Thursday, March 14, 2019

இளையராசா - என்ன கர்வம் மனிதனுக்கு

மனிதனுக்கு என்ன இருந்தாலும் இத்தனை கர்வம் கூடாது. ஊரில் அவரை பற்றி அனேகர் பேசுவதைப்போல் அவருக்கு இத்தனை கர்வம் கூடாது தான்.

எவ்வளவு கர்வம் இருந்தால் 70கள் 80கள் 90கள் 2000கள் அப்பால் 2010கள் என்று இசை அமைத்துக்கொண்டு இருப்பார் இந்த கர்வி.

ஏதோ ஒரு 10 ஆண்டுகள் இசையமைத்துவிட்டு போக வேண்டியது தானே, இல்லை போனால் போகிறது 20 ஆண்டுகள் என்று இருந்து விட்டு போகட்டுமே. எவ்வளவு திமிர் இருத்தால், தலைகனத்துடன் இத்தனை ஆண்டுகள் இசையமைக்க இவருக்கு.

சிவாச்சி கணேசன் முதல் 2011 அறிமுக நாயகர்கள் வரை இத்தனை விதமான நடிகர்களின் கதைகளுக்கு அடக்கமே இல்லாமல் எப்படி இவர் இசையக்கலாம்.

இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தனக்கு என்று வகுந்து கொண்ட பாதையில் இருந்து வழுவாமல் எப்படி இன்னமும் பயணிக்கலாம் இந்த கர்வி. பல மாய இசை வடிவங்களும் இடி இசையும் வந்து அசத்திக்கொண்டு இருக்கும் இந்த காலத்திலும் எப்படி அவரது இசை மக்களின் மனம் கவரும் வண்ணம் அமையலாம். எத்தனை கர்வம் இருக்க வேண்டும் அவருக்கு.

பாட்டும் பாடின் நடையை கொண்ட கித்தார் தாளமும் அதற்கு என்ற மேள தாளமும் மட்டுமே போதும். பாட்டு இல்லாமல் இருக்கும் இடங்களில் இராக்கு கித்தாரையோ அல்லது வேறு வகையில் ஒரு அலரல் வாசிப்பு என்றாகி விட்ட இந்த காலகட்டத்திலும், காட்சியின் தன்மை பொருத்து அமைய மண்ணின் மணம் போகாமல் இந்திய/தமிழ் இசைப்புகளை உள்ளே புகுத்தி கொடுக்க என்ன கர்வம் இருக்க வேண்டும் இவருக்கு. சாதாரண வார்த்தைகளில் சொன்னால் ஊரே பீச்சா விற்கும் போது இவர் மட்டும் எப்படி முழு சாப்பாட்டை கொண்டு வந்து பரிமாற வேண்டும், கர்வம் தானே மனிதனுக்கு.

இந்த கர்விக்கு கிராமிய இசையும் கர்நாடக இசையும் என்று இருந்துவிட்டு போக வேண்டியது தானே. அதைவிடுத்து, மேற்கத்திய இசை இவருக்கு எதற்கு. கொஞ்சம் கூட அடக்கம் இல்லாமல் இந்திய இசையை மேற்கத்திய வாத்தியம் கொண்டு வாசிப்பதும், மேற்கத்திய தாளகட்டைக்குள் இந்திய இசையை இசைத்துக்காட்டுவதும். என்ன கர்வம் மனிதருக்கு.

இதோடு நிறுத்தினாரா மனிதர், இத்தாலி நாட்டு இசை கலைஞர்களை அழைத்து வந்து தமிழ்ப்பாட்டுக்கு இசை வாசிக்க வைத்துக்காட்டுகிறார் இந்த கர்வி. அவர்களும் என்னவோ இந்தியாவிற்கு போக ஒரு வாய்ப்பு வந்ததே என்று அலைபவர்கள் போலும் உடனே வந்து வாசித்துவிட்டு போகிறார்கள்.

காலத்தில் நிலைத்து நின்ற இயக்குனர்கள் முதல் சில பல படங்களிலே கானாமல் போன இயக்குனர்கள் வரை அனைவருக்கும் எந்த வஞ்சனையும் இல்லாமல் எப்படி ஒரே தரத்தில் இவர் இசையமைத்துக்கொடுக்கலாம். இதை திமிர் என்று சொல்லாமா அல்லது கர்வம் என்று சொல்லாமா. ஆளுக்கு தகுந்தார் போல் கொடுத்து இருக்கலாம், ஆனாலும் மனதுக்குள் வள்ளல் என்ற திமிரா அல்லது எவ்வளவு கொடுத்தாலும் என்னிடம் இருக்கும் இசை குறையாது என்ற கர்வமா.......

இந்தி படங்களுக்கு உங்களின் புது பாடல்கள் எல்லாம் ஒன்றும் வேண்டாம் பழையபாடலில் இருந்து எடுத்து புது பின்னணி இசையில் கொடுங்கள் என்று கேட்டால், முடியாது என்று சொல்ல வேண்டியது தானே. அவர் கேட்டாராம் இவரும் இசைந்து இசைத்தாரம். என்ன கர்வமையா உங்களுக்கு........

வானொலிகளில் இன்றைக்கு 24 மணி நேர சேவைகள் வந்த பிறகு, இரவுக்கு என்று பழையபாடல்கள் அடக்கமாக இருப்பதைபோல் இல்லாமல், இரவிலும், பகலிலும், புது பாடல்கள் என்று வரும் தொகுப்புகள் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் ஒலிக்கும் படியாக இசையமைத்து தள்ள இவருக்கு எத்தனை கர்வம் இருக்க வேண்டும்.

ஒரு வேளை இந்த கர்வி அந்த இனிமை 5000 என்று இத்தனை பாடல்கள் இசையமைக்காமல் விட்டு இருந்தால், மாலை நேரத்திலோ அல்லது இரவில் 10 முதல் 10:30 வரை என்று மட்டும் இவரது இசை ஒலித்துக்கொண்டு இருக்கும். இப்படியா செய்வார் கொஞ்சம் கூட அடக்கமே இல்லாமல்.

இந்த கர்வம் போதாது என்று 4 தேசிய விருதுகள் இவருக்கு என்ன கர்வம் இருக்கும் இந்த மனிதருக்கு. ஏதோ ஒன்று அல்லது இரண்டு என்று இருந்துவிட்டு போகவேண்டியது தானே. கர்வம் பிடித்தவர் 4கா வாங்க வேண்டும். மோசம் செய்த்துவிட்டார் மனிதர்.

சரி இந்த அட்டகாசங்களை தமிழோடு நிறுத்திக்கொள்ள வேண்டியது தானே. அதை விட்டு தென்னகத்து மொழிகள் அனைத்திலும் இதே அட்டகாசம். கொஞ்சமும் கூச்சம் இல்லாம், இத்த வீச்சு வீசி இருக்கிறார் இந்த கர்வம் பிடித்த மனிதர்.

தொலைகாட்சிகளில் திறமை காட்ட என்று நடக்கும் நிகழ்சிகளில் பழைய பாடலை பாடினால் ஒன்றும் பெரிதாக அங்கிகாரம் கிடைக்காது என்று ஆகியேவிட்டது. என்னமோ பழைய பாடல்கள் எல்லாம் எவர் வேண்டும் என்றாலும் சும்மா செறுமுவதை போல் பாடிவிடலாம். ஆனால் புதுபாடல்கள் தான் பாடுவதற்கு சிறமம் என்று போல் ஒரு பொது கருத்தை உருவாக்கியாச்சி. அதிக வாத்தியங்கள் இசை இல்லாமல் பாடலும் வார்த்தகளும் கொஞ்சு விளையாடும் அந்த பழையபாடல்கள் பாட திறமை கட்டாயம் வேண்டும். ஏனோ தானோ என்று எல்லாம் படிவிட முடியாது. அந்த பாடல்களில் வார்த்தைகளின் உச்சரிப்புகள் அவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் இனிமையாகவும் இருக்கும். அது சரி கேட்பவர்களுக்கே இந்த இடத்தில் னவா, ணவா, ழ வா, லாவா, இல்லை ளாவா என்று தெரியா நிலையில் "கன்னன் வந்து பாடிகிரான் காடல் சொன்னான்" என்றால் தெரியவா போகிறது. தமிழ் தானே, அதுவும் பழைய பாடல் தானே, அம்மாவை வீட்டில் கிண்டல் செய்வது போல் இருந்துவிட்டு போகட்டும் என்று இருந்துவிடுவார்கள் போலும்.

இருந்தாலும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் இசையமைத்த பாடல்களை அழகாக பாடி பரிசும் பெரும் மக்களை பார்க்கும் போது இவர் கொஞ்சம் கூட தன்னடக்கம் இல்லாமல் எப்படி எல்லாம் கர்வமாக இருத்து இருக்கிறார் என்று தெரிகிறது. இவ்வளவு கர்வம் கூடாது தான் இந்த மனிதருக்கு.

