Thursday, March 7, 2019

பாசகவின் 4G மாபெரும் ஊழல் - தேசபற்றை கொண்டு மறைக்க பார்கிறது

புல்வாமா 350கிலோ குண்டு வெடிப்பை தொடர்ந்து மக்களும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய பாசக அரசு, திடீர் என்று இது பாக்கின் வேலை என்றும். அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.

அதை தொடர்ந்து பாக் ஆக்கிரமிப்பு காசுமீரதில் தாக்குதல் நடத்தி 350கிலோ குண்டுக்கு பதில் 300 நபர்களை கொன்றுவிட்டோம் என்று ஊடகங்களுக்கு செய்திகளை கசியவிட்டது.


தினமணியில் வெளியான ராசனாத்து சிங்கின் பேச்சு

ஒரு வேளை இந்த செய்தி நீக்கப்படலாம் ஆகையாஇ அந்த செய்தியை எடுத்து இங்கே பதிவிடுவோம்.

"பாக்கிஸ்தானில் இருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைபின் முகாம்களை இந்திய விமானப் படை அழிப்பதற்கு முன்பாக அங்கு சுமார் 300 மொபைல் இணைப்புகள் செயல்பட்டு வந்தாக தேசிய தேசிய தொழில்நுட்ப ஆய்ராச்சி மையம் ( என்.டி.ஆர்.ஓ) தெரிவித்துள்ளது. இந்த மொபைல் இணைப்புகள் ஒன்றும் அங்கிருந்த மரம் செடி கொடிகளுக்கு வழங்கபடவில்லை

எனவே இதன்மூலம் எத்தனை பயங்கவாதிகள் வீழ்த்தப்பட்டு இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் என்.டி.ஆர்.ஓ மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் எதிர்கட்சிகள் தெரிவிக்கும் என்பது எனக்கு தெரியும்.

இன்னும் சில நாட்களில் எத்தனை பயங்கரவாதிகள் பாக்கிஸ்தானில் வீழ்த்தப்பட்டார்கள் என்ற முழுவிவரமும் தெரியவரும். தேசத்தின் பாதுகாப்பில் மத்திய அரசு என்றும் மெத்தனமாக செயல்படாது. மேலும் ஆட்சியை திரும்ப அடைய வேண்டும் என்ற பேராசையும் பாஜகவுக்கு கிடையாது. அனைவருக்கும் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேச மத்திய அரசு எப்போது தயாராக இருக்கிறது. ஆனால், சம்பந்தபட்டவர்கள் அதற்கு முன்வர வேண்டும் என்றார்."

பிறகு மெல்ல மெல்ல வெளி நாட்டு ஊடகங்களும் பாக்கின் செய்திகளும் இந்த 300 பேர் எண்ணிக்கையை பொய் என்ன நிரூப்பிக்க துவங்கி இந்தியாவின் விமானபடை தளபதி எவ்வளவு பேர் தாக்கப்பட்டார்கள் இறந்தார்கள் என்று எல்லாம் அறுதியிட்டு சொல்லுவதற்கு இல்லை என்று தெளிவாக சொன்ன பின்பும் நேற்றைய செய்திகளில் உள்துறை அமைச்சர் ராசனாத்து சிங்கு தாக்குதல் நடந்த இடத்தில் தாக்குதலுக்கு முன் சரியாக 300 செல் பேசிகள் இயக்கத்தில் இருந்ததாகவும் அவைகள் தாக்குதலுக்கு பின் காணாமல் போனதாகவும் அதை NDRO குழு கண்டுபிடித்து நாங்கள் சொல்வது தான் உண்மை என்று நிரூபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மைய அரசோ அல்லது அமைச்சரோ பிரதமரோ யாரும் 300 போர் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லவே இல்லை என்று சாதித்தவர்கள் இன்று அந்த 300 கணக்குக்கு அறிவியல் சாட்சியை கொண்டு வர முயல்கிறார். நாமும் தெரியாமல் தான் கேட்போம், தாக்குதல் நடந்த இடம்மோ பாக் ஆகிரமிப்பு காசுமீரம். அதில் செல் சேவையை வழங்க பாக் நாட்டினரால் தான் முடியும். அப்படி இருக்க அங்கே இந்த செல் பேசிகள் இயக்கத்தில் இருந்ததை எப்படி இந்தியாவில் இருக்கும் ஒரு நிறுவனம் அறுதியிட்டு சொல்ல முடியும். விளக்குங்கள்.......

2014ல் டிராய் குழுவையும், தணிக்கை கணக்காளர் குழுவையும் வைத்து 2G ஊழல் என்று பரப்பி தேர்தலில் காய்களை நகர்த்திய பாசக மறுபடியும் இப்படி ஒரு 4G மாபெரும் ஊழலில் இறங்கி உள்ளது.

இந்த NDRO குழுவின் உண்மை தண்மை மட்டும் அல்ல பாசகவோ அல்லது மோடியோ என்றைக்குமே உண்மையை பேசுபவர்கள் இல்லை என்றதை தொடர்ந்து கவனித்து வந்துள்ளோம். இன்று தேர்தல் நெருங்கும் வேளையில் இப்படி ஒருNDRO நிறுவனத்தின் பெயரில் புளுகி பாசகவின் தோல்வியை மட்டும் அல்ல பொய்யின் பெயரில் பாக்கின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலையும் ஞாயப்படுத்த நினைத்து முனைக்கின்றது..........

பாசகவின் இந்த 4G மாபெரும் ஊழலை அம்பலபடுத்துவோம்......

0 comments: