நடிகை சங்கீதாவுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தனம் என்று ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் அம்முவாகிய நான் படத்தை அப்படியே மறுபடியும் கேவலமாக எடுத்திருக்கிறார்கள். இதை தெரிவித்த பிறகு நாயகன் என்ற படத்தை பார்த்தேன்.
அது மேலும் ஒரு அதிர்ச்சியை தந்தது. கெஞ்சம் நாளைக்கு முன் வேகம் என்ற ஒரு படம் வந்தது. அந்த படம் ஒரு ஆங்கிலப்படம் CELLULAR ரின் கம்பனாக்கம்(தமிழாக்கம்). ஆங்கிலப்படத்தின் திரைக்கதையை அப்படியே கொண்டு தமிழ் மசாலா தூவி செய்திருப்பார்கள். அதிலும் அந்த சேகரின் மகன் விடும் கொட்டத்தை தாங்காமல் படத்தை ஓடவிட்டு ஓடவிட்டு ஒரு வழியாக பார்த்தேன்.
அதே நேரத்தில் இந்த படம் தெலுகுவிலும் தயாரித்து இருப்பார்கள் போலும். தெலுகுவில் நன்றாக போனதால் அதை அப்படியே மறுபடியும் கம்பனாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.
இப்படி தமிழில் வந்த படத்தையே மீள் பதுவு செய்வது என்ன தற்போதய புதிய பழக்கமா என்ன. இல்லை காசு கொட்டி கிடக்கிறதா என்ன.
நடிகை சங்கீதா இனிமேலாவது கதையை கேட்பதோடு மட்டும் அல்லாது மீள் பதிவா என்று பார்த்து நடிக்கவும். பின்னாளில் மீள் பதிவு நடிகை என்று பெயர் வைத்துவிட போகிறார்கள்.
நாயகனில் ஒரு நல்ல செய்தி வேகம் உவேக்காக இருந்தது போல் இல்லாமல் திரைக்கதையை அருமையாக கம்பனாக்கம் செய்துள்ளார்கள். பாராட்டுக்கள்.
Monday, September 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நம்ம விஜயும் இதே மாதிரி ஒரு தடவ பண்ணினாரு. இவருடைய குஷி படத்த தெலுங்குல ரீமேக் செய்தார்கள், அதை இவர் பார்த்துட்டு அத திரும்பவும் தமிழ்ல சச்சின்னு ஒரு படத்த எடுத்துட்டார்.
குஷியைவிட சச்சின் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் இருந்ததே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment