Saturday, October 20, 2007
கடவுள் உண்டு இல்லை மனது, கணக்கு இடிக்குதே.
கடவுள் இல்லை என்று சொன்னால் நம்பிக்கை கொண்டோரின் மனது புண்ணாகும் போது, கடவுள் உண்டு என்று சொல்வதோடு மட்டும் இல்லாமல் இன்ன பிற காரியங்களை திருப்பி திருப்பி செய்து கொண்டும் இருந்தால் கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களின் மனது புண்படாதா. அல்லது அவர்களுக்கு இருப்பது மனதே இல்லையா. கணக்கு எங்கோ இடிக்கிறதே, சும்மா ஒரு வாதத்திற்கு கேட்போமே.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//"கடவுள் உண்டு இல்லை மனது, கணக்கு இடிக்குதே."//
கடவுள் நம்பிக்கை என்று சொல்வதே தவறு, பிறமதத்து நம்பிக்கைகளை எந்த மதத்துக்கார்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே இருக்கும் நம்பிக்கைகள் மதநம்பிக்கைகள் தான். கடவுள் இல்லை என்பவர், ஏன் இல்லாத கடவுளை இடித்துரைக்கப் போகிறார்கள் ? அவர்கள் எதிர்பதெல்லாம் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகளையே !
:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி கண்ணன். இன்றைகு பொதுவாக சொல்லப்படும் கருத்து இது, அவருக்கு வேண்டுமானால் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் அதற்காக எங்களின் மனது புண்படும் படியாக இப்படியா பேசுவது என்று. கரண்தர்பார் இதற்கு மேல் ஒரு படி போய் ஒரு முதல்வர் எப்படி இப்படி ஒரு பொறுபில்லா ( கடவுளை நம்பிக்கையில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் செய்யலாம் அனால், நம்பிக்கை இல்லாதோர் எப்படி ) அறிக்கைவிடலாம் என்று கேட்கிறார் மேலும் வட நாட்டினரின் மனதை புண்படுத்திவிட்டார் என்று சொல்கிறார். அவரிடம் கேட்கவேண்டும் இந்த கேள்வியை.
Post a Comment