Tuesday, November 14, 2017

அசிங்கப்பட்டது தந்தி தொகா ரங்கராசு பாண்டேவா இல்லை பாசகவா - ப சிதம்பரம்



38 நிமிடம் ஓடும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் சிதம்பரம் கேட்கும் பதில் கேள்விகளுக்கு பாண்டே என்ன சொன்னார் என்று வெட்டி ஒளிபரப்பியதிலேயே தெரிகின்றது தந்தி தொகாவின் நேர்மை.

பல இடங்களில் பாசகவின் தமிழக கொள்கைபரப்பு செயலாலராக பாண்டே கேட்ட கேள்விகளுக்கு திரும்ப திரும்ப நிறுவ நினைத்தாலும் பூசி மொழுக முடியாமல் விழி பிதுங்கி வெட்டி ஒட்டியதை பார்க்க முடிந்தது.

சிதம்பரத்தின் ஞாயமான கேள்விகளுக்கு பாண்டேவின் பதில்கள் என்னவாக இருந்திருக்கும் என்று ஊகிப்பதைவிட என்ன என்று அவர்களே காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒன்றும் தெரியாதவர்களை பேட்டி எடுத்து குழப்பு அவமானபடுத்தும் நோக்கம் கொண்ட பேட்டியாக இந்த கேள்விபதில் நிகழ்ச்சியும் அமையும் என்று வந்திருந்த பாண்டே பெருத்த ஏமாற்றத்துடன் நிகழ்ச்சியை முடித்தது வெளிப்படையாக தெரிந்தது.

இந்த நிகழ்சியை பார்க்கையில் சென்ற ஆண்டு இறுதியில் புதிய தலைமுறைக்கு சிதம்பரம் அளித்த கேள்விபதில் கண்ணில்பட அதையும் பார்க்க, ஓராண்டாக அந்த விடை தெரியாத கேள்விகளும் மாறவில்லை அதற்கு சிதம்பரத்தின் பதிலும் மாறவில்லை. அன்றைக்கு இருந்த நிலையில்  இருந்து நாடு இன்னமும் மோசமாகத்தான் போய் கொண்டு இருக்கிறது, மோடியும் பாசகவும் சொல்வது போல் கொஞ்ச நாளில் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்னது போல் எல்லாம் ஒன்றும் இல்லை என்று வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றது.

முதல் பார்வையில் தந்தி தொகாவின் ரங்கராசு பாண்டே அசிக்கப்பட்டதாகத்தான் பட்டது, பிறகு தான் தோன்றியது ப சித்தம்பரத்திடம் எந்தவிதமான விவாதத்திலும் பாசக ஈடுபடாமல் தவிர்ப்பது இந்த பாண்டே போல் தானும் மக்கள் முன் அவமானப்பட்டுவிடுவோம் என்று பயந்து ஒதுங்கியுள்ளது என்று.

3 comments:

')) said...

சிதம்பரம் போன்றவர்களுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து சிதம்பரமே ஆச்சர்யப்படுவார்.

')) said...

Thanks for the You tube link. I'm not a subscriber of any Tamil channel. I came to know from you this excellent interview.

பாண்டே மீது எந்த குற்றச்சாட்டையும் வைக்க முடியாது. அவரே தான் பொருளாதார நிபுணன் அன்று. எனவே சாமானியனாகவே கேள்விகளைக் கேட்கிறேன் என்று சொல்லித்தான் கேள்விகள் தொடுக்கிறார். அவர் கேள்விகள் அனைத்தும் சாமானியருக்கு எழுவதுதான். குறிப்பாக ஏன் உ.பியில் பி ஜே பியின் பண இழப்புக்கொள்கைக்கு எதிராக மக்கள் வாக்களிக்கவில்லை போன்று. இப்பேட்டி சிதம்பரத்தை பேசவைக்க. அவர் பண இழப்புக்கொள்கைக்கு எதிராக பேசியும் எழுதியும் வருகிறார். இப்பேட்டியில் அவரின் கருத்துக்களின் சாராமசத்தை மக்களுக்குக் காட்டவே பாண்டே பேட்டி எடுப்பதாக நன்கு தெரியும். பாண்டே என்ன பதில் சொன்னார் என்பது முக்கியமே அன்று. இறுதியாக, சிதம்பரம் சம்மின் அப் பண்ணியதைவிட பேட்டியில் உள்ளே அவர் விளக்கமாக பேசியது நன்கு புரியும்படி இருந்தது. இப்பேட்டியும் மூலம் தந்தி டி வி சிதம்பரத்தின் பண இழப்புக்கொள்கைக்கு எதிரான கொள்கையை வெளிச்சம் போட்டு காட்டி சிதம்பரத்துக்குத்தான் விளம்ப்ரம் கொடுத்திருக்கிறது. உங்கள் பார்வை தலைகீழ்.

')) said...

பாண்டே மீது எனக்கு மட்டும் என்ன பகையா, பணமதிபிழப்பு நடவடிக்கை நாட்டின் 120 கோடி மக்களையும் தெருவில் நிற்கவைத்தது என்ற பதிலுக்கு 120 கோடி மக்களும் இல்லை இதிலே சிறு மற்றும் பெரு நிறுவனங்கள் மற்றும் கொழுத்த பணக்காரர்கள் எல்லாம் இல்லை என்று பாண்டே சொன்னவைகள் நோக்கம் கொண்டவைகளே. மேலும் 6 காலாண்டாக பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகின்றது என்ற பதிலுக்கு காங்கிரசு ஆசியிலும் தான் பொருளாதாரம் சரிந்தது என்று சொல்ல முற்பட்டது மிகவும் நுட்பமாக பொய்சொல்வது, திவலிக்கு திவலிக்கு என்று சொல்வது போல்.

இப்படி முழு நிகழ்சியையும் என்னால் எடுத்துக்காட்ட முடியும், சிகரம் வைத்தார் போல் தற்பொழுது நடக்கும் வருமான வரி சோதனைகளை துணைக்கு அழைத்து வேறு கேள்விகள். நாமும் தெரியாமல் தான் கேட்போம் 3 ஆண்டு கால பாசக அரசில் இப்போது தான் இந்த ஊழல் வாதிகள் எல்லாம் இவர்கள் கண்களுக்கு தெரிந்ததா.

நீதியரசர் குன்காவின் தீர்பிற்கு பிறகு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருக்கிறார் என்று அறிவித்த பிறகும் சசிகலா இத்தனை மாதம் சிறையில் அடைக்கப்பட்ட பின்பும் இப்போது தான் இந்த வருமான வரி துறையினருக்கு எங்கே எப்படி ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்த வேண்டும் என்று தெரிந்தாம்.

நீங்கள் நம்புங்கள் தோழரே பாண்டேவையும் பாசகவையும் எங்களுக்கு தெரியும் அவர்கள் யார் என்று.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி