என்ன நடக்கிறது இந்தியாவில், இருப்பது இந்தியாவிலா அல்லது பாக்கிஸ்தானிலா!. காவிரியில் நீர் திறந்துவிட சொல்லி உச்ச நீதிமன்றம் கர்னாடகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் கர்னாடகமோ ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கலாகாது என்று அதன் முதல்வரும், நீதி மன்றத்தின் உத்தரவிக்கு அடிபணியக்கூடாது என்று அதன் எதிர்கட்சி தலைவர்கள் சொன்னார்கள் சொன்ன படியே நடந்தும் வருகிறார்கள் ஆண்டாண்டு காலமாக.
டான்சி நில வழக்கு ஊழலிழ் உச்ச நீதிமன்றம், அப்போதைய முதல்வரை மன்னித்து அவர் செய்த தவறுக்கு திருந்துதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது, அத்தனை சாட்சியங்களும் முதல்வருகு எதிராக நிரூபிக்கபட்ட பிறகு.
ஒரே கையேழுத்தில் ஒரு இலச்சத்திற்கும் மேலானா அரசு ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பட்ட உத்தரவினை தடை செய்யவேண்டும் என்று எதிர்கட்சிகள் நடையாய் நடந்தும், சிதம்பரமும், அவரது துணைவியார் நளினி சிதம்பரமும் கிட்டதட்ட 2 வாரங்க்களுக்கு மேல் வாதாடியும் எப்படி தீர்ப்பு அமையுமோ என்று ஏங்கி தவித்தபின் மறுபரீசீலனை செய்ய அரசை கேட்டுக்கொண்டது உச்ச நீதிமன்றம்.
பம்பாய் தொடர் வெடிகுண்டு வழக்கில் தடா நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவுடன் சிறையில் அடக்கபடும் முன்னரே உச்ச நீதிமன்றத்தில் அவனுக்கு பிணையவிடுப்பு அதுவும் எதற்கு தண்டனையின் நகல் அவரது மொழியில் மொழிபெயர்த்து கொடுக்க அவருக்கு தீர்ப்பு என்ன என்று விளங்கவில்லையாம், ஐயோ பாவம்.
பாபரின் மசூதி இடிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் முடிந்தும் அந்த வழக்கை விசாரிக்கவும் இல்லை, மேலும் அந்த இடிப்பு யாரால் நடத்தப்பட்டது என்று அமெரிக்கவில் உள்ளவனுக்கு கூட தெரியும் ஆனால் உச்ச நீதி மன்றத்துக்கு தெரியாமல் போய்விட்டது பாவம்.
ஆயிரம் ஆயிரம் கோடியாக பொதுமக்களின் பணத்திலே ஒரு பண சாம்ராஜியம் அமைத்தான் அர்சத்து மேத்தா, அதை விசாரித்த நீதிமன்றம் சாட்சிகள் சரிவரை நிரூப்பிக்க முடியாததால் அவனையும் விடுவித்தது.
முத்திரைத்தாள் மோசடி மன்னன் வழக்கு இன்னமும் ஆண்டாண்டு காலமாக விசாரணையிலே உள்ளது, வழக்கை விசாரிக்கவும் இல்லை ஏன் என்றும் கேட்க்கவும் இல்லை.
முன்னால் பிரதமர் பி வி நரசிம்மா ராவ் மீது எண்ணிகை தெரியாத அளவிற்கு வழக்குகள் இருந்தது. வழக்கு தொடுத்தவும் இறந்து அவரும் இறந்த பிறகும் இன்னமும் அந்த வழக்குகள் நிலுவையிலே தான் உள்ளது.
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் அத்தனை உண்டு......
ஆனால் இவைகளுக்கு எல்லாம் கவலை பட்டாத நீதிமன்றம் தமிழகத்தில் நடந்த கடையடைப்பை நடத்தக்கூடாது என்று இரவோடு இரவாக ஒரு தீர்ப்பும், அதோடு மட்டும் நிர்க்காமல் அடுத்த நாள் கடையடைபு நடந்தது என்று இவர்கள் சொல்ல, நீதிமன்றமோ ஆட்சியை கலைத்தால் என்ன என்று கேட்கிறது. அதன் கேள்விகள் தமிழகத்திலே சட்டதின் ஆட்சிதான் நடக்கிறதா என்ற விகடம் வேறு.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி பார்த்தால் தமிழகம் தவிர வேறு எந்த மாநிலம் எதும் செய்யலாம் தவறில்லை ஆனால் தமிழகம் செய்தால் தவறு அதும் கருணாநிதி அரசு செய்தால் தவறு ஆட்சியை கலைக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியின் போது எது நடந்தாலும் நிலத்தை திருப்பிக்கொடுதால் மட்டும் போதும்..............
திரைபடங்களில் காவலர்களையும், நீதிபதிகளையும் பல படங்களில் கோமாளிகளாக காட்டும் போது கோபமாக வரும், ஆனால் அவர்கள் காட்டுவது சரிதான் போல, இந்த் தீர்ப்பை பார்க்கும் போது.
ஆமாம் மக்களின் தேவைக்காக நீதிமன்றம் செல்லாத அதிமுக இந்த கடவுள் சங்கதியில் மட்டும் தட்டவேண்டிய இடம் பார்த்து தட்டி காரியம் சாதிக்கும் மாயம் என்ன கடவுள் தான் தெரிவிக்க வேண்டும்.
Tuesday, October 2, 2007
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
That is true
மனுநீதிமன்றம் என்ன உங்க பாட்டன் வீட்டு சொத்தா. நீங்க சொல்லும் எல்லா caseகளிலும் தீர்ப்பு வழங்க. அவாளுக்கு நிறைய வேலை இருக்கின்றது. காமகேடி வழக்கு ஏன்றால் super speedல் தீர்ப்பு வழங்குவா. இட ஒ - இந்த வார்த்தையை finish செய்வதற்கு முன் பாய்ந்து வந்து தடை வழங்குவா. அவாளை தப்பு தப்பாக பேஷ கூடாது.
சுருக்கமாக தொகுக்கப்பட்ட நல்ல பதிவு. இருப்பது இந்தியா என்பதால்தான் இது.
well said
காவல்துறை, அரசியல் மற்றும் பத்திரிக்கைகள் மீதும் மக்களுக்கு உள்ள நம்பிக்கை அற்றுவிட்டது இந்த அழகில் இப்படி ஒரு தீர்ப்பு இத்தனை இத்தனை தடித்த வார்த்தைகளைக்கொண்டு. இப்படி எல்லாம் பேச நீதிபதிகளுக்கு எப்படி தான் மனம் வருகிறதோ. இதில் நீதிமன்றத்தை பற்றியும், தீர்ப்பை பற்றியும் விமர்சணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு வேறு.
அதிமுக செய்தது என்னவோ பச்சை துரோகம், ஜெயலலிதா மறுபடியும் ஒருமுறை ஆள்காட்டி விரலை சுழற்றி தருமத்தின் வாழ்வு தன்னை சூது கொள்ளும் பின் தர்மம் வெல்லும் என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை. இதில் நடிகர்கள் அடிக்கும் கூத்து தாங்கமுடியவில்லை.
தமிழகத்தின் திட்டம் முடக்கப்பட்டுவிட்டது, தமிழகம் முன்னேறம் அடைய முடியாமல் முடக்கப்பட்டதை இவர்கள் எல்லாம் வெற்றி என்று சென்னால் அதன் பெருள் எங்களுக்கு விளங்கவில்லை தயவு செய்து தெளிவுபடுத்தவும்.
சரியான நெத்தியடி கேள்விகள். பதில் சொல்லத்தான் ஆட்கள் இல்லை.
இந்தியாவினுள்தான் எத்தனை விதமான இந்தியா? வாழ்கையை வெறுப்படைய வைக்கும் நூதன இந்தியா!
தற்கொலையை நோக்கிச் செல்லும் இந்தியா. அழிவை தேடும் இந்தியா.
இந்து ஆதிக்கர்கள் வெறியாட்டம் போடும் இந்தியா.
மனது தளர விடோம்!
பதிவிற்கு மிக்க நன்றி.
பண்டாரப் பரதேசிகளை உச்ச நீதி மன்றத்தில் உட்காரவைத்து விடுவதற்கு அவர்களே வழி வகுத்து விடுகிறார்கள்.இட ஒதுக்கீட்டில் உள்ள பரதேசியும்,இந்த வழக்கில் உள்ள பரதேசியும் உச்ச நீதி மன்றம் அவர்கள் பாட்டன் வீடு போலவும்,அரசு வழக்கறிஞர்களும் அரசும் அவர்கள் அடிமைகள் போலவும் நடந்து கொண்டு பின் தவறு என்று தெரிந்ததும் மரியாதையாக மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளியே செல்வதில்லை.மக்கள் மன்றமாம் பாராளுமன்றம் இவர்களை இம்பீச் செய்து கழுத்தில் கை வைக்க வேண்டும்.
நான் அவரது தீவிர பக்தன் அதனால் அவரை என்னால் விசாரிக்க முடியாது என்று உரைத்த அந்த நல்ல உள்ளம் வாழ்க. இப்படி சொந்த விருப்பு வெறுப்புக்கா நீதியை கொலை செய்யாமல் இருந்தமைக்கு அவரை பாராட்டியே ஆகவேண்டும்.
This article is having biased view for the Hinduism Contempt party DMK.
Any Band is illegal in India, but you need to file a petition agains the Bandh for the Supreme Court to hear the case.
Tamil Nadu is full of anti-brahministic feelings and a responsible CM of the TN cannot target Lord Ram and hurt the sentiments of millions of Hindus.
We brahmins are migrating to the Americas due to the atrocities of the DMK,DK parties of Tamil Nadu.
Jai Sri Ram!!!!
வாங்க அனானியாரே,
இந்த வழக்கை இரவோடு இரவாக விசாரிக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது என்று தான் கேட்டோமே தவிர மற்றபடி ஏதும் இல்லை. இனம், மதம் என்றெல்லாம் இல்லவே இல்லை....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment