Saturday, October 27, 2007

ஐன்சுடைனின் கடவுள் பற்றிய கருத்து.

ஐன்சுடைன் ஒரு மிக சிறந்த அறிவியலர், அவரது கருத்துகளை அவ்வப்போது எடுத்து உதாரணமாக ஆளுவது வழமை. அப்படி அவரது கடவுள் நம்பிக்கையை பற்றி பேசும் போது ஆத்திகர்களால் சொல்லப் பட்டு வந்த கருத்துகளுக்கு முற்றிலும் மாறாக இருக்கும் ஐன்சுடைனது கருத்துகளை காண நேர்ந்தது. அதை வலை மக்களோடு பகிர்ந்து கொள்ளும் பொருட்டு பதிவிடுகிறேன். இனி அவரது கருத்துகள்......

திரும்ப திரும்ப என்னுடைய மத நம்பிக்கையை பற்றி தவறாகவே படித்து வருகிறீர்கள், அது ஒரு பொய். கடவுள் ஒரு நபராக இருக்கும் சாத்தியம் இல்லை என்று மறுப்புக்கு இடம் இல்லாமல் தெரிவித்திருக்கிறேன். எனக்குள் இருக்கும் சில உணர்வுகளை மத உணர்வுகள் என்று சொன்னால் அது அறிவியலால் விளக்க முடியாமல் இருக்கும் வியத்தகு உலகின் அமைப்பு என்று சொல்லாம் என்று உரைகிறார். மதம் இல்லா அறிவியல் ஒரு முடம் என்றும் அறிவியல் இல்லா மதம் ஒரு குருடு என்றும் சொன்னவரும் அவரே.

இப்படி சொல்லுவதால் அவர் சொல்லுவதை அவரே மறுக்கிறார் என்று பொருளா? இந்த இரண்டு வாங்கியங்களையும் எடுத்துக்கொண்டு இரு சாராரும், அவர் உண்டு என்று தான் சொல்லுகிறார், இல்லை என்று தான் சொல்கிறார் என்று வாதத்திற்கு எடுத்து கொள்ளலாமா என்றாலும் இல்லை. மதம் என்ற வார்த்தைக்கு இது வரையில் சொல்லிவந்த பொருள் இல்லாமல், ஒரு புதிய விளக்கத்தை கொடுக்கிறார். இயற்கைக்கு அப்பாற்பட்டதாக சொல்லப்பட்டு வரும் மதமும் ஐன்சுடைன் சொல்லும் மதம் ஒன்று அல்ல. இதை தான் இயற்கைக்கு அப்பாற்பட்டதாக சொல்லப்படும் கடவுள் மயக்கத்தை விமர்சனம் செய்யும் பொருட்டு மேலே சொன்ன வாசகங்களில் ஐன்சுடைன் விளக்குகிறார்.

ஒரு நபருக்கு இருப்பதை போல இயற்கைக்கு ஒரு நோக்கமோ அல்லது ஒரு இலக்கோ இருக்க வாய்பு இல்லை. எனக்கு தெரிந்த வரை இயற்கையை முழுமயாக நம்மால் விளக்கி சொல்ல முடியவில்லை அதனால் இயற்கையையும் கட்டுப்படுத்தும் ஒரு நபரை மனம் சிந்திப்பது இயல்பு. அல்லது இயற்கையே அப்படி எந்த ஒரு வகைதொகைக்கும் அப்பாற்பட்ட ஒரு நபராக சிந்திப்பதும் இயல்பு. இப்படி எல்லாம் சிந்திபது ஒரு மத நம்பிக்கை, இந்த நம்பிக்கையில் புனிதம் என்ற சொல்லுக்கு எந்த வேலையும் இல்லை. இது தான் எனது மத நம்பிக்கை, ஆத்திகரின் வழியில் சொன்னால் நான் ஒரு மத நம்பிக்கை அற்றவன். சுருக்கமாக சொன்னால் ஆத்திகரின் கடவுள் என்ற ஒரு எண்ணதிற்கும் என்னக்கும் எப்பவுமே சம்பந்தம் இருந்தது இல்லை.

இப்படி கருத்துகளை ஐன்சுடைன் அமெரிக்காவில் குடியேறிய பிறகு தெரிவித்திருந்தார். அதற்கு ஒரு ரோமன் கத்தோலிக வழக்குரைஞர் உலக ஆத்தீக மக்களின் சார்பாக கீழ்கண்ட கடிதத்தை எழுதுகிறார்.

கடவுளை ஒரு நபராக கருதவோ அல்லது உருவக படுத்தவோ முடியாது என்ற உங்களுது கருத்துக்கு மிகவும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துகொள்கின்றோம். இட்லர் செர்மேனியில் இருந்து உன்னையும் உனது கருத்தகளையும் யூதர்களையும் வெளியேற்றியது ஏன் என்று இந்த 10 ஆண்டுகளாக விடை தேடிய மக்களுக்கு, இட்லரின் செயக்கு காரணம் இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு இடம் இல்லாமல் போகவில்லை. இந்த கருத்தால் அனைத்து அமெரிக்க மக்களின் வெறுப்பையும் கொண்ட உனது பேச்சுரிமையை பறிக்கப்பட வேண்டும் என்று எழுதினார்.

பாவம் ஐன்சுடைன், இந்த கடிதத்தை படித்த அவரின் மனது அமெரிக்கவில் குடியேறியமைக்கு எவ்வளவு வருந்தி இருக்குமே கடவுளுக்கே வெளிச்சம். ஐன்சுடைனுக்கே இந்த கதி என்றால், பெரியாரின் வழித்தோன்றல்களை வலையில் விமர்சிக்கும் விமர்சனம் எல்லாம் சாதாரணமே.

6 comments:

Anonymous said...

மதம் இல்லா அறிவியல் ஒரு முடம் என்றும் அறிவியல் இல்லா மதம் ஒரு குருடு என்றும் விவேகானந்தரும் சொல்லியிருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

யார் சொன்னால் என்ன? இன்றைய பகுத்தறிவாளர்கள் என்ற பெயரில் பெரியாரிசம் பேசிக் கொண்டு திரிபவர்கள் இதை ஏற்கவா போகிறார்கள்? அல்லது ஒளியிழந்த நம்பிக்கைகள் தான் மாறப் போகின்றனவா?

')) said...

நவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, நம்பிக்கை மிகவும் முக்கியம். மறைந்தது போல் தோன்றினாலும் உண்மையில் அது மறையவில்லை பனி விலகியதும் மீண்டும் தெரிவது போல் தெரியும்.

Anonymous said...

உங்கள் நம்பிக்கை இதுவானால் சந்தோசமே..

உங்களுக்கான எனது பதிலுரையை எனது வலைப்பூவில் படித்து விட்டீர்களா?

இல்லையெனில் அதற்கான சுட்டி இதோ,

http://navanulagam.blogspot.com/2007/10/blog-post_10.html

')) said...

உங்களின் பதிலை பார்த்தேன், விடை தெரியாவைகளின் மீது பயம் பிறப்பதும், அதன் பால் எண்ணிக்கையில் அடங்கா கர்பனைகள் உருவாகுவதும் இயற்கையே. அப்படி தோன்றும் கர்பனைகளால் எண்ணற்ற கவிதைகள் காதலின் மேல் படைக்கப்படுவது போல் படைக்கப்படுவதும் இயற்கையே. அந்த கர்பனைகளில் எத்தனை சதவிகிதம் உண்மை என்று பார்த்தால், மனிதனால் இயற்கையை கட்டுப்படுத்த முடியாது வேண்டுமானால் தன்னை காத்துக்கொள்ள மட்டுமே முடியும் என்று இன்று வரை அறிவியல் தெளிவாக நிறுபித்து வருகிறது. இதைத்தான் ஐன்சுடைனும் தனது வான்னியங்களில் கூறுகிறார். எனது கருத்தும் அதுவே. இயற்கையை யாரும் இது வரையில் கட்டுப்படுத்தியதும் இல்லை, கட்டுப்படுத்த போவதும் இல்லை. வேண்டுமானால் இயற்கையின் போக்கையும் நிகழ்வையும் மாற்றலாம். மற்ற படி இதில் ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை.

')) said...

சில வெங்காயங்கள் மதம் என்றால் இந்து மதம் மட்டும் என்று எண்கணிக்கொண்டு இந்து மதத்தை மாத்திரம் விமர்சிக்கின்றார்கள்.

')) said...

வாங்க புள்ளிராஜா, அனேகமாக அது அவர்களது மதம் ஆனதால் உரிமையோடு கண்டித்து இருப்பார்கள் போலும். அவர்களுக்கு தெரியாதா என்ன............