பொருட்களை தயாரிப்பவரும் விற்பவரும், சேவை வழங்குபவர்களும் அவர்கள் செய்யும் தொழிலுக்கு உள்ள வரியை கட்டமாட்டார்களாம். அதற்கு பதில் அதை வாங்கி பயனடையும் பயனீட்டாளர்கள் 28% முதல் 40% வரை வரியை அவர்களுக்காக கட்ட வேண்டுமாம் அதுவும் எப்படி. சம்பாதித்த பணத்தில் 30% வரை வருமான வரியாக கட்டிய பின்பு கிடைக்கும் வருமானத்தில் தினமும் பயன்பாட்டில் இருக்கும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் 28% முதல் 40% வரை வரியாக கட்டவேண்டி மாதம் எத்தனை ஆயிரம் கோடி வரி வசூலாகியுள்ளது என்று அருண் செட்லி மாதம் தோரும் தரவுகளை வேறு வெளியிடுகிறார்.
இதே முறையில் மாத சம்பளம் வாங்கும் மனிதர்களுக்கு பிடிக்க வேண்டிய வரியை எல்லாம் நீக்கிவிட்டு பேசப்பட்ட முழு சம்பளத்தையும் மக்களுக்கு கொடுத்துவிட்டு. அந்த பணத்தில் அவர்கள் யார் யாரிடம் செலவு செய்கிறார்களோ அந்த வணிக முதலாளிகளிடம் இவ்வளவு வியாபாரம் செய்து இருக்கிறீர்கள். அந்த தொகைக்கு மக்கள் இவ்வளவு வருமான வரி கட்டி இருக்க வேண்டும். நடப்பு நடைமுறையால் அவர்கள் கட்டவில்லை. ஆகையால் உங்களின் பரிவர்த்தனையில் வந்த இந்த இந்த வியாபாரங்களுக்கு 30% வரை மக்களின் வருமான வரியாக PIT(Personal income tax) என்ற பெயரில் நீங்கள் எல்லாம் கட்டவேண்டும் என்று அரசு உத்தரவிடவேண்டும்.
இதனால் கோடி கணக்கான மக்கள் வருமான வரி கணக்கை செலுத்த வேண்டிய தேவையும் அது சார்ந்த பணிக்கு இலட்ச கணக்காக அரசு ஊழியர்களும் தேவை இல்லை. அரசும் தனியார் நிறுவனங்களும் மக்களின் பணத்தை பிடித்து வைத்துக்கொண்டு பிறகு மக்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்த பிறகு சரி பார்த்து திருப்பி கொடுக்கும் வேலைகள் எல்லாம் அரவே ஒழிக்கப்பட்டு சீரான நடைமுறையாக இருக்கும்.
இப்படி செய்வதால் மாத சம்பளம் வாங்காத மக்களின் வருமான வரிப்பணமும் அரசுக்கு சரியாக வந்து சேரும். ஆலோசிப்பார்களா ஆட்சியர்கள்.
உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்டினியா............. PIT கொண்டு வர வேண்டுகோள் வைக்கவேண்டும்.

0 comments:
Post a Comment