Saturday, September 13, 2008

இதுதான் மொழிப்பற்றா தினமணியின் தலையங்கம்.

இந்த தலையங்கத்தில் கட்டுரையாளர் மும்பையில் நடந்த செயா பச்சனின் "நான் இந்தியில் தான் பேசுவேன்" என்று சொன்ன விவகாரத்தின் அடிப்படையில் எழுதியுள்ளார்.

மொழிப்பற்றுக்கும் மொழி வெறிக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக சொல்லியுள்ளார். எனது மொழி எவ்வளவு நல்ல மொழி அதில் உள்ள நூல்களை படித்து பாருங்கள் என்று எடுத்துசொல்லவும், நமது மொழியின் வளங்களை அடுத்த மொழியான் தெரிந்துகொள்ளும் பொருட்டு மொழிபெயர்ப்புகளை கொடுத்தும் தான் மொழியை வளர்க்க முடியும். மாறாக எனது மொழியை தவிர மற்ற மொழிகளை கேட்க்கவோ பேசவோ பழகவோ கூடாது என்று சொல்வதால் மொழி வளரப்போவது இல்லை என்றும் சொல்கிறார்.

மராட்டியத்தில் மராத்தி என்ற ஒரு மொழி உண்டு. அது தான் அந்த மாநிலத்தின் மொழியும் கூட. இந்தியவின் பொருளாதார தலைநகரமாம் மும்பையின் வழக்கு மொழியாகவும், அரசு மொழியாகவும் மராட்டியம் இல்லை. அதுவும் அந்த மாநிலத்தின் தலைநகரில். அரசாளவும், வழக்கிலும் மராட்டியம் இல்லாத ஒரு மாநிலம் அந்த மராட்டியம்.

காட்டாக தமிழகத்தை எடுத்துக்கொள்வோம், தமிழக அரசின் ஆட்சி மொழி தமிழ். தலை நகரில் வடக்கத்தியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று சென்னையில் இனிமேல் அரசு உட்பட எல்லோரும் இந்தி தான் பேசவும் எழுதவும் வேண்டும் என்ற ஒரு நிலை வருகிறது என்று வைத்துக்கொள்வோம். மொழிப்பற்றாளனாக வேண்டாம். தமிழகத்தின் ஒரு சாதாரண மனிதனாக நாம் என்ன நினைப்போம் என்று கட்டுரையாளர் கேட்க மறந்த கதையாக விட்டு விட்டார்.

இணையத்தில் மராட்டியத்தை காப்பாற்றுங்கள் என்று ஆங்கிலத்தில் தேடினால் அவர்களது கண்ணீர் கதைகளை நிறைய காணலாம். உச்ச நீதிமன்றத்தில் சென்று மராட்டியத்தை கட்டாய பாடமாக அக்குவது மூலமாகவாது மும்பையின் இந்த மொழி சமத்துவத்தை நிலை நிறுத்தலாம் என்று திட்டம் தீட்டி இப்போது நிறைவேறுகிறார்கள்.

இதை விட இன்னமும் கேவலாமன இரு செய்தி உண்டு. இன்றைக்கு மராட்டியத்தை தாய்மொழியாக கொண்ட இருவர் சந்தித்துக்கொண்டால், அவர்கள் உரையாடுவது இந்தியில் மராட்டியத்தில் அல்ல. இதை எனது அலுவலகத்தில் மராட்டியர்களை கேட்டு இருக்கிறேன். அதற்கு அவர்களும் வருத்தப்பட்டார்கள், ஆனால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. இவர்கள் மட்டும் இல்லை, இந்தியாவின் மொழிகளிலே அதிக மொழிபற்று கொண்ட மாநிலமான மேற்கு வங்கமும் சரி, கர்னாடகமானாலும் சரி அவர்கள்குள் பேசிக்கொள்ளும் மொழி இந்தி தான். அவர்களுடைய மொழி இல்லை.

வெளி நாடுகளில் இந்தியர்கள் ஒன்றாக கூடும் இடங்களில், இந்தி தெரிந்த தமிழர்கள் என்னவோ நாட்டின் ஆட்டி கட்டிலில் படுத்துக்கொண்டு இருப்பதாக நினைத்துக்கொண்டு தமிழ்சங்களுக்கோ தமிழ் திரைபடங்களுக்கோ வருவது இல்லை மாறாக அப்பச்சி இந்தியன் வந்தால் மாறோ மாறோ சல்சாகோ தேகா மாறோ என்று சொல்லிக்கொண்டு போவான். அவனுக்கு இந்தி மேல் இருக்கும் இந்த இந்தியின் மோகம் மொழிப்பற்றா கட்டுரையாளரே விளக்கிவீர்களா. அந்த விளக்கத்தின் அடிப்படையில் இந்த மொழிப்பற்றை மறு ஆய்வு செய்வோம்.

0 comments: