இதுவும் அதுவும் பெண்கள் குத்துச்சண்டையை மையமாக கொண்டது தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நம்பும் அளவிற்கு அழகாக மாற்றி எடுத்து இருக்கிறார்கள்.
எப்படி மாற்றி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஆங்கிலத்தில் பயிற்சியாளர் வயதானவர், ஒரு கட்டத்தில் இந்த வயதிற்கு பிறகு இன்னும் ஒருவரை தயார் செய்து போட்டியில் இறக்கும் வயதிலா நான் இருக்கிறேன் என்று அந்த பாத்திரமே பேசும் அளவிற்கு வயதானவர் கிளின்ட்டு ஈசுட்டுட்டை போல்.
தமிழில் அதையே நடுத்தர வயது இளைஞனாக மாற்றிவிட்டர்கள்.
அந்த முதிய வயதிலும் படத்தின் ஒரு இடத்தில் கூட சவரம் செய்யாமல் தோன்றும் தோற்றம் இல்லை ஆங்கிலத்தில்.
தமிழிலோ பரட்டை தலை மழிக்காத முகம் என்று மாற்றிவிட்டார்கள்.
ஆங்கிலத்தில் அடுத்த 3 போட்டிகளுக்கு பிறகு உலக குத்து சண்டைக்கு தயாரக கொண்டு வந்த வீரன் சொல்லிக்கொள்ளாமல் பயிற்சியாளரை விட்டு ஓடி விடுவான். அதை தொடர்ந்து என்ன செய்ய போகிறேன் என்று திணறி நிற்பார்.
தமிழிலோ கட்டிய மனைவி ஓடிவிட்டாள் என்று மொட்டையாக முடித்து, என்னை விட உலக வீரன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றது தான் அவளுடைய ஆசையாக இருந்தது என்று பட்டும் படாமல் சொல்லி முடிப்பதாக மாற்றிவிட்டார்கள்.
ஆங்கிலத்தில் மோர்கன் பிரிமேன் நடித்த பாத்திரத்தில் தமிழில் நாசர், ஆங்கிலத்தில் அவருக்கு ஒரு கண் குருடாகி இருக்கும் தமிழிலோ நாசரின் முன் பல் காணாமல் போனதாக ஒப்பனை இருப்பதை பார்க்க முடிகிறது. ஏன் பல் போனது என்று ஒரு விளக்கம் இருந்து இருக்க வேண்டும் அப்படியே மூலம் போல் வருகிறது என்று வெட்டி விட்டார்கள் போலும். மேலும் அமெரிக்க கருப்பர்கள் பேசும் ஆங்கிலம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் அதையே நாசரின் சென்னை தமிழாக மாற்றிவிட்டார்கள்.
ஆங்கிலத்தில் தனக்கு பயிற்சி கொடுக்கும் படி அவனையே சுற்றி வருவாள் நாயகி. தமிழில் பயிற்சிக்கு வா வா என்று நாயகன் சுற்றுவதாக மாற்றி விட்டார்கள்.
ஆங்கிலத்தில் பணத்தை பார்த்து பார்த்து சேர்த்து வைப்பவனாக காட்டி இருப்பார்கள், அவனை போல் அந்த பெண்ணையும் மோர்கனையும் வலியுறுத்தி சொல்லும் படி வசனங்கள் வரும்.
தமிழில் நாயகன் கையில் இருக்கும் காசை எல்லாம் இவளுக்காக கொட்டி இறைப்பதாக மாற்றிவிட்டார்கள்.
ஆங்கிலத்தில் நாயகி ஓர் சின்ன கிராமத்தில் இருந்து வந்த ஒரு 30 வயதுகாரி எந்த வித குத்துச்சண்டை தொடர்பும் இல்லாமல் தனக்கு இருக்கும் வலிமையும் சண்டை செய்யும் ஆசையும் கண்டு குத்துச்சண்டை வீராங்கனையாக வேண்டும் கிளின்டு பயிற்சியகத்தில் வந்து சேர்கிறாள்.
தமிழிலோ சென்னையின் ஒரு புரநகர் சேரியில் இருப்பதாகவும் அவளது அக்கா சின்ன வயதில் இருந்து சண்டை பயிலுவதாகவும். அதை பார்த்து தானும் கத்துக்கொண்டதாக மாற்றி விட்டர்கள்.
ஆங்கிலத்தில் நாயகின் அம்மா 314 பௌன்டு எடை என்று சொல்லி ஒரு குண்டு பெண்மணியை காட்டுவார்கள், தமிழில் ஒரு மெல்லிய மேனியாளாக நாயகியின் அம்மாவை மாற்றிவிட்டர்கள்.
ஆங்கிலத்தில் நாயகியின் அப்பாவை ஒரு பொருப்பான வராகவும் அதை தொடர்ந்து பின் கதைக்கு தேவையான ஒரு கதையும் நாயகி சொல்வாள்.
தமிழில் அப்பா ஒரு ஊதாரியாக மாற்றிவிட்டர்கள், மேலும் பின் கதைக்கு தேவையான செங்கிட்தான் கதையை நாயகன் சொல்வதாக மாற்றிவிட்டார்கள்.
ஆங்கிலத்தில் 20 வினாடிகளில் அதிரடியாக அடித்து முடிக்காமல் நிதானமாக சண்டை போட சொல்லி சொல்வார். ஆனால் அவளோ நிதானமாக எல்லாம் எனக்கு வரவில்லை என்று மேடையில் இருந்தே சொல்வாள்.
தமிழில் நாயகிக்கு நிதானமாக எல்லாம் அடித்து ஆட முடியாததனால் அதிரடியாக அடித்து ஆடு என்று மாற்றிவிட்டார்கள். மேலும் வேண்டும் என்றே தப்படி அடிப்பதாகவும் அதை மாற்றிவிட்டார்கள்.
கடைசியாக நடக்கும் சண்டையில் வில்லியின் காலில் குத்தி அவளை பலவீன படவைத்து பிறகு முகத்தில் குத்து என்று இருக்கும் ஆங்கிலத்தில், அதை அப்படியே தமிழில் கையாக மாற்றிவிட்டு பிறகு முகத்தில் குத்துவதாக மாற்றிவிட்டார்கள்.
இறுதிப்போட்டிக்கு நாயகியை அனுப்பலாமா வேண்டாமா என்று தடுமாற்றம் நாயகனின் மனதில் இன்னமும் பயிற்சி நிறைய கொடுத்தது பிறகு என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வருவதாக ஆங்கிலத்தில் வருகிறது.
தமிழிலோ வேறு ஒருவர் நீ அர்சுனா விருது வாங்கினியா அப்படி இப்படி என்று அரசியலாக ஆக்கிவிட்டார்கள்.
ஆங்கிலத்தில் நாயகியின் வீட்டார்களை பார்த்துவிட்டு அவர்களின் பேராசை செய்கைகளில் மனம் வெறுத்த நிலையில் தனது தந்தையையினுடனான நெகிழ்ச்சியாக தருணங்களை நினைவுகளாக பயிற்சியாளனிடம் வெளிப்படுத்துவாள். உயிரோடு இல்லாத தந்தை போல் பயிற்சியாளரை பார்ப்பதாக சொல்லாமல் சொல்வதாக மிகவும் அருமையாக வசனங்கள் அமைத்த இடம்.
அதை தமிழில் புடவைகட்டி மீன் கொழம்பு கொண்டு வந்து நான் உன்னை காதலிக்கிறேன் என்று மாற்றிவிட்டர்கள்.
ஆங்கிலத்தில் பயிற்சியாளருடன் பார்க்கும் அவளது குடும்பத்தாளர்கள் அவள் அந்த வயதானவருடன் சேர்ந்து வாழ்வதாக சந்தேகித்து முறையான திருமண வாழ்கையை ஏற்படுத்திகொள்ளும் படி ஏசுவார்கள்.
அதையே தமிழில் பொம்பள பொறுக்கி எப்ப பாத்தாலும் மதி மதின்னு அப்படி என்ன தான் பண்ண அவனை என்று சகோதரி கேட்பதாக மாற்றிவிட்டர்கள்.
ஆங்கிலத்தில் ஐரோப்பவின் குத்துச்சண்டைக்கு அவளுக்கு என்று ஒரு பச்சை பட்டங்கி மேலாடையை அவளுக்காக கொணர்ந்து கொடுப்பார்.
தமிழில் அதே