தற்பொழுது வெளியாகி ஓடிக்குகொண்டிருகும் அங்கிலப்படம் இந்த துரோகி திரைப்படம். இந்த படத்தின் கதையும் திரைகதை அமைப்பும் அப்படியே குருதிபுனலின் வடிவாக இருக்கும். அப்படி ஒரு ஒற்றுமை இந்த படத்திற்கும் குருதிபுனலுக்கும்.
என்ன ஒற்றுமைகள் என்று பார்ப்போம்.
1) குருதிபுனலில் தீவிரவாதிகை பிடிப்பதற்காக ஒரு சிறப்புபடையின் கதையை மூலமாக கொண்ட ஒரு கதை. இந்த ஆங்கிலப்படத்திலும் அதுவே தான் கதை.
2) குருதிபுனலில் கமலிம் பாத்திரமும் சரி, அர்சுனனின் பாத்திரமும் சரி, ஒரு நேர்மை தவறாத பாத்திரமாக அமையும். இங்கேயும் அதே நேர்மை தவறாத ஒரு மனிதனின் கதைதான் படமாகக பட்டு இருக்கிறது.
3) குருதிபுனலில் காவலர்களுக்கிடையே இருக்கும் கருப்பாடுகள் இந்த நாயகர்களை அதிகம் சங்கட்த்துக்கு உள்ளாக்குவார்கள். இந்த கதியிலும் அதுபோல நிறைய கருப்பு ஆடுகளை அதுவும் அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவில் ஊடுருவி இருப்பதாக காட்டப்படும்.
4) குருதிபுனலில், அரசே சில தீவிரவாத செயல்களை தனது சொந்த அலுவலர்களை கொண்டு நிகழ்த்தும். அதும் ஆள் சேதம் இல்லாமல் இருக்கும் வண்ணம் வடிவமைத்து இருக்கும். இந்த கதையிலும் அப்படிதான். தவறி 8 உயிர்கள் போனதில் நாயகன் மிகவும் துடித்து தான் போவான்.
5) குருதிபுனலில் இருப்பது போல் இந்த கதையிலும் இரட்டை நாயகன்கள் இருப்பார்கள். இருவரும் சேர்ந்து தான் எல்லா விசாரணையும் நடத்துவார்கள். என்ன குடும்பம், அது இது என்று தமிழில் வந்தது போல் இல்லை.
இப்படி படத்தில் உள்ள எல்லா செய்திகளையும் ஒப்பிட்டு அலசிவிட முடியும். ஆனால் இந்த ஆங்கில படத்தின் பின்னனி இசையும் திரைக்கதையும் அசாத்தியாக இருக்கும். கடைசிவரையில் என்ன நடக்கும் என்று இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கும் வண்ணம் படம் இருக்கும். அதனால் விமர்சனத்தை இதோடு விட்டு வைகிறேன். நண்பர்கள் படத்தை வார்த்துவிட்டு கருத்து கூறவும்.
தசாவதாரம் CHILL FACTOR படத்தின் தமிழாக்கம் என்று சொன்னதற்கு பழிதீர்க்கும் வண்ணமாக நாம் இந்த படத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் குருதிபுனலோ ARLINGTON ROAD படத்தின் தமிழாக்கமாயிற்றே என்ன செய்ய........
7 comments:
//ஆனால் குருதிபுனலோ ARLINGTON ROAD படத்தின் தமிழாக்கமாயிற்றே என்ன செய்ய........//
Then what "Droh kaal" inspired?
நண்பரே,
குருதிப்புனலின் மூலம் "துரொக்கல்" என்பதே உண்மை. கோவிந்த் நிகலானி இயக்கம். நசிருதின் ஷா, ஓம்புரி முறையே அர்ஜுன், கமல் கேரக்டரில் நடித்திருந்தனர்.
////ஆனால் குருதிபுனலோ ARLINGTON ROAD படத்தின் தமிழாக்கமாயிற்றே என்ன செய்ய........//
அதே கூட நம்ம நேரடியாக செய்யவில்லை. Govind Nilhani ஹிந்தியில் எடுத்ததை நாம் தமிழில் செய்தோம் அவ்வளவுதான்.
எப்பவோ எங்கேயோ படித்தது...God father படம் கூட அப்படியே நம்முடைய நாயகனை பார்த்து காப்பி அடித்தது என்ன படம் தான் நாயகன் வெளியாவதற்கு 20 வருடம் முன்பே ரீலீஸ் ஆகி விட்டது
குருதிபுனலின் கதையில் மொத்தம் 2 பாகம் உண்டு. ஒன்று குடும்பத்துக்குள் நுழைந்து கொண்டு குடும்பத்தில் மிரட்டி மிரட்டி தனது காம ஆசையை கூட தீர்த்துக்கொள்ள் தயங்காத தீவிரவாதிகள் என்ற பகுதியும். தீவிரவாதிகளை அவர்களது கூட்டத்துடன் அவர்களுக்கே தெரியாமல் உள் நுழைந்து துப்புகொடுத்து தாக்குதல்களை தடுக்கும் பகுதியாக இரண்டாவதாக பிரிக்கலாம். ARLINGTON ROADடில் அந்த முதல் பகுதியையும் TRAITOR படத்தில் இந்த இரண்டாவது பாக கதையையும் காணலாம்.
Arlington Road படத்திற்க்கும் குருதிப்புனலுக்கும் சம்பந்தமே இல்லை.
முன்னது சாதாரண குடிமகனை அவன் அறியாமலேயே பயங்கரவாத செயல்களை செய்ய வைப்பது.பின்னது கொஞ்சம் Departed/Infernal Affairs(இரண்டும் குருதிப்புனலுக்கு பிற்பாடு வெளியானவை) சாயல் - உளவு பற்றியது.
குருதிப்புனல் Droh kaal படத்தின் உரிமம் வாங்கி எடுக்கப்பட்ட ரீமேக்.Droh kaal ஒரு இஸ்ரேலிய படத்தின் தழுவல் என்று எங்கேயோ படித்த நியாபகம், சரியாக தெரியவில்லை.
போக்கிரி என்று ஒரு விசய் நடித்த படம் வந்தது. அந்த படத்திற்கும் க்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்கள். கேட்டால் இது தான் முன்னே வந்தது அப்போ படம் போக்கிரியை பார்த்து எடுத்து இருப்பார்களோ என்றும் கூட கேட்டார்கள்.
என்னை பொருத்த வரையில் கம்பனாக்கமோ(தழுவல்), மறு ஆக்கமோ தவறில்லை. ஆனால் அது என்னுடைய சிந்தையி தோன்றியது என்று சொல்வது தான் பிடிக்கவில்லை.
மர்ம்மம் நிறைந்த சாகச படங்கள் அதிகம் ஐரோப்பாவில் நடப்பதாகத்தான் காட்டப்படுகிறது. அதற்கு அந்த கதைகள் நடந்த இடமாக் அமெரிக்கர்கள் எழுதுவதைவிட ஐரோப்பியர்கள் எழுதினால் தான் சரியாக எழுத முடியும். என்றோ எழுதிய கதையை படித்து இவர்கள் பகுதியாக தமிழில் படமாக்கி இருக்கலாம். திரைக்கதை ஒத்து போவதை நீங்கள் கவனிக்க தவறியதாக நினைகிறேன்.
//என்னை பொருத்த வரையில் கம்பனாக்கமோ(தழுவல்), மறு ஆக்கமோ தவறில்லை. ஆனால் அது என்னுடைய சிந்தையி தோன்றியது என்று சொல்வது தான் பிடிக்கவில்லை.//
என் நிலைப்பாடும் இதுதான்.மறு ஆக்கம் செய்யும்போது ஆதார படத்தினை குறிப்பிட வேண்டும்.அப்படி செய்ய அவமான்மாக இருந்தால் படமே எடுக்கக்கூடாது.குருதிப்புனல் படத்தில் கோவிந்த் நிகலானி பெயரும் டைட்டில் கார்டில் வரும்.
Arlington Road - குருதிப்புனல் படங்களுக்குள் ஒற்றுமை இருக்கின்றன ஆனால் அதை வைத்து ஒன்றை மற்றொன்றின் தழுவல் என்று சொல்ல இயலவில்லை.
Departed/Infernal affairs பற்றி சொன்னது,இவை தமிழ் படங்களின் தழுவல் என்று வாதிட அல்ல.இவற்றுக்கும் குருதிப்புனலுக்கும் கதைக்கருவில் ஒற்றுமை இருக்கின்றன.இவை எப்படி குருதிப்புனலின் தழுவல் என்று சொல்ல முடியாதோ அதேபோல் தான் Arlington Road - குருதிப்புனல் தொடர்பும்.
நான் பார்த்ததிலேயே சிறந்த மறு ஆக்கம் - Departed.Infernal Affairs படத்தின் கருவை மட்டும் வைத்துக்கொண்டு அற்புதமாக கதாபாத்திரங்களை படைத்திருப்பார் Scorcese.
Post a Comment