பாடல் துவங்கிய கனத்தில் இருந்து முடியும் வரை தண்ணீர் பள்ளத்தை நோக்கி ஓடுவது போல் ஒரு ஓட்டம். எங்கேயும் தேங்காமல் வடிந்து சொன்றாலும் மனதில் தேங்கி நிற்கிறதே என்ன மோசகார செயல் இது. பாட்டு நின்ற பிறகு, அல்லது கொஞ்ச நாட்கள் நகர்ந்த பிறகு அந்த பாடலை கேட்டால் மக்கள் உடனே மாற்றாமல் முடித்த பிறகு மாற்றுவது போல் ஏன் இசையமைக்க வேண்டும் இவர். அத்தனை ஒழுங்காக இசையமைத்தால் தான் இந்த கர்விக்கு பிடிக்குமா. ஏனோ தானோ என்று அடக்கமாக இசையமைக்காமல் படத்தில் எழுத்துக்கு போடும் பாடல் எல்லாம் வானொலியில் ஒலிபரப்பும் அளவிற்கு ஏன் இசையமைக்க வேண்டும்.

இதிலே கர்வம் கொள்கிறேன் என்ற நக்கல் பதில் வேறு அவருக்கு. என்ன கர்வமையா உங்களுக்கு.

இன்னமும் இந்த கர்வம் குறையாமல் அப்படியே இரும், இத்தனை பாடல்களையும் இசை வடிவங்களையும் இவ்வளவு கர்வமாய் கொடுத்ததை போல் இனிமேலும் அப்படியே கர்வமாக கொடும். அமைதி காக்கிறேன், அடக்கமாக வாசிக்கிறேன் என்று எல்லாம் துவங்க வேண்டாம். உனது கர்வ இசையே மீண்டும் மீண்டும் வரட்டும், வந்து எங்களை எல்லாம் வாட்டி எடுக்கட்டும். உனது இசையால் நாங்களும் நல்ல இசையை கேட்கும் கர்வியாகி போனதை இவர்களும் எங்களை மீண்டும் மீண்டும் விமர்சனம் செய்யட்டும்.

உங்களிடம் உங்களது இசையை மட்டுமே இரசிக்கும் கர்விகளுக்கு எத்தனை சொன்னாலும் புரியபோவது இல்லை. அப்படியே புரிந்தாலும் அப்படி இரசிப்பது கர்வம் என்று ஆனால், இன்னமும் கர்வப்படுவோம் என்று அடக்கமே இல்லாமல் வீண் பேச்சு பேச போகிறார்கள்.

17 comments:

')) said...

வஞ்சகப் புகழ்ச்சி வார்த்தைகளால் ராஜாவின் பெருமையை விவரித்து விட்டீர்கள் அருமை

Anonymous said...

Suvana annanunkku sariyana nethi adi...

Anonymous said...

Fantastic! keep it up, we expect more from you!

Indian said...

Fantastic write up. Keep up the good work!

')) said...

ரோஜா படத்துக்கப்புரம் இவர் எடுபடவில்லை என்பதே உண்மை சகோ!! ஆனாலும் இவரது பழைய பாடல் களுக்கு இணையாக புதிய பாடல்கள் இல்லை என்பதும் உண்மை.

')) said...

விருமாண்டி இசை பத்தி என்ன நினைக்கறீங்க ஜெயதேவ் அவர்களே...?

')) said...

விருமாண்டி இசை பத்தி என்ன நினைக்கறீங்க ஜெயதேவ் அவர்களே...?

Indian said...

It is sad that Mr.Jeyadev doesnot know about Pithamagan, Naan kadavul, Pazhasi Raja, to name a few. Mr.Jeyadev, please listen to the songs, still better, watch the movies and then come back here, we can discuss at length!

')) said...

Wow....!!
சும்மா பின்னிட்டீங்க...
ராஜாவைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ இருக்கே..!!

http://www.malarinninaivugal.blogspot.in/2012/11/2.html

')) said...

முரளிதரன் அவர்களின் வார்த்தைகளில் அவர்களுக்கு விளக்கினேன் அவ்வளவு தான், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

இராசாவின் இசையை பொருத்தளவில் அவரின் இசையை மட்டுமே எதிர்பார்ப்பதும் இரசிப்பதும் மட்டும் போதுமே, மற்றவைகளை பற்றி கவலை கொள்வது அவரது வேலை. அவரது வேலையை இவர்கள் ஏன் செய்கிறார்களோ தெரியவில்லை, அன்புவின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி.

')) said...

இந்தியன் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

')) said...

செய்யதேவ் தாசு என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை, இரோசா படத்திற்கு பிறகு இராசா இசைக்கவே இல்லை என்கிறாரா....... இராசா என்றும் இராசா. கடைசியாக வந்த நீ தானே என் பொன்வசந்தம் வரை. இவ்வளவு பாடல்களை கொடுத்தும் சளிக்காது இன்னமும் புது தேடல்களில் புதிய கீதங்களை கொடுக்கும் அவரை பாராட்ட மனம் இல்லை என்றாலும் பரிகாசம் செய்யாமல் இருப்பது மதி.

')) said...

பிரியன் பிரியமான கருத்திற்கு நன்றி.

')) said...

மலரின் நினைவுகள், சரியாக சொன்னீர்கள். இது வரை இராசாவை குறை சொல்லும் அனைவரும் இராசா சப்பாத்தி சாப்பிடுவதால் அவரது இசை என்னக்கு பிடிக்கவில்லை என்று தானே சொல்கிறார்களே தவிர, ஒரு சரியான காரணம் இது வரை இவர்கள் வைக்காமல் போவது கொடுமையே. எல்லோரும் இராசாவை இரசிக்க வேண்டும் என்று இல்லை தான். அதற்காக இப்படியா இழிவாக சொல்வது என்ற வருத்தம். மற்றபடி இராசாவை பேச எவ்வளவு இருக்கிறது. ஆற்றாமையில் விளைந்த கருத்து பொருத்துக்கொள்ளுங்கள்.....

Anonymous said...

A.R Rahman, The Musical Storm, by Kamini mathai.

இந்த நூலில் ரஹ்மான் இளையராஜா பற்றி சொல்லும் கருத்து வருகின்றது

இளையராஜா ஒரு அட்டகாசமான நபர். நீங்கள் இசையைப் பயிலவேண்டும் என்றால் அவருடன் வேலை செய்தாலே போதுமானது. ஆனால் இசையைப் பயின்றதும் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதும் முக்கியம். சுதந்திரமாக, தனியாக உங்கள் வழியில் செல்லப்போகிறீர்களா, அல்லது ஒரு இசைக்கலைஞனாகவே அவருடன் இருக்கப் போகிறீர்களா?

இளையராஜாவின் வேகம் அசாத்தியமானது. ஒரு பாடலை ஐந்தே மணி நேரங்களில், மிக்ஸிங், ஆர்க்கெஸ்ட்ராவோடு அத்தனை வேலைகளையும் முடித்துவிடுவார். ஒவ்வொரு நொடியும் ப்ரோக்ராம் செய்யப்பட்டதைப்போல், அவ்வளவு துல்லியமாக நகரும். இளையராஜாவின் மனதில் இருந்த ட்யூன், இசைக்கருவிகளின் வழியாக எப்படி வெளிப்படவேண்டும் என்பதில் ராணுவ ஒழுங்கோடு அவர் செயல்படுவார். எனவே, எதையுமே இம்ப்ரூவ் செய்ய முடியாது. ஒரு இசைக்கலைஞராக, உங்கள் திறமையை முழுவீச்சில் இளையராஜாவின் இசையில் காட்ட முடியாது. அவர் நினைத்தபடிதான் நீங்கள் வாசிக்கவோ பாடவோ இயலும். காலையில் ஒரு பாடல், மதியம் ஒரு பாடல் என்று இயங்கும்போது அப்படித்தான் நடக்கவும் செய்யும். அதில் தப்பும் இல்லை.

ஆனால், எனக்குப் படிப்படியாக அது அலுக்க ஆரம்பித்தது. எனக்கு இம்ப்ரொவைஸேஷன் தான் எல்லாமே. இசைக்கலைஞர்களை அவர்களின் இஷ்டத்துக்கு விட்டுவிட்டால் அவர்கள் தரும் இசை விலைமதிக்க இயலாதது. எனவே, ஒருநாள் சிங்கப்பூர் சென்று, எனது சொந்த இசைக்கருவிகள் வாங்கிவந்தபோது, இளையராஜாவிடம் சென்று, இனி என்னால் உங்களுக்காக வேலை செய்ய இயலாது என்று சொல்லவேண்டி வந்தது. அவரும் அதை இயல்பாகவே எடுத்துக்கொண்டார். அவருடன் கடைசியாக நான் வேலை செய்த படம், வேலைக்காரன்’ - ரஹ்மான்.

')) said...

மனதில் உறுதி அதிகம் இருப்பவர்களுக்கு
கர்வம் இருக்கும்.
ஆனால் அது அவருடைய தனிப்பட்ட உரிமை.