இந்த படத்தை பார்க்க துவங்கியதும் இப்படிதான் மாயக்க கண்ணாடியும் ஆரம்பித்தார்கள். பிறகு அவ்வளவு வனப்பாக படம் இல்லையே என்ற எண்ணம் மனதில் தோன்றியதை தவிர்க முடியவில்லை. பிறகு படம் கதையில் பயணிக்கும் போது அந்த கவலை மனதை விட்டு மறைந்தது.
மிகவும் அருமையான தொரு கதையாக்கம், அதை விட அருமையான ஒரு பாத்திரமாக்கமாக அந்த 3 வரும் படத்தில் சொலிக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.
கடவுளே வந்து சொல்லி இருந்தாலும் நீ நம்பி இருக்கக்கூடாது என்ற வசனம் முகத்தில் குத்தியது போல் இருந்தது.
வஞனைகள் செய்வாரோடு இனங்க வேண்டாம், பிரகாசுராச்சு அருமையாக களவாடுவதும். பிறகு நிலைமைக்கு மீறிய பேச்சுகளும் அருமையாக இருந்தது. பாசுகரின் வசனங்களும் நக்கலும் அருமை.
படத்தின் இறுதி வரை இது ஏதோ ஒரு படத்தின் கம்பனாக்கமோ அல்லது மொழியாக்கமாகவோ இருக்காது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் BOWFINRER படத்தை பார்த்து அதே போல் எடுத்தால் என்ன என்று தோன்றி இருக்க வேண்டும்.
வெள்ளித்திரையில் வரும் அந்த கடைசி 15 நிமிட கதையமைப்புதான் BOWFINGERரின் முழுக்கதையும். அந்த படம் நகைப்பு வகையாக எடுத்ததால் சும்ம விட்டு விளையாண்டு இருப்பார்கள் ஆங்கிலத்தில்.
பிரபலமான நடிகன் எடி மர்பி, அவனை கொண்டு ஒரு படம் எடுக்கவேண்டும் என்று இந்த இயக்குனருக்கு ஆசை. ஆனால் இயக்குனரிடமோ பணமோ பதவியோ ஏதும் இல்லை. இருந்தாலும் படம் எடுக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியாமலே அவனை வைத்து முழு நீள படத்தையும் எடுக்கிறான். பிறகு உச்சகட்டம் எடுக்கும் போது இயக்குனரின் குட்டு வெளிபடுகிறது. படம் அதோடு நிற்க, இயக்குனர் எப்படி உச்சகட்டத்தை எடுத்து வெற்றி பெறுகிறார் அது மீதி கதை.
வெள்ளித்திரை ஒரு நல்ல கம்பனாக்கம். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
4 comments:
வெள்ளித்திரை, ஒரு மலையாள படத்தின் கருவை எடுத்து கொண்டு செய்யப்பட்டது.அந்த மலையாள படத்தின் பெயர் தெரியவில்லை.நீங்கள் சொன்ன bowfinge படத்தின் கதைதான் அந்த மலையாள படத்தின் கதையும்.
உறுதியாக இது அந்த ஆங்கில படத்தின் கம்பனாக்கமே அதில் சந்தேகமே இல்லை. என்ன அழகாக ஒரு அழுத்தமாக கதையில் அதை புதைத்து கொடுத்துள்ளார்கள் பாருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Your blog keeps getting better and better! Your older articles are not as good as newer ones you have a lot more creativity and originality now keep it up!
வாங்க அனானி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எழுத துவங்கிய போது தான் எனக்கு என்ன எழுத வரும் என்று தெரிந்தது. இன்னமும் எழுத்து பிழை இல்லாமல் எழுத முடியவில்லை. உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.
Post a Comment