திருமணம் என்றால் வெறும் ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பம் நடத்தும் நிகழ்வு மட்டும் இல்லை. அவனோடு சேர்த்து அவனது கடந்தகால வாழ்க்கையில் இருந்து அவனுடைய நிகழ்காலத்தில் இருந்து வெற்றிகரமான ஒரு எதிர்காலத்திற்கு நகர்த்திக்கொண்டு செல்வதும் தான் வாழ்க்கை என்று அப்பா அடிக்கடி சொல்வார். அப்படி செல்லும் வாழ்க்கையில் அவனது சொந்தம் பந்தம் முதல் நண்பர்கள் வரை காயமும் சாயமும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதில் தான் வாழ்க்கையில் வெற்றி இருக்கிறது என்றும் சொல்வார்.
அப்படி எழுந்த பேச்சுகளில் இருந்த ஆமோதிப்பை இவனை திருமணம் பேசும் சமயத்தில் இருந்து சாமாதானமும் சமரசமும் செய்துக்கொண்டது ஏன் என்று ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
இவர்களுக்கு ஏமாற்ற வேண்டும் என்று இருந்தால் இவனை போல இருக்கும் ஒரு பெண்ணை அல்லவா ஏமாற்றி இருக்க வேண்டும், என்னை எதற்கு இப்படி ஏமாற்றவேண்டும். அதற்கு விதியும் ஆண்டவனும் எப்படி வழி செய்யலாம்.
கதைகளிலும் கட்டுரைகளிலும் சொல்வது போல் எவன் எடுத்தற்கு எல்லாம் ஆமாம் சாமி என்று சொல்கிறார்களோ அவர்கள் சமயம் பார்த்து காலைவாரி விடுவார்கள் என்று பொதுவாக சொல்வது எவ்வளவு பெரிய உண்மையாகிவிட்டது பாருங்கள்.
திருமணத்திற்கு பிறகு வேலை போவேன், நீ கட்டாயம் வேலைக்கு போகனும் அது தான் எனது எதிர்பார்ப்பும் கூட.
என்னை விட குறைந்த சம்பளம் வாங்கும் நீங்கள் நாளை இது பற்றி பேச்சு எழுந்தால், அப்படி நான் என்றைகு கேட்கிறோனோ அன்றைகே நீ என்ன முடிவிற்கு வருகிறாயோ அது எதுவாக இருந்தாலும் எனக்கு சம்மதம் அதற்காக ஏதாவது தேதியிடா வெற்று பத்திரத்தில் கையெழுத்து வேண்டும் என்றாலும் இப்போதே போட்டு கொடுக்கிறேன்.
எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு அதில் ஆண்களும் உண்டு, திருமணத்திற்கு பிறகு அந்த நட்பு தொடரவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். எனக்கு எப்படி என்னுடைய நண்பர்களோ அதே போல் உனக்கு உன்னுடைய நண்பர்கள். என்னுடைய நட்பையும் அதே போல் நீ எடுத்துகொள்ள வேண்டும்.
வேலையில் மேலும் மேல போகனும், எவ்வளவு சீக்கிரம் அந்த இலக்கை அடையமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடையனும். அதுக்கு நிறைய படிக்கனும், பல workshop, Training எல்லம் இருக்குமே. என்னால எந்த முட்டுக்கட்டையும் இருக்காது பதிலா என்னால என்ன செய்ய முடியுமோ அவைகளை கட்டாயம் செய்வேன். எனக்கு அந்த மாதிரியான ஆசையெல்லாம் ஒன்றும் இல்லாததால் வீட்டுக்குள் போட்டியை நீ உணர வாய்பே இருக்காது.
குழந்தை குட்டி என்று ஆகிவிட்டால் பின்னாளில் இவைகளை எல்லாம் என்னால் சாதிக்கமுடியாது. உன்னுடைய சம்மதம் இல்லாமல் எதுவும் நடக்காது என்னை நம்பு.
திருமணத்திற்கு பின் என்னுடைய சம்பள பணம் எனது வீட்டிற்கு தேவைபடின் அனுப்புவேன், அது உன்னுடைய பணம் அதை எப்படி வேண்டும் என்றாலும் செலவு செய்ய உனக்கு உரிமை உண்டு. அது மட்டும் இல்லை, நமது குடும்ப செலவு முழுதும் என்னுடையதாக இருக்கும். உன்னுடைய பணத்தை உனது எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றதே எனது விருப்பம்.
திருமணத்திற்கு பிறகு கூட்டு குடும்பம் எல்லாம் சரியாக வராது, நீயும் வேலை பார்க்கிற நானும் வேலை பார்க்கிறேன் எப்படியும் எனது ஊரில் நானோ நீயோ வாங்கும் சம்பளத்திற்கு அந்த ஊரில் வேலை இல்லை. ஆகவே கூட்டு குடும்பம் என்ற சந்தர்பமே இருக்க போவது இல்லை. அப்படி ஒரு சந்தர்பம் வரும்பட்சத்தில் எனது வீடு உனது வீட்டில் உள்ள அத்தனை சுதந்திரமும் உள்ளதாக இருக்கும். அப்படி இல்லை என்று நீ நினைத்தால் முன்னமே சொன்னது போல் நீ எடுக்கும் முடிவுக்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன்.
எனக்கு அவ்வளவாக சமைக்க தெரியாது கற்றுக்கொள்ளலாம் என்றால் அம்மா போடி போய் வேலைய பாரு என்று அனுப்பிவிட்டார்கள். ஆனால் நன்றாக சமைக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு. சரியாகவர கொஞ்ச நாள் ஆகலாம்...... அதை எல்லாம் பற்றி கவலைபடாதே. இருக்கவே இருக்கு அமெரிக்க காலை சிற்றுண்டி, மதியம் மற்றும் இரவு உணவு மட்டும் தான்.
மதியம் எப்படியும் வேலை பார்க்கும் இடத்தில் கிடைக்கும் சூடான உணவை இப்போதைக்கு சாப்பிடுவோம். மாலையில் நேரம் ஆகும் நாட்களில் வெளியில் சாப்பிடுவோம், வேண்டும் என்றால் வாரக்கடைசியில் ஏதாவது சமைத்துக்கொள்வோம்.
பணம் நிறைய செலவாகுமே, வீட்டில் சமைக்கவும் நேரம் ஆகுமே, நீ மட்டும் காலையில் எழுந்து சமைத்துவிட்டு வேலைக்கு போகனுமா, என்னால அவ்வளவு சீக்கிரம் எழுந்து சமைக்கமுடியாது ஆகவே நீ சமைக்கனும்னு நான் எதிர்பார்க்க மாட்டேன்....
இப்படி எல்லாத்தையுமே விட்டுக்கொடுத்தா பிறகு உங்களுக்குன்னு என்ன தான் கேட்பீங்க உங்க பேச்சு கொஞ்சம் பயத்தை கொடுக்குது. இது எல்லாத்தையும் விட்டுக்கொடுத்தா நீ கிடைப்பாய் என்றால் உனக்காக கட்டாயம் விட்டுக்கொடுப்பதில் எனக்கு சந்தோசமே.....
அப்படி என்ன என்னை உங்களுக்கு பிடிச்சு இருக்கு, சொல்ல தெரியல ஆனா உன்னை விட்டா இவ்வளவு அமைப்பா ஒரு பெண் கிடைபாளா என்று தெரியவில்லை.
அப்போ நான் கிடைகிலனா என்ன செய்வீங் செத்துடுவீங்களா, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. என்ன இது வரைக்கும் திருமணம் குடும்பம் என்று சிந்தித்தது இல்லை. முதல் முதலா உன்னோட படத்தை காட்டி வீட்டில் பேசினார்கள், அது வரை பிடிப்பே இல்லாமல் இருந்த எனக்கு உன் படத்தை பார்த்ததும் மனதில் ஒரு பளீச்சு, பிறகு நேரில் பார்த்ததும் அது பளீச் தீர்மானமா மனதில் தோன்றியது. அதனால தான் இவ்வளவும் பேசுறேன். என்ன நீ கிடைகலனா நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான் இப்படியே இருந்திருவேன்.
ஏன் என்னை விட்டா வேறு யாரும் பெண்ணே இல்லையா உலகில், எல்லோரும் நீயும் ஒன்னா. நான் விரும்புவது உன்னை தான், பெண்ணை இல்லை எல்லாவும் பொருந்திய குறையும் நிறையும் நிறைந்த உன்னை தானே தவிர பெண்மைக்கும் அழக்குக்கும் மட்டும் இல்லை. அது மட்டும் இல்லை உன்னுடைய அழகு வெறும் புரத்தோற்றமாக நான் பார்க்கவில்லை. அது உனது அக அழகின் முழுமையாக தான் எனக்கு தெரிகிறது.
இப்படி வார்த்தைக்கு வார்த்தை வாயை அடைத்து சம்மதிக்க வைத்துவிட்டு இன்றைகு இப்படி பேச இவனுக்கு என்ன தைரியம் இருக்கனும். அதுவும் என்னால எதுவும் செய்யமுடியாதுன்னு நினைப்பா இல்லை செய்ய மாட்டேன்னு தைரியமா......
தொடரும்......
இவன் எல்லாம் ஒரு மனிதனா இல்லை சுயநல மிருகமா
என்னை ஏன் அவனுக்கு பிடிக்கவில்லை.......