிறார்கள் அவளாது ஆழ்ந்த நம்பிக்கை.
தன் எண்ணம் போல கதைகளை எழுதுவது, அதற்கு தகுந்த காரணங்களை முன்வைப்பதும், பசிக்காக இப்படி செய்தால் தவறில்லை என்று துவங்கி பிறகு கொலை, கொள்ளை, திருட்டு, பொய் என்று அகராதியில் உள்ள அத்துனை கெட்டவைகளையும் நல்லத்தனமாக சித்தரித்து காட்டுவதும், அதன் மூலமாக மக்களின் எண்ணகளிலே நஞ்சு கலக்கும் வேலை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது இவர்களின் சுய பயனுக்காக. செல்வம் படுத்தும் பாடு இவர்களை இப்படி எல்லாம் ஆட்டிவைக்கிறது. வித்தியாசமாக சொன்னால் மக்கள் பணத்தை கொட்டலாம் என்ற எண்ணம்(பணம் அவர்களுக்கு கொட்டுகிறது அது வேற விடயம்).
இவளது போராட்டம் இவைகளுக்கு எதிரானவையாக இருந்தது. அன்றைக்கு அந்த சம்பவம் தனக்கு நடக்கும் வரையில் ஆணித்தனமாக இருந்தவளுக்கு அதன் பிறகு நம்பிக்கையில் தடுமாற்றம். எத்தனை முறை ஆராய்ந்தோம், எத்தனை முறை ஆசை வார்த்தைகள், எத்தனை எண்ண பறிமாற்றங்கள். இத்தனைக்கு பிறகும் இப்படி நடக்கும் என்று அவளோ அவளை சார்ந்தோர்களோ யாரும் நம்பாதவிதமாக அல்லவா நடந்தது. உலகத்தில் யாருமே நல்லவர் இல்லையோ, நீதி, நேர்மை எல்லாம் பொய்யோ?!. "கிடைகின்ற வாய்ப்பை பயன் படுத்தாமல் நீதி, நேர்மை பேசிகொண்டு இருந்தால் காலத்திற்கு ஆண்டியாக அலையவேண்டியதுதான்" சமீப காலமாக அதிகம் தோன்றும் வசனம்.
மெல்ல இசைந்துவரும் திருவாசகம் வலிந்து ஆழமாக மாறிய கணம், சிந்தனை கலைந்தவளாய் கவனித்தாள். ஒரு வேளை இவர்கள் கூறுவது போல் நீதி இல்லா உலகமா இருந்தால் எத்தணை பிரதிகள் திருட்டு வட்டு வந்திருக்கும் இந்த திருவாசகமும் ஆணிவேரும். ஆனால் இத்தனை நாளாகியும் கிடைக்கவில்லையே. யார் கட்டி போட்டது இவர்களை அல்லது இந்த வட்டுகள் யாரிடமும் இல்லை என்று அர்த்தமா...........
உலகம் என்றும் அதே பழைய உலகம் தான், எதையும் எப்பவும் தொலைத்த உலகம் இல்லை. இந்த உலகத்தை போய் போர்குணம் கொண்டதாகவும். பழி குணம் கொண்டதாகவும், நீதி அற்ற உலகமாகவும் எழுதவும் சித்தரிக்கவும் இவர்களுக்கு எப்படிதான் மனம் வருகிறதோ. இன்னமும் எத்தனை முறைதான் சொன்னாலும் சரி சரி தான் தவறு என்றைக்குமே சரியாகாது. நம்பிக்கையாக தூங்கி இருந்தாள் நாளை மீண்டும் போராட, தொடரட்டும் அவளது அறிவொளி போராட்டம், வெல்லட்டும்.
Monday, September 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இன்னும் படிக்கவில்லை. புதியவர் என்பதால் இப்போதைக்கு வாழ்த்துக்கள் மட்டும்.
வருகைக்கு நன்றி ஆழியூரான் படித்துவிட்டு பின்னூட்டம் இடவும். கட்டாயம் தவறுகளை சுட்டவும்.
Post a Comment