Wednesday, October 18, 2017

பாசகவின் அடுத்த மதவா முன்னெடுப்புகள் இப்படி தான் இருக்கும் - Silence (2016) திரைவிமர்சனம்

படத்தின் செய்திகளுக்கு

மாற்று சிந்தனை, மதம், நம்பிக்கை என்று இருப்பவர்களை எப்படி எல்லாம் எதேச்சதிகாரம் கொண்டவர்கள் எப்படி படுத்துவார்கள் என்றதிற்கு இந்த படம் ஒரு விளக்க உரை.

சப்பானை பொறுத்த அளவில் அவர்கள் மேல் அந்த அணுகுண்டை வீசியது தவறு என்று வாதாடக்கூட மக்கள் தயங்குவார்கள். அந்த அளவிற்கு அவர்களின் அரசர்கள் மிகவும் மோசமாகவும் கீழ்த்தரமான சிந்தனையும் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள்.

கடைசியாக அந்த அணுகுண்டை வீசும் வரை உலகின் எல்லா திக்குகளிலும் சர்வதிகாரிகளுடன் சேர்ந்துக்கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டே தான் இருந்தார்கள்.

இந்த ஆட்டத்தின் ஒரு பகுதியாக கிருத்துவத்தை பரப்ப வந்தவர்களை என்ன என்ன பாடு படுத்தினார்கள் என்று இந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள்.

எந்த ஒரு நாடும் தன் நாட்டின் இறைமையை காக்க வேண்டிய கட்டாயத்திலும் கடமையும் கொண்டு இருக்கிறது. அந்த அந்த நாட்டின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை இல்லை தான்.

ஆனால் அப்படி பட்ட நாடுகளில் கழித்து கட்டிய மக்கள் என்று ஒரு பிரிவினர்கள் எப்போதும் உண்டு. இப்போது மியான்மரில் இருந்து விரட்டியடிக்க பட்ட மக்களை போல், ஈழத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்களை போல், சோர்டான் மக்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

அப்படி வாழவே தகுதி இல்லாதவர்கள் என்று முடிவுகட்டி ஊரை விட்டு வெளியே வாழும் மக்களுக்கு ஒன்றும் இல்லை என்றாலும் இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர கடவுள் நமக்கு வழிக்காட்டுவார் என்ற ஒற்றை நம்பிக்கையில் மட்டும் வாழும் அன்றாடம் காட்சி மக்களை சந்தித்து கிருத்துவை நம்புங்கள் உங்கள் வாழ்கையில் ஒளி கிடைக்கும் என்று நம்பிக்கையை கொடுத்து இருக்கும் மிச்ச மீதி நாட்களை வெறும் கையில் வெற்று நம்பிக்கையுடன் கடக்க உதவிய கிருத்துவ மத போதகர்கள் எந்த கதிக்கு ஆளாக்கினார்கள் என்ற விளக்கப்படம்.

இந்தியாவை பஞ்சம் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டிய காலத்தில் உலகத்து நாடுகள் கப்பல் துறைமுகங்களில் பால் பொடிகளையும் உணவு தானியங்களையும் கொண்டு வந்து அடுக்கிவிட்டு சென்று விட்டது. பஞ்சமும் நேயும் பிடித்து ஆட்டிய அந்த நாட்களில் கையில் உணவுடனும் மருந்துகளுடனும் இந்தியாவிற்கு வந்த கிருத்துவ திருசபையை சேர்ந்தவர்கள், அந்த நோய் தாக்கி தான் இறந்தாலும் அதுவும் இறைபணி என்று இந்தியாவின் ஏழை மக்கள் வாழும் பகுதிக்குள் சென்று தொன்டாற்றியதை போல் இந்த படத்திலும் செல்கிறார்கள்.

அந்த பாதிரிகளின் கண்ணில் காட்டப்படும் மக்கள் மிகவும் நலிவுற்று இரப்புக்கும் நிகழ்வுக்கும் அதிக தூரமோ வித்தியாசமோ இல்லை என்று வாழும் ஏழை விவசாய பண்ணையடிமை கூலிகள்.

தொலைந்து போன பாதரியை தேடியலையும் அந்த இருவரும் நிமிடத்திற்கு நிமிடம் எப்போது மாட்டுவோம் எப்போது கொல்லப்படுவோம் என்று மறைந்து வாழ்வதும். இரவின் இருட்டில் மட்டும் மக்களை சந்திப்பதும் என்று ஒரு திருட்டு வாழ்க்கையை போல் கழிக்கிறார்கள்.

கிருத்துவை நம்பும் மக்களை அந்த கிருத்துவின் உருவம் பொருத்திய தகட்டில் காலால் மிதிக்க சொல்வதும் அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை கடற்கரையில் கட்டிவைத்து அலையில் அலைகழித்து சாக்கடிப்பதும் உயிருடன் தீயில் இட்டு கொளுத்துவதும் என்று கொடூரமாக கதை நகர்கிறது.

ஒரு கட்டத்தில் பாதிரியை தேடி வந்த இருவரில் ஒருவனுக்கு நல்ல உடைகளை அணிவித்து தூரத்தில் மற்ற ஒருவனை நிப்பாட்டி அங்கே பார் அவன் கிருத்துவை தூக்கி எரிந்துவிட்டான் எப்படி சொகுசாக வாழ்கிறான் பார் ஆனால் நீயோ சாகப்போகிறாய் என்று ஏய்கும் கேவலமான செயல்களை எல்லாம் செய்து கொடுமைபடுத்துகிறார்கள்.

அந்த இளம் பாதிரிக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அவன் கண்முன்னே தோன்றும் அந்த கிருத்துவின் முகமும் அவர் இவன் கொண்டு இருக்கும் அதிதீர நம்பிக்கையும் மட்டும் தான்.

அந்த இளம் பாதிரியின் கண் முன்னே ஒவ்வொரு இரவும் உடன் இருந்த கிருத்துவை நம்பும் மக்களையும் பலியிடுகிறார்கள், கழுத்தில் ஒரு சிறு கீறல் கீறி சொட்டு சொட்டாக இரத்தம் வழியும் படி தலை கீழே தொங்கவிடவும் செய்கிறார்கள். பார்க்க பொறுக்காக அந்த இளம் பாதிரி கடைசியாக தானும் கிருத்துவின் படத்தை காலால் மிதித்து அவமதித்து சப்பான் இனமாக மாறுகிறான்.

பின்னர் அந்த இளம் பாதிரியும் அவன் தேடி வந்த பாதிரியும் இருவரும் சேர்ந்து சப்பானுக்குள் வரும் கிருத்துவம் சார்ந்த பொருட்களை அடையாளம் காட்டி முற்று முழுதாகவும் அழிக்கவும் உறு துணையாக இருக்கிறார்கள்.

அப்படி வாழ்ந்த அந்த இளம் பாதிரிக்கு மகனுடன் இருக்கும் ஒரு குடும்பத்தையும் அந்த குடும்ப பெயரையும் கொடுத்து சப்பானிலே சப்பானியராக வாழ வைப்பதோடு கிருத்துவை இகழ்ந்தும் பரிகாசித்தும் நூல் எழுத வைக்கிறார்கள்.

அத்தனை இன்னல்களுடன் வாழ்ந்த அவனிடம் மிஞ்சி இருந்த ஒரு சின்ன சிலுவை மட்டுமே என்று கதையை முடிக்கின்றார்கள்.

மோடி இந்த சனவரியில் ஒரு புதிய அறிவிப்பை அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார், அனேகமாக இப்படி ஒரு அறிவிப்பாத்தான் இருக்கும்.

நல்ல ஆட்சி நல்ல தேசம் என்று சொன்ன இவர்களால் வெறும் இன்னல்களையும் கசப்பு மருந்துகளையும் தான் நல்லா இருந்த மக்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்த தேர்தலுக்கு நாட்டையே இன்னும் ஒரு கோத்ராவாக ஆக்கினால் மட்டுமே இவர்களால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். ஆக நாட்டை பிளவுபடுத்த கிருட்ணசாமியை வைத்து அனிதாவுக்கு எதிராக பேச வைத்தது போல் நிகழ்வுகள் வன்முறையுடன் நிறைவேற்றுவார்கள் போலும். கற்பனையில் யோசிக்கவே மிகவும் பயங்கரமாக இருக்கிறது.

0 comments: