Friday, August 21, 2015

7000 மாணவர்கள் சேர்ந்து அதகளபடுத்திய ஊர் - sororityயும் - fraternityயும்

உலக அளவில் 10வது தரத்தில் இருக்கும் ஒரு அமெரிக்க பல்கலைகழகம் இருக்கும் ஊரில் 2015 - 2016 ஆம் ஆண்டுக்கான கல்லூரி கல்வியாண்டு 08/20/2015ல் துவங்கியது. வகுப்புக்கள் 08/24/2015ல் இருந்து துவங்குகிறது. புதிதாக கல்லூரிக்கு வந்து இருக்கும் மாணவர்களை அவர்களது துறைகளை சேர்ந்த மாணவர்கள் அறிமுகபடுத்தும் விழா நேற்று நடந்தது.

இந்த 7000 மாணவர்களில் சுமார் 3000 மாணவர்கள் இந்த அறிமுக உபச்சாரவிழாகளில் கலந்துகொண்டனர்.

துறைவாரியாகவும், குழுவாரியாகவும் நடந்த உபசரிப்பு என்றதால், ஊரின் ஒரு பகுதியில் பல்வேறு இடங்களாக பிரித்து கொண்டாடினார்கள்.

மாலை 5:00க்கு துவங்கிய கொண்டாட்டங்கள் இரவி 2:00 வரை நீடித்தது. 2:00க்கு மேல் வீடுகளில் கொண்டாடியவர்கள் விடிய விடிய தொடர்ந்தார்கள்.

கொண்டாடங்கள் கொண்ட தெருக்களில் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஒரு கட்டத்தில் கட்டுக்குள் வராத கூட்டங்களை காவலர்கள் புகுந்து வீட்டு போக சொல்லி அனுப்பிக்கொண்டு இருந்தார்கள்.

ஒரு சில இடங்களில் சிறு சிறு மோதல்களும் இடம் பெற்றது. இருந்தும் காவலர்கள் அழைக்கப்படவில்லை என்றதை நினைவில் கொள்ள வேண்டும்.

காவலர்களை பார்த்த மாணவர் கூட்டம் அமுக்கியே வாசித்தது. காரணம் புதிதாக ஒன்றும் சொல்ல தேவை இல்லை அவர்கள் அனேக மக்கள் நிலத்திலேயே மிதந்துக்கொண்டு இருந்தனர்.

இந்த கொண்டாட்டங்களுக்கு அழைப்பு விடுத்து இருந்த அமைப்பினர்கள், கொண்டாட்டங்கள் முடித்த கையோடு மக்களை வீட்டுக்கு வழியனுப்பிவைத்தனர்.

இத்தனை அதிக அளவில் மாணவர்கள் கூடியும் அதுவும் சரக்கு உபசரிப்பாக இருந்தும் காவலர்களை குவிக்காமலும் அடிதடியும் இல்லாமலும் சுமூகமாக நடந்தேரியதை பார்க்கும் போது மாணவர்களின் கட்டுப்பாடும், அதைவிட அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் சுதந்திரமும் நம்மை பயமுடுத்தவே செய்கின்றது.

ஒரு வேளை இப்படி ஒரு உபசரிப்பு இந்தியாவில் நடந்து இருந்தால் அனேகமாக அடிதடி கலாட்டாவாக முடிந்து தான் இருக்கும்........ அதுவும் புதிய பழைய மாணவர்கள் கூடும் இடம் என்றால்.......

0 comments: