அந்த கோவிலின் ஆகம விதிகளையும் நம்பிக்கையும் பின்பற்றி தான் காரியங்களை நடத்த வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள்.
நாளைக்கு எங்கள் மறை கணவன் இறந்த பின் மனைவியை சதியில் தள்ளி கொல்ல சொல்கிறது எங்கள் இந்துமத மறை ஆனால் அதை கொலை என்கின்றார்கள் இவர்கள் என்று ஒரு வழக்கு தொடுப்பார்கள்.
அதற்கும் இதே போல் மத நம்பிக்கை சார்ந்த பிரச்சனை, ஆகையால் அன்றைக்கு ஆகம விதிகளை பின்பற்றியது போல் இப்போது இந்துமத மறை நூலில் சொன்னது போலவும் காலம் காலமாக உள்ள பழக்கதின் அடிப்படையிலும் அந்த பெண்களை சதியில் தள்ளி உயிருடன் துடிக்க துடிக்க எரித்து கொன்றது இந்து மத மறைகளின் படி கொலை இல்லை என்று தீர்ப்பு அளிப்பார்கள்.
என்ன அன்றைக்கு கொல்லப்பட போவது காலம் காலமாக இதை சொல்லியும் வலியுறுத்தி வரும் மக்களாக இருக்காது, மாறாக எதிர்க்க திராணியில்ல ஏழைகளாகவும் ஒதுக்கப்பட்டவர்களின் பெண்களை மதகாவலர்களாக சொல்லிக்கொள்பவர்கள் செய்யும் கொலையாக இருக்கும்.
அப்படி கொல்லப்பட்டவர்களாக மக்கள் இயக்கங்கள் நடத்தப்படும் வழக்கு மாவட்டம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை வந்து போக அனேகமாக அதற்குள் பாதிக்கப்பட்ட மக்கள் மறைத்தே போவார்கள்.
60 வருட சுதந்திர இந்தியாவை அதுவும் குறிப்பாக தமிழகத்தை ஒரு 100 ஆண்டுகாலத்திற்கு பின் தள்ளிய தீர்ப்பு.

2 comments:
இந்தத் தீர்ப்புப் பற்றிய தங்களின் மாறுபட்ட சிந்தனை அருமை சகோதரி. நான் வேறொரு கோணத்தில் எழுதியிருக்கிறேன். எனினும் உங்கள் பதிவு பாராட்டத் தக்கதே. நன்றி
சகோதரர் முத்து நிலவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களது பதிவை படித்த பிறகு எழுதினது தான் எனது பதிவு. இது மட்டும் இல்லை பழங்கால பழக்கம் என்று அந்த கால அடிமை தன்மை அனைத்தையும் கட்டி எழுப்ப இத்த தீர்பு ஊற்றுகண்ணாக அமைய போவது உறுதி ஒரு சாராருக்கு மட்டும்.
உதாரணமாக மஞ்சு விரட்டுதல் காலம் காலமாக நடந்துவரும் வீர விளையாட்டு என்று சொன்னால் நீங்கள் என்ன விலங்கினமா என்று கேட்பார்கள்.
நாட்டார் வழிபாட்டு தளங்களில் ஆடு மாடு கோழி பலியிடுவதையும் இதே விதமாக தடை விதித்தபோது இவைகளும் நீண்ட கால நம்பிக்கை என்று ஒருவரும் வாதடக்கூட இல்லையே.... போன்றவைகளின் மீது கொண்ட கோபத்தின் வெளிபாடு இந்த இடுக்கை.......
எல்லோருக்கும் ஐத்து விரல்கள் தானே இருக்கிறது என்று சொன்னால், ஐந்து விரலும் ஒரே மாதிரியா இருக்கிறது என்று சொல்லும் இந்த குறுகிய பார்வையாளர்கள் ஒழியும் வரை இந்தியாவில் ஞாயம் என்ற வார்த்தையும் அதை தொடர்புடைய செயல்கள் அனைத்தும் எழுத்துவடிவில் புத்தகங்கள் வடிவில் மட்டுமே இருக்கும்.
Post a Comment