நேற்றைய செய்திகளில் சென்னையில் நடந்த GST கருத்தரங்கில் மத்திய அமைச்சர் வெளியிட்டு இருக்கும் கேணத்தனமான அறிக்கை. இப்படி அறிவு கொண்டவர் எல்லாம் நம்மை ஆட்சி செய்யும் அவலம்.
"சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் ஜிஎஸ்டி குறித்த
கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர்
வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
எந்த ஒரு மாற்றம் வந்தாலும் அதில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்.
முறையாக வரி கட்டுபவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஜிஎஸ்டி-யால் பாதிப்பு
இருக்காது. முறை யாக வரி கட்டாதவர்கள்தான் பாதிக்கப் படுவார்கள்.
ஜிஎஸ்டி-யால் வருவாய் அதிகரிப்ப தோடு, நாட்டின் மொத்த உள்நாட்டு
உற்பத்தியும் (ஜிடிபி) அதிகரிக்கும். ஜிஎஸ்டி-யால் வணிகர்கள் கவலைப்பட
வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் மக்களிடம் வரியை வசூலித்து அரசிடம் அளிக்க
உள்ளனர்.
ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து கட்சித் தலைவர் களிடமும்
ஆலோசனை நடத்தினோம். அதேபோன்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் நான் ஆலோசனை
நடத்தியபோது, “தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி-யால் தொடக்கத்தில் பயன் இருக்காது.
தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா போன்ற உற்பத்தி மாநிலங்களுக்கு
தொடக்கத்தில் வருவாய் இழப்பு இருக்கும். எனவே, தமிழகத்துக்கு ஏற்படும்
இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு இழப்பீட்டை அளிக்கும்” என்று தெரிவித்தேன்.
அதற்கு அவர், ‘ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதிமுக குறுக்கே
நிற்காது’ என்று தெரிவித்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். "
இதில் கேணத்தனம் என்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள், இதோ அந்த கேணத்தனம்
"ஏனெனில் அவர்கள் மக்களிடம் வரியை வசூலித்து அரசிடம் அளிக்க
உள்ளனர்"
இதில் தவறு என்ன இருக்கிறது என்று தானே நினைக்கிறீர்கள் அடுத்த வாசகத்தையும் கவனியுங்கள்
"எனவே, தமிழகத்துக்கு ஏற்படும்
இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு இழப்பீட்டை அளிக்கும்” என்று தெரிவித்தேன்"
எப்படி இவர்கள் கொண்டுவந்த கோமாளி தனமான வரிவசூலிப்பு முறையால் ஒன்று 10ஆக வரிகட்டி ஏமாந்தவர்கள் தமிழக மக்கள், ஆனால் இழப்பீடை தமிழக அரசுக்கு மைய அரசு கொடுக்கும்மாம்.....
கேட்பவர்கள் கேனையாக இருந்தால் எலி எரோப்பிளேன் ஓட்டுதுன்னு சொல்லுவானுக என்று ஒரு சொல்லாடல் உண்டு அது இது தான் போலும்.
இல்லை தமிழக மக்களுக்கு கொடுப்பதாகத்தான் சொன்னேன் என்று கேணத்தனமாக இன்னும் ஒரு அறிக்கை வராமல் இருந்தால் சரி. அப்படியே தமிழக மக்களுக்கு இந்த புதியவரி வசூலால் அடைந்த நட்டத்தை ஈடு செய்வதாக இருந்தால் எப்படி செய்வார்கள் மைய அரசு...
50 நாளில் தங்கள் வங்கி கணக்குகள் உள்ள வங்கியில் இந்த சூலை 1 முதல் செய்த செலவுகளின் இசேவைகளில் செய்த செலவுகளை கணக்கெடுத்து அவைகளை டக் அன்ட் லூயி முறைபடி நட்டஈடு கொடுக்க சொல்வார்கள் இந்த ஈன அரசு. உழைத்து கொண்டு வந்த பணத்தை பார்த்து கொக்கரித்த அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.....
0 comments:
Post a Comment