Monday, December 14, 2009

இந்தி படம் சோரி சோரி சுப்கே சுப்கே(Chori Chori Chupke Chupke), பிரியமானவளே, ஆங்கில படம் பிரிட்டி உமன்னின்(Pretty Women) கம்பனக்கமா....





இந்த இந்திப்படத்தை பார்க்க துவங்கிய போது அம் அப்கோ கேகோன் போல் ஏதோ படம் போல என்று இருந்தது. பிறகு படத்தில் பிரித்தியை காட்டும் காட்சிகளை காட்ட துவங்கியதுமே இது பிரிட்டி உமன் படத்தின் கம்பனாக்கம் என்று தெரிந்தது.

கதை இது தான் என்று தெரிந்ததும் பார்த்தது போதும் என்று தான் நினைத்தேன், ஆனால் படத்தின் வசனங்களும், வட நாட்டாரின் பணக்கார குடும்பத்தின் விளையாட்டுகளை காட்டிக்கொண்டு இருந்ததால், எப்படி தான் எடுத்து இருக்கிறார்கள் என்று பார்த்தேன்.

படம் நன்றாகத்தான் எடுத்துள்ளார்கள், அதுவும் கம்பனாக்கம் என்று முடிவு செய்த்துவிட்டால் எதையும் விட்டு வைப்பது இல்லை என்று கடைசிகாட்சி வரையில் எல்லா இடங்களிலும் உணர்ச்சிகரமாக அமைத்து இருக்கிறார்கள்.

படம் பிரிட்டி உமனை பார்த்துதான் எடுத்து இருக்கிறார்கள் என்று தெரியவேண்டும் என்று தான் அந்த பிரித்தியின் அறிமுக காட்சிகளும் சரி, பிறகு அவளை விலைமாது என்று தெரிந்துக்கொண்டு நாயகனின் நண்பன் பிரச்சனைகளை செய்யும் காட்ச்சிகளும் அப்படி படமால்லி இருக்கிறார்கள்.

படத்திலோ அல்லது பெயர் போடும் இடங்களிலோ அங்கே இருந்து தான் படம் வந்தது என்று சொல்லவில்லை என்றாலும் அந்த காட்சிகளின் மூலம் சொல்லிவிடுகிறார்கள். அந்த நேர்மைக்கு அந்த படகுழுவை பாராட்டுவோம்.

இந்த படத்தை பார்க்கும் போது தான் விஇச்சையின் பிரியமானவளே படமும் நினைவுக்கு வருகிறது. அந்த படத்திலும் மனதுக்கு பிடித்த பெண்ணிடம் ஆசை தீர இருந்துவிட்டு, முடிந்ததும் போதும் நீ போகலாம் என்று முதலில் சொன்னாலும். அடி மனதில் ஏற்பட்ட பாதிப்பால் உன்னுடனே இருந்து விடுகிறேன் என்று முடியும் கதையும் அடிப்படையில் பிரிட்டி உமனின் கதையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், தமிழில் வித்தியாச படவேண்டும் என்று, விலைமாதை ஏழை பெண்ணாக காட்டியுள்ளார்கள்.

நாயகனே பணக்காரனாகவும், சிறந்த வியாபாரியாகவும் ஆங்கிலத்தில் இருப்பதையும், பாலுவாகவும், நாயகனாகவும் பிரித்து கொடுத்துள்ளார்கள் தமிழில்.

ஆங்கிலத்தில் கடைகாரர்களிடம் அவமானபடும் நாயகியை தமிழில், ஒரு வருடம் ஒப்பந்தம் போட்டு வாழ்பவளே ஒரு வருடத்திற்கு பிறகு யாரோடு என்று கிட்டத்தட்ட விலைமாதாகவே கேட்ப்பதாக தமிழில் கேட்டு இருப்பார்கள்.

இந்தியிலோ அவர்கள் செய்த ஒரே வேலை, பிரிட்டி உமன் நடக்கும் இடத்தை ஒரு பெரும் பணக்காரர்களின் வீடாகவும். அந்த வீட்டில் அனைவரும் கருணையும் அருமையும் மிகுந்தவர்களாகவும் மட்டும் மாற்றி, பெரும்பாலான வசனக்களை மூலத்தை அப்படியே அப்பட்டமாக எடுத்துகொண்டு விட்டு. மற்ற இடங்களில், மிகவும் பாசமாக வசனங்களை அழகாக அமைத்துள்ளார்கள்.

இந்தியில் பெற்றுக்கொடுத்த குழந்தைக்கு ஈடாக எனது சொத்தையே கொடுத்தாலும் பத்தாது, இருந்தாலும் இவைகளை கொடுகிறேன் வேறு என்ன என்ன வேண்டும் என்று கேள் கொடுக்கிறேன் என்றும் சொல்லும் இடத்தில், குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட படத்தை காட்டி, அனாதையாக வந்த எனக்கு இவ்வளவு உறவுகளை கொடுத்தே பெரிய பரிசு அதற்கு பதில் பணம் கொடுத்து உடலை மட்டுமே விற்று வந்த என்னை கருவையும் விற்றவளாக ஆக்காதீர்கள் என்றும் சொலும் வசனங்கள் போன்றவைகள் தமிழில் இல்லை.

பொதுவாக இந்த மாதிரி படங்களை மொழி மாற்றம் செய்யப்படும் வேளைகளில், தமிழில் சிறப்பாக அமையும். ஆனால் பிரியமானவளேவை விட சோரி சோரி சுப்கே சுப்கே நன்றாக வந்துள்ளது. மொழி மாற்றம் தான் செய்தோம் என்று ஒத்துக்கொண்டு செய்ததால் அவர்களுக்கு இந்தியில் அதிக சுதந்திரம் இருந்தது. ஆனால் தமிழில் அவர்களும் மிகவும் குழம்பி, நம்மையும் எல்லாம் குழப்பியுள்ளார்கள்.

1 comments:

')) said...

hello sir

Intha Chori Chori Chupke Chupke

padam... thamilil ... Avan aval athu.. endra novel... 1980-85 vanthathu
athuvum athe peyaril vanthathu..
athai patri theriyuma///
Sivakumar, lakshmi, sripriya .. starring


priyamanavale .. padam .. telugu.. pavithra pandam endra padathin remake..

ungalukku remake.. dubbing .. rendukkum vithyasam theiriyalaya?