Friday, December 4, 2009

சாருவின் இளையராசாவின் இசையை பற்றிய விமர்சனங்கள்

இந்த தலைப்பை பார்த்த உடனேயே சாருவுடன் சண்டைக்கு நிற்கிறேன் என்று சாருவின் வாசகர்கள் என்னிடம் சண்டைக்கு வரக்கூடும். அப்படி வருபவர்களுக்கு முதலிலேயே சொல்லிக்கொள்கிறேன், சாருவின் இளையராசா இசையின் சம்பந்தபட்ட விமர்சனங்கள் விமர்சனங்களையும் தாண்டி வெறுப்பை கக்கும் செயலாக இருப்பதை விளக்குவதற்கு மட்டுமே இந்த கட்டுரை. மற்றபடி சாருவின் அறிவையும் அவரது இரசனையும் நக்கல் செய்வதற்காக அல்ல.

இளையராசாவை பற்றி அவர் என்ன என்ன எல்லாம் எழுதி தூற்றியுள்ளார் என்று ஆராய்ச்சி செய்வதைவிட, உதாரணம் காட்ட அவர் கடைசியாக எழுதிய நான் கடவுள் விமர்சனத்தையே எடுத்துக்கொண்டு ஆராய்ந்தோமானால் நன்றாக தெரியும் அவரது வெறுப்பு கக்கல்.

இந்த விமர்சனத்தை துவங்கும் முன் சாரு கொடுக்கும் முன்னுரை அவருக்கு பிடிக்கவே பிடிக்காத மூவர் கூட்டணியில் உருவான படைப்பு என்றும் அதனால் அந்த பக்கம் தலை கூட வைத்து படுக்க கூடாது என்று இருந்தாகவும். ஆனால் ஞானி போட்டு கிழி கிழி என கிழித்து இருந்தால் அந்த படைப்பு அவருக்கு பிடித்து இருக்கு என்ற உந்துதலில் அவர் நான் கடவுளை பார்க்க நினைத்து பார்த்தாகவும் எழுதியுள்ளார்.

அப்படி பார்க்க துவங்கிய 5 நிமிடங்களிலேயே அவருக்கு தெரிந்துவிட்டதான் ஒரு உலக தரமான படத்தை பார்கிறோம் என்று. ஆனால் அந்த உலக தரமான படத்தின் இசை மட்டும் மட்டமாக இருப்பதாகக்கூட இல்லை, ஏதோ ஒரு கோப்புகளில் எழுதிவைத்து இருக்கு இசையை எடுத்து சம்பந்தமே இல்லாமல் அங்காங்கே சொருகி இது தான் இந்த படத்திற்கு இசை என்று இராசா கொடுத்துள்ளதாக மனதார எழுதியுள்ளார் சாரு.

இசை எப்படி அமைக்கவேண்டும் தெரியுமா என்றும் அவர் அந்த கட்டுரையில் அழகாக குறிப்பிடுகிறார், இப்படி சிலம் டாக் மில்லினர் படத்தில் கண்களை பறிக்கும் அந்த சமயத்தில் அந்த ஏழை சிறுவனை மறுபடியும் ஒரு முறை பாடு என்று சொல்லி பாடும் பாட்டையும் அந்த சமயத்தில் பாடும் பொழுது அந்த பாடலில் பாட்டை தவிர வேறு ஒன்றும் இல்லை அவ்வளவு உண்மையாக அந்த பாடல் அமைததினால் தான் அது உலக தரம் வாய்ந்தது என்றும் எழுதியுள்ளார்.

நல்ல விமர்சனமாக அதை எடுத்து கொள்ளாவிட்டாலும், அந்த காட்சி அனைவரது மனதையும் பிசைந்து எடுத்த காட்சி என்றதை மறுப்பதற்கு இல்லை. அது சாருவையும் கலக்கியது போலும், அது தான் பதிவர் முதல் இலக்கியவாதிகள் வரை அந்த ஒரு காட்சியின் இசையை மட்டுமே அனைவரும் காட்டாக காட்டி விமர்சனங்கள் எழுதினார்கள் போலும்.

அந்த காட்சி மக்களின் மனதை உருக்கியது இசையா அல்லது அந்த ஈனத்தணமான செயலா என்று பார்த்தால் அந்த செயல்தான். இசை அங்கே நடந்த நிகழ்வை இன்னமும் இணக்கமாக காட்ட உதவி இருக்குமே தவிர, அந்த இசைமட்டுமே காட்சியாக அமைய வாய்ப்பே இல்லை, இதிலே ஒருவருக்கும் மறுப்பு இருக்காது.

ஒருவேளை அந்த காட்சியில் இசை இல்லாமல் இருந்திருந்தால், அந்த அமைதி இன்னமும் கோடூரமாக அந்த காட்சியை காட்டி இருக்குமே தவிர, காட்சியை பலவீனபடுத்தி இருக்காது. ஏன் என்றால் அந்த காட்சியின் கொடூரம் அப்படி.

ஏழை சிறுவன் வாழவே வழி தெரியாமல் இருக்கும் ஒருவனை பிடித்து வந்து வாழ வழியமைத்து கொடுப்பதாக சொல்லி நயவஞ்சகமாக பேசி அழைத்து வந்து, அவனது குரலுக்கு நல்ல வசூல் கிடைக்கும் என்று அறிந்து கொண்ட பிறகு. அந்த மகசூலை பெறுக்க குருடாக ஆக்கினால் இன்னமும் வசூல் கூடும் என்று நன்றாக இருக்கும் அந்த கண்களை பறிக்கும் செயலை பார்க்கும் போது, அவரவருக்கு கோபமும் ஆத்திரமும் பெருக்கெடுத்துக்கொண்டு தான் வரும்.

இந்த மாதிரி எழுத்துகளில் படிக்கும் போதே மனதை பிசைந்து எடுக்கும் சம்பவந்தை தான் காட்சியாக படமாக்கி இருந்தார்கள், அந்த உணர்வுகளை மனதில் கொண்டுவர சம்பவ கோர்வைகளும் சம்பவங்களும் மட்டுமே போதும் என்று அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.

பின் அங்கே வரும் இசைக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் என்று பார்க்க வேண்டும். காரணம் வாசகர்களும் சரி, படத்தை பார்ப்பவர்களுக்கும் சரி, அவர்களை அதிகம் பாத்தித்த சம்பவங்களை வைத்து விளக்கம் சொன்னால் தான் அவர்களது கருத்துகளையும் தாண்டி நமது கருத்துகளை அவர்களுக்குள் திணிக்க முடியும். இது படைப்புலகில் இருக்கும் அனைவரும் கையாளும் ஒரு உத்தி. இதைத்தான் இந்த படத்தை பற்றி மிகவும் நல்லவிதமாக விமர்சித்த அனைவரும் கையாண்ட ஒரு உத்தி. இதற்கு சாருவும் விதிவிலக்கல்ல என்று அவரே அவரது விமர்சனம் கொண்டு விளக்கியுள்ளார்.

இந்த விமர்சனம் தவறு என்று நான் சொல்லவில்லை, ஆனால் அந்த இசையமைப்பு எவ்வளவு உண்மையாக இருந்தது என்றும், காட்டும் காட்சிக்கும் காட்சியில் வரும் இடத்திற்கும் மிகையில்லாமல் இயல்பாக இசை இருக்கவேண்டுமே தவிர அங்கே ஒரு பெரிய சிம்பொனி இசை வந்து போவதை யாரும் சிறந்த இசை அமைப்பு என்று சொல்லமாட்டார்கள் என்றும் சொல்வார்.

இதை படிக்கும் போது வாசகர்களும் இந்த கருத்தை அப்படியே ஒத்துக்கொள்வார்கள். அது தானே அப்படி தான் இருக்க வேண்டும், அதை விடுத்து ஒரு பெரிய இசை கச்சேரியே அல்லவா நடந்தது என்று கேட்பார்கள் தான்.

இங்கே தான் சாருவின் உத்தியை நாம் உற்று நோக்க வேண்டும். சரி அந்த காட்சியில் மிகையில்லாமல் இசை இருந்தது தான் சாரு, ஆனால் அதே அந்த இரண்டு சிறுவர்களும் எப்படி எல்லாம் திருடினார்கள் என்று காட்டும் காட்சிகளை மையா அருட்பிரகாசம் அவர்களின் பாடல்களின் பின்னனியில் 6 நிமிடங்களுக்கு காட்டி இருப்பார்கள். அங்கே அந்த இடங்களில் எல்லாம் அந்த பெரிய இசை கட்சேரி எங்கே இருந்து பொருத்தமாக வருகிறது என்று உங்களால் விளக்க முடியுமா.......உண்மையாக சொல்லுங்கள் பார்ப்போம்.

அந்த பாடலில் வரும் ஒரு கொடூரகாட்சி இரண்டு சப்பாத்திக்காக கால்களில் கையிரை கட்டிக்கொண்டு ஓடு இரயிலின் கூரையில் இருந்து சன்னல் வழியே அவைகளை திருடுவதாக காட்சியை காட்டவேண்டிய அவசியம் என்ன வந்தது என்றாவது குறைந்தது சொல்வீர்களா.........

அல்லது அப்படி தலைகீழாக தொங்கும் காட்சிகளுக்கு மையா அவர்களது பாட்டும் அதில் வரும் அதிரடி இசையும் எப்படி இயல்பாக இருந்தது என்று சொல்வீர்களா...............

ஒரு வேளை இங்கிலாந்திலும், மேலை நாடுகளில்லும் மையாவின் காகித விமானம் இசை தொகுப்பை பார்த்து இருந்தார்களே ஆனால், அந்த பாடல் அவர்களுக்கு வேண்டுமானால் ஒரு ஒட்டுதல் இருப்பதாக இருக்கும். மற்றபடி இந்திய இரசிகர்களுக்கு அந்த பாடல் எப்படி காட்சியோடு ஒன்றியும், இயல்பாக இருந்தது என்று விளக்கினால் நாங்களும் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

சாருவின் உத்தி என்ன என்று இப்போது உங்களுக்கு விளங்கி இருக்கும். இப்படி அவர்காட்டும் உதாரணங்களை அவருக்கே திருப்பி கொடுத்து விளக்கங்கள் கேட்கலாம் அளவே இல்லாமல்.

இந்த காட்டுதல்கள் மூலமாக அவர் இசையை விமர்சனம் செய்தாரா அல்லது அவருக்கு இளையராசா மேல் உள்ள வெறுப்பை வாசகர்களின் மனதில் வித்தைதாரா/மெருகேற்றினாரா உங்களின் அனுமானத்திற்கே விட்டு விடுகிறேன்.

சாருவின் இளையராசாவின் இசை பற்றிய விமர்சனம் எப்படி இருக்கிறது என்றால் இப்படி இருக்கிறது என்று சொன்னால் சரியாக இருக்கும்.

ஒருவருக்கு பிறந்தத்தில் இருந்து சைவ சாப்படு மட்டுமே பழக்கமாக மட்டும் இல்லாது அசைவ சாப்பாடு கூடவே கூடாது என்று அறிவுருத்தபட்ட ஒரு வரை அசைவ சாப்பாடு எப்படி இருக்கும் என்று சொல்ல சொன்னால் எப்படி விவரிப்பார்.

அந்த உணவு மிகவும் அருவருப்பாகவும், இரத்தமும், கௌலும் நிறைந்தாகவும், மனித இனம் வெறுத்து ஒதுக்கவேண்டிய ஒன்றாக அது இருக்கும் என்று தான் விவரிப்பாரே அன்றி. அது எவ்வளவு சுவையாக இருந்தது என்றா எழுதுவார், அல்லது அந்த உணவில் இருக்கும் புரதம், வைடமின்களை பற்றியா எழுதுவார்கள்.

இதைத்தான் சாரு இளையராசாவின் இசை விமர்சனத்தில் செய்துக்கொண்டு இருக்கிறார்.

மற்றபடி ஒரு இலக்கியவாதியாகவோ, அல்லது ஒரு இரசிகனாகவோ, அல்லது ஒரு இசை அறிஞராகவோ அவரது விமர்சனங்கள் இல்லை, இல்லவே இல்லை.

அசைவ சாப்பாடு சாப்பிடும் ஒருவரை வைத்து அந்த உணவு எப்படி இருக்கிறது என்று கேட்டுப்பாருங்கள் விளக்குவார் அருமையாக எப்படி இருந்தது என்றும். என்ன வகையாக உணவு எப்படி இருக்கும் என்றும். என்ன என்ன சத்துப்பொருட்கள் எது எதில் இருக்கிறது என்று விளக்குவார்கள்.

எழுத்தாளர் செயமோகன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது அவரிடம் இளையராசாவை பற்றி கேட்டோம். ஒரே வரியில் அவரது விமர்சனத்தை சொன்னார் எந்தவித விருப்பு வெறுப்பும் தயக்கமும் இல்லாமல் "அவர் சந்தேகத்து இடம்மில்லாத ஒரு ஞானி என்று". ஆக என்ன நமக்கு வேண்டுமோ அதை கிடைக்கும் இடத்தில் தான் தேடவேண்டும் அதை விடுத்து சைவ உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட செல்லக்கூடாது. அப்படி செய்தால் அது நமது பிழை தானே தவிர சைவ உணவகத்தின் பிழை அல்ல. இப்படி எல்லாம் சொன்னால் தான் அசைவர்களையும் சைவம் சாப்பிட வைக்கமுடியும் என்று சைவ உணவகம் செய்யும் உத்தி என்றும் கூட சொல்லாம்..................

சாரு இப்படி தான் செய்கிறார் அவருக்கு இரகுமானை பிடிப்பதை விட இராசாவை பிடிக்கவே பிடிக்காது என்றது தான் மிகுதியாக இருக்கிறது அவரது மனதில். அதற்கான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம், அதற்காக இப்படி கொஞ்சம் கூட நேர்மை இல்லாமல் அவரை மட்டம் தட்டுவதை செய்யக்கூடாது. மட்டம் தட்டுவதோடு மட்டும் நில்லாது, இராசாவை இரசிப்பவர்கள் எல்லாம் பாவிகள் என்று எழுதும் அளவிற்கு போவது கண்டிக்கதக்கதும் கூட.........

நான் கடவுளில் எங்கே எங்கே அல்லாம் இயல்பாக இசை இல்லை என்று பட்டியலிட்டு சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம் அவரை அவரது வண்டவாளம் அவாருக்கே தெரியா ஆரம்பிக்கும்.

இப்படி எல்லாம் எழுதியதால் எனக்கு இரகுமான் மேல் காழ்ப்பு என்று யாரும் ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம். சிலம் டாக்கு மில்லினர் படத்திற்கு என்று எழுதிய எனது விமர்சனத்தையும் பார்க்கவும் உங்களுக்கே புரியும்.

http://panimalar.blogspot.com/2009/03/blog-post.html

8 comments:

')) said...

இதுவும் சரியாத்தான் தெரியுது!

')) said...

வாங்க வால்பையன், சாரு இதைத்தான் செய்துக்கொண்டு இருக்கிறார். குமுதத்தில் சாருவை பற்றி இழிவாக எழுதிவிட்டார்கள் என்று குமுதத்தை திட்டுவதாக பிரியாமணியின் இது அது என்று ஒரு காட்டு காட்டி இருக்கிறார். அடுத்தவரி விமர்சனம் செய்யும் போது தன் மீது விழும் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும், அந்த தன்மை கூட இவரிடம் இல்லை. அப்படி என்ன தான் இவர் கண்டுபிடித்தாரோ இப்படி வெறுப்பு கொள்ள அதை சொல்லிவிட்டு போகலாம்...........அதை விடுத்து இப்படி வித்தை காட்டுவது எல்லாம் சரியான செயல் இல்லை.......

')) said...

//சாருவின் அறிவையும் அவரது இரசனையும் நக்கல் செய்வதற்காக அல்ல//

சாருகிட்ட இல்லாததையெல்லாம் சொல்றது உள்குத்து தானே... :))

')) said...

இளையராஜாவுக்கு எழுதத் தெரியாது.அதை இளையராஜா ஒத்துக்கொள்வார். சாருவுக்கு இசை தெரியாது. ஆனால் அதை சாரு ஒத்துக்கொள்ள மாட்டார்.

விளம்பரப் பிரியர்களைப் பற்றி நமக்கேன் வெட்டிப்பேச்சு பனிமலர்??

')) said...

இசை உள்குத்து போல தான் இருக்கு, எழுதும் போது அப்படி நினைத்து எழுதவில்லை..........வருகைக்கும் கருத்துக்கும் நன்றி........

')) said...

அப்துல்லா நமக்கு என்ன கவலை என்று தான் நானும் இருந்தேன், ஆனாலும் இந்த வெறுப்பு கொட்டலை பார்க்கும் போது, அவர்கள் ஆடும் கபட நாடகத்தை மற்றவர்களுக்கும் புரியவைத்தால் என்ன என்று தோன்றியது எழுதினேன்........உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி......

Anonymous said...

ilayaraja vin isaiyai kurai sollum alavukku charu periya arivaliya..ama intha charu yaru..?

Dhanesh said...

சனியன் சாரு மலம்.
அதில் கல்லெரிந்தால் நம் மேலதான் தெரிக்கும். மிஷ்கின் விஷயத்தை பார்க்கலையா?