Friday, December 4, 2009

கமலகாசனின் நம்மவர் படமும் summer schoolலும்

இந்த summer school ஆங்கில படத்தை பார்க்கும் போது அப்படியே நம்மவரின் பட சாயல். நம்மவரை கட்டாயம் இந்த படத்தில் இருந்து தான் உருவாக்கி இருக்க முடியும். காரணம், கமலகாசனை சுற்றி சுற்றி அலையும் கௌதமியின் பாத்திரத்தை போல இந்த படத்தில் நாயகன் கிரிசுடி ஆலியை சுற்றி அலைவார் அந்த கடைசி காட்சி வரை.

நம்மவரில் வீனாய் போன மாணவர்களை ஆளாக்கும் கதை, இதிலும் வீனாய் போன மாணவர்களை பாடம் நடத்த தெரியாத ஆசிரியர் ஆளாக்கும் கதையே.
மற்றபடி அதிகம் அலசி எல்லாம் எழுதும் அளவுக்கு மறைமுகமாக எல்லாம் இல்லை நம்மவர். அப்படியே இந்த படத்தின் கருத்தையும், காட்சிகளையும் வைத்து தமிழில் அதுவும் ஒரு அதிரடி ஆசிரியராக வைத்து கதை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி எழுதி எடுத்துவிட்டார்கள்.

வழக்கமாக கமலகாசன் செய்யும் வேலை தான் இதுவும். நம்மவரை முதலில் பார்த்தேன், பார்த்தபோது அடடா என்ன அழகாக கதை எழுதி இருக்கிறார்கள் என்று நினைத்தேன். இப்போது தான் அந்த படத்தின் ஆதி தெரிகிறது. இதிலே அந்த படத்திற்கு தேசிய விருது வேற. விருதுகள் சொந்த படைப்புக்கு மட்டுமே என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்த படத்திற்கு ஆராயாமல் கொடுத்து இருப்பது, அந்த தேர்வு குழுவில் எப்படி பட்ட ஆட்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதிலே அந்த விருது வாங்கவில்லை என்று விமர்சனங்கள் வேறு..............

0 comments: