Wednesday, November 8, 2017

நவ 8 - பாசக - மக்களை ஏமாற்றி ஏய்த்து பிடுங்கி வாரா கடனாக கொடுத்த அசுர சாதனை நாள்

பொருளாதாரத்தை உயர்த்துகின்றேன் கருப்பு பணத்தை பிடிக்கின்றேன் என்று ஏக வசனங்கள் பேசி 50 நாளில் ஒரு அற்புதம் நிகழ போகின்றது என்று மோடி வித்தைகாரன் சொல்வதை போல் சொல்லி இன்றோடு 1 ஆண்டு ஆகுகின்றது.

இது வரையில் கருப்பு பணம் பிடிப்படவில்லை

ஆனால் ஞாயமாக சம்பாதித்த பழைய பண தாட்கள் இன்னமும் மீதம் மக்களிடம் இருக்கின்றது

1.6 முதல் 1.7 இலட்சம் கோடி சட்டவிரோதமாக நடைபெற்றதை கண்டுபிடித்துவிட்டார்களாம்

29,213 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்

56 இலட்சம் தனி நபர்கள் வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்களாம்

2.97 இலட்சம் போலி நிறுவனங்கள் கண்டுபிடித்து அவைகளை களைத்து இருக்கிறார்களாம்

இவைகள் எல்லாம் நிதி அமைச்சர் அருண் செட்லி திருவாய் மலர்ந்திருக்கும் செய்திகள்

மேலே சொன்ன புள்ளிவிபரங்கள் எதிலாவது ஏழை எளிய மக்கள் வருவார்களா, இல்லை அவர்கள் தெருவில் மணிகணக்கில் கால்கடுக்க நின்றதனால் மேற் சொன்ன புள்ளிவிபரங்கள் வந்தனவா

மேலே சொன்ன நடவடிக்கைகளை நிர்வாகமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து இருக்க முடியும். அதை செய்வதை விட்டு விட்டு பொதுமக்களை இன்னலுக்கும் பயத்திற்கும் ஆளாக்கிய பாசகவை மக்கள் மற்றக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்.

மாணவர்கள் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு இந்தியில் பதில் சொல்லும் திமிர் எல்லாம் தமிழகத்தில் வந்து உடைந்து நைந்து போன தமிழ் வார்த்தைகளை பேசுவது போல் தான் இனி பாசகவின் நிலை இருக்கும்.

எவ்வளவு கூவினாலும் ஏமாற மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை, பொது மக்கள் இனி பெருமதிப்பு தாட்களை பயன்படுத்த போவதும் இல்லை சேமிக்க போவதும் இல்லை. மௌன சாட்சிகளாக இருக்கும் அந்த கோபக்கூட்டம் வரும் தேர்தலை நோக்கி காத்துக்கொண்டு இருக்கிறது. அன்றைக்கு தெரியும் உங்களின் இந்த கூவலுக்கான விடை அது வரை கூவுங்கள் கூவுங்கள் கூவிக்கொண்டே இருங்கள்......

0 comments: