Monday, July 10, 2017

GSTயால் உருவான இணை பொருளாதாரத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள்

கள்ளப்பணம், கருப்புபணம், கணக்கில் வரா பணம், பதுக்கல் பணம் என்று எல்லாம் கூறி இந்தியாவின் பெருமளவு பணத்தை பணமதிப்பிழப்பாக அறிவித்தது பிரிவினைவாத பாசக அரசு.

இந்த நடவடிக்கையின் தேவை என்ன என்று ஏழை எளிய மக்கள் கேட்டதற்கு இந்தியாவில் 1000 ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டால் 250 நோட்டுகள் மட்டும் தான் திரும்பி வருகின்றது மிச்சம் எல்லாம் பதுக்கல் ஆகுகின்றது, பிறகு இந்த பதுக்கல் பணமே இணை பொருளாதாரமாற உருவெடுத்து நாட்டின் வளர்ச்சியையே கொல்கின்றது என்று ஒரு வாதம் இணையத்தில் பரப்ப படுகின்றது.

நானும் தான் அலசி பார்க்கின்றேன் நாட்டின் மொத்த பணத்தில் 75% பணத்தை இப்படி அமுக்கி வைத்தால் இருக்கின்ற 25% பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி மற்ற காரியங்கள் எல்லாம் நடக்கின்றது என்று. எப்படி கணக்கிட்டாலும் 75% சதவிகிதம் என்றது மிகவும் மிகைப்படுத்தபட்ட அளவே.

தவிர இப்படி பதுக்குபவர்கள் எல்லாம் தொழிலில் சம்பாதித்த பணம் என்ற கொசுரு தகவல் வேறு தறுகிறார்கள்.

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும், ஒன்றுமே தெரியாத மக்கள் தான் கிடைத்த பணத்தை பதுக்கிவைத்து இருப்பார்கள், ஆனால் தொழில்புரிவோர் அப்படி வைக்க சாத்தியம் இல்லை, இல்லவே இல்லை.

அவனிடம் இருக்கும் உபரி பணத்தை அமுக்கி வைத்து இருக்க எந்த அளவில் தொழில் செய்யும் முதலாளியும் முட்டாள்கள் இல்லை. பிறகு எப்படி இந்தியாவில் அச்சடித்து வெளியிடும் இந்திய ரூபாயில் 75% சதவிகிதம் பதுக்குகின்றார்கள் என்று பரப்புகிறார்கள், அதுவும் துக்ளக் போன்ற செய்தி ஊடகங்களில்....

இணை பொருளாதாரம் நடத்தும் தொழில்கள் எல்லாம் யார் யார் என்று கேட்டால் குருமூர்த்தி சொல்லும் பட்டியல்கள் இவைகள் தாம்.

தண்டல்காரன், வட்டிக்கு விடுபவர்கள், வார சந்தைகளில் வியாபாரம் நடத்துபவர்கள், அண்ணாச்சி கடை நடத்துபவர்கள், தெருவில் கீரை, தயிர், பால் விற்பவர்கள் என்று மனசாட்சியே இல்லாமல் பட்டியலை அடுக்குகிறார்.

குருமூர்த்திகளின் கருத்துப்படி இவர்கள் தான் இந்தியாவின் 75% சதவிகித பணத்தை கையாளும் தொழில் முதலாளிகளா???

இந்தியாவின் ஆய்வறிகைகளின் படி வருமான வரிக்கட்டுவோர் வெறும் 15% மட்டுமே. இது சம்பளம் வாங்கி அந்த பணத்தில் வருமான வரிக்கட்டுபவர்களும் தொழில் நடத்தும் மக்களும் அடக்கம்.

அப்படி என்றால் மீதம் இருக்கும் 85% விகிதமக்கள் எல்லாம் இவர்களின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களா???? கணக்கு இடிக்கின்றதே.......

தற்பொழுது அறிவித்து இருக்கும் GST வரியால் அனேகமாக அனைத்து வியாபாரிகளும் தனது எண்ணத்திற்கு தகுந்தாற்போல் அல்லவா வசூலிக்கிறார்கள். கேட்டால் இன்றையில் இருந்து இவ்வளவு என்று நள்ளிரவு கூத்தில் அறிவித்தது உங்களுக்கு தெரியாதா என்று நக்கலாக கேட்கிறார்கள்.

இந்த புதிய GST வரியால் விலை எல்லாம் குறையும் என்று தான் சொல்கிறது அரசு, இந்த 10 நாட்களில் எந்த பொருளின் விளையும் குறையவே இல்லை, மாறாக தாறுமாறாக ஏகிறித்தான் இருக்கின்றது.

500, 1000 நோட்டுகள் செல்லாது என்று சொன்னபோது கைக்கட்டி வேடிக்கை பார்த்தது போல் தான் இப்போதும் மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் அது மட்டும் இல்லாது எப்படி எல்லாம் இந்த புதிய GST வரியின் பாதிப்பில் இருந்து தப்பிப்பது என்று செலவுகளை குறைத்துகொள்ள மட்டுமே செய்திகளை பரப்புகிறார்கள்.

இதில் மிகப்பெரிய வியப்பு என்றால் இந்த வரிவிதிப்பினால் ஏறிய விலைவாசிகளை கட்டுப்படுத்தாமல் விட்டதையும், அது சீர் செய்யும் வரை இந்த புதிய வரிவிதிப்பை நிறுத்திவைக்க சொல்லி இது வரையில் ஒருவர் கூட நீதிமன்றத்தை நாடாமல் இருப்பது மிகவும் வியப்பாகவும் வேதணையாகவும் விந்தையாகவும் இருக்கிறது.

மக்களும் விழித்துகொள்ளப்போவதும் இல்லை, கொள்ளையர்களும் நிறுத்தப்போவதும் இல்லை, அரசும் புதிய அறிவிப்பு செய்ததோடு சரி வேறு எதுவும் செய்யப்போவதும் இல்லை.

இப்படி கொள்ளை அடித்து வளர்ப்பது தான் இணை பொருளாதாரம் மற்றப்படி குருமூர்த்திகள் சொல்வது போல் வளர்வது இல்லை இணை பொருளாதாரம்.

நல்லா நடத்துராங்கையா அரசு, முதலில் இந்த வரிவிதிப்புகளை கையாளும் முறைகளை முறைமை படுத்திவிட்டு தானே இந்த வரிவிதிப்பை கொண்டு வந்து இருக்க வேண்டும் அதைவிடுத்து, விலை குறையும் குறையும் என்று கூவினால் மட்டும் போதுமா........என்ன என்ன விலைகள் இது வரையில் குறைந்து இருக்கிறது என்று மக்களில் ஒருவராவது சொல்லட்டுமே பார்க்கலாம்.

இந்த இண்டேன் கேசு போடுவேன் என்று சொல்லும் எச்சி ராசா, தமிழிசை, வானதி, பொன்னாரு, குருமூர்த்தி, நாராயணன் இன்னும் சல்லியடிக்கு சங்கிகள் இது வரையில் பதுங்கி இருப்பதும் ஏனோ தெரியவில்லை. எங்கே தைரியம் இருந்தால் வந்து விளக்குங்களேன் பார்ப்போம். நீங்களும் உங்க இணை பொருளாதார விளக்கங்களும்......ஊழலை ஒழிக்க வந்த அவதாரங்களே விளக்குங்கள்...

இதிலே அமெரிக்காவில் 95% மக்கள் வரிக்கட்டுகிறார்கள் என்ற பொய் தகவல் வேறு, அமெரிக்காவில் 95% மக்கள் வருமான வரி கணக்கை தான் கொடுக்கிறார்களே அன்றி வரி எல்லாம் கட்டுவது இல்லை. வருமானம் இவ்வளவு செலவீனம் இவ்வளவு ஆகையால் வரிக்கட்ட தேவையில்லை என்று கணக்கு காட்டுவார்கள். இதிலே பெயருக்கு ஒரு உப்புமா நிறுவனங்களை தொடங்கி அதன் பெயரில் நடக்கு வரி ஏய்புகள் ஏராளம். கடந்த பொருளாதார மந்த காலங்களில் கலிபோர்னியா மாகனம் முழுதும் போன்டியான கதை எத்தனை இந்தியர்களுக்கு தெரியும் எந்த தைரியம் தான் இந்த குருமூர்த்திகளை இப்படி பேச வைக்கின்றது.

2 comments:

Anonymous said...

////தொழில் நடத்தும் மக்களும் அடக்கம்.//

Majority of our 'mandi' business men are cheating the govt and getting escaped from IT. How many annachi kadai's are paying bills? Let me tell you, I see this vendor chain as one of the mafia groups of India. Even Tata/birla can't stand before them. They created as many issues as they can to compete and close their shops. Not only that, they take advantage in raising the price blaming GST. Assume, actual price hike is 2 rupees because of GST, they easily raise 5 to 10 rupees. Remaining going to Govt's pocket?

Still I confirm my point - thozhil nadathum are also equally corrupted.

')) said...

நானும் அதையே தான் சொல்கின்றேன், ஊழலின் ஊற்று கண்ணை விட்டுவிட்டு ஊழலை ஒழிக்கின்றேன் என்றால் என்ன பொருள். உண்மையில் இருக்கும் இணை பொருளாதாரம், வணிக மற்றும் பெருவணிக நிறுவனங்கள் நடத்தும் மோசடிகள் மட்டுமே. அந்த மக்களை எல்லாம் அறிக்கையில் கூட குறிப்பிட்டது இல்லை இந்த பிரிவினைவாத பாசக அரசு. ஆனால் சங்கிகள் எந்த ஒரு செய்தி வெளியிட்டாலும் இந்த மக்களை குறிவைத்து தாக்குவது எழுதுவதும் வேதணையாக இருக்கிறது.