Tuesday, July 4, 2017

ஆதார் தான் ஆதாரம் - இன்னும் 30 ஆண்டுகளுக்கு பாசக ஆட்சி தான், அனைத்து மாநிலங்களிலும் பாசக தான்

ஆதாரை வாங்கு இல்லைனா குடிக்க தண்ணீர் கூட வாங்க முடியாத நிலைமையைத் தள்ளப்படுவாய் என்று சொல்கிறது பாசக அரசு. மக்களும் மிகவும் குழம்பிப்போய் தான் நிற்கிறார்கள்.

ரேசன் அட்டை இல்லாமல் எதுவும் கிடையாது என்றார்கள், பிறகு யாரோ ஒருவருக்கோ அல்லது ஒரு குழுவினருக்கோ வாக்காளர் அட்டை அடித்து தரும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. உடனே வாக்காளர் அட்டை இல்லாமல் எதுவுமே கிடைக்காது வாங்கு வாங்கு என்று கூவினார்கள். அந்த ஒப்பந்தகாரர்கள் கேட்போருக்கு கிலோ கணக்கில் விற்றது தான் மிச்சமாக வந்தது.

அதன் பிறகு இந்த ஓட்டுனர் உரிமம் அச்சடிக்க புதிய இயந்திரங்களை மா நில அரசுகள் வாங்கியது. அந்த இந்திரங்களை வாங்கியும் பழய உரிமம் இருந்தவர்கள் காலம் வரும் போது புதுபித்து கொள்ளலாம் என்று இருந்தவர்களை புகைபடத்துடன் கூடிய ஓட்டுனர் உரிமம் இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும் இல்லை என்றால் ஒன்றும் கிடையாது என்று அரசு அறிவித்தது.

பிறகு மைய அரசு 25,000 ரூபாய்க்கு மோல் பணபரிவர்த்தனைக்கு பான் கார்டுகளை பயன்படுத்த வேண்டும் என்று ஒரு விதியை கொண்டு வந்தது. இந்த சட்டம் வரும் போது 25,000 ஒரு பெரிய தொகை, அனால் இன்றோ கையேந்தி பவனில் இரவு உணவு சாப்பிட்டாலே 300 ரூபாவை தாண்டுகிறது என்ன கணக்கோ நிதியமைச்சரை கேட்டால் தான் தெரியும்.

பிறகு இப்போ ஆதார் அட்டையை அடிச்சு கொடுக்கிற ஒப்பந்தத்தை யாருக்கு கொடுத்தானுவலோ லோ லோன்னு எல்லாத்துக்கும் ஆதார் அட்டை இல்லைனா திருப்பதி லட்டு கூட கிடைக்காதுன்னு நிலைமை.

இப்படி ஆதார் ஆதார்ன்னு அலைய ஒப்பந்தகாரர்கள் மட்டும் காரணம் இல்லை, மாறாக படிப்படியாக மக்களை ஆதார் இல்லை என்றால் குறிப்பிட்ட பொருளோ அல்லது செயலோ செய்வதற்கு இல்லை என்று மெதுவாக பழக்கப்படுத்தி வருகிறார்கள் பாசகவினர்.

 நாளை தேர்தல் நடக்க இருக்கும் நாட்களுக்கு முன் ஆதார் அட்டை இல்லாதவர்கள் ஓட்டு போட முடியாது என்று அறிவிப்பார்கள் இவர்கள். மைய அரசின் கொள்கை முடிவில் மக்கள் உரிமை மீறப்படுகின்றது என்று எந்த எந்த நீதிபதிகள் எல்லாம் கூறினார்களோ அவர்களை எல்லாம் மாற்றிவிட்டு ஆமாம் சாமி போடும் நீதிபதிகளாக களம் இறக்கியுள்ளார்கள் பாசகவினர்.

 நாளையே நீதிமன்றம் சென்று ஆதார் அட்டையை தேர்தலுக்கு கட்டாயம் ஆக்க கூடாது என்று கேட்டால், 5 வருடமாக ஆதார் அட்டையை பெற முடியவில்லை என்றால் அவர்களுக்கு தேர்தலில் விருப்பம் இல்லை என்று தான் சொல்வார்களே அன்றி திணிப்பது தவறு என்று சொல்ல மாட்டார்கள்.

திருப்பதியில் இலட்டு வாங்க ஆதார் அட்டை எதற்கு ஒரு ஞாயமான காரணத்தை சொல்லுங்கள் பார்ப்போம். கள்ள வழியில் இலட்டு விற்பதை தடுக்க என்று மட்டும் சொல்வார்கள் பிறகு சட்டம் ஒழுங்கு வருமான வரித்துறை என்று எல்லாம் எதற்கு ஐயா சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆள் வைத்து இருக்கிறீர்கள் என்று கேளுங்கள், ஒரு ஆதார் அட்டைய வாங்க உங்களுக்கு இவ்வளவு கடினமா என்று நம்மையே திருப்பி கேட்பார்கள்.

ஆதார் அட்டையை கட்டாயாமாக்கிவிட்டால் ஒரு ஊரில் மொத்தம் 300 ஓட்டு என்றால் 299 ஓட்டுகள் வரை பதிவானது என்று எல்லாம் இனிமேல் வர வாய்ப்பு இல்லை என்று சந்தோசப்படலாம்.

ஆனால் எந்தனை மக்களின் ஆதார் அட்டைகள் தேர்தல் நாளன்று வேலை செய்யாமல் போகும் என்றது உங்களுக்கு தெரியுமா, இப்பவே வயதானவர்களின் கை ரேகைகளை எடுக்கமுடியாமல் அலை பேசிக்கு இணைப்புக்கூட கொடுக்க முடியாமல் விழி பிதுங்குகிறது ஆதார் அட்டையை கொண்டு இணைப்பு கொடுப்பவர்களால். பிறகு தேர்தல் நேரத்தில் மட்டும் எப்படி இந்த ஆதார் அட்டைகள் வேலை பார்க்கும்.

ஆக அந்த ஊரின் 300 ஓட்டுகளில் கிட்டதட்ட 150 ஓட்டுகள் தான் தேறும். அப்படியே தேறிய ஓட்டில் பாசக அல்லாத ஓட்டுக்களை பெயர் முகவரி படங்கள் வைத்து ஊருக்கு ஊர் அடையாளம் காண்பது எளிது.

அப்படி அடையாளம் காணப்பட்ட வாக்காளர்களின் ஆதார் அட்டைகள் தேர்தல் நாளன்று வேலை செய்யவிடாமல் தடுப்பதற்கு ஒன்றும் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய தேவை இல்லை. ஒரே ஒரு டேட்டா பேசு அப்டேட்டு மூலமாக ஊர் ஊராக அழகாக கவித்து விட முடியும்.

தேர்தல் முடிந்து முடிவுகள் செல்லாது என்று அறிவிக்க நீதிமன்றம் சென்றால் அன்றைக்கு மோடி புதிதாக ஒரு இந்தியாவை பெற்று எடுத்திருப்பார், அந்த புதிய இந்தியாவில் ஆதார் இல்லாதவர்கள் எல்லாம் ஏற்கனவே பாக்கிட்தானத்திற்கு போக மோடியின் சம்பந்தி நவாசு சரீப்பிடம் சொல்லி பாசுபோர்டு விசா எல்லாம் வாங்கியாச்சு என்று ஒரு நடு இரவு மசாலாவில் மோடி அடவு கட்டி ஆடுவார்.

பிறகு என்ன மறுபடியும் ஒரு 5 ஆண்டுகள் உருண்டோடும், 5 ஆண்டுகள் நடக்கப்போகும் அந்த வழக்கில் இனி வரும் தேர்தல்களில் இந்த இந்த விதி முறைகளை எல்லாம் கடைபிடிக்க நீதிமன்றம் நிபந்தனைகள் விதிக்கும், பாசக அவைகளை எல்லாம் அப்படியே எடுத்துகொள்ளத் தேவை இல்லை என்று அழகாக சொல்லும். பிறகு பரோட்டா சோக்கு மாதிரி மறுபடியும் முதல்ல இருந்து. இப்படியே சளிக்க சளிக்க அட்சி செஞ்சு அவர்களுக்குள் ஒரு துரோகி கிளம்பி வெளியில் வந்தால் தான் எல்லாம் முடியும். அந்த துரோகிக்காக இந்தியா இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்துகிடக்க வேண்டி இருக்குமோ......

0 comments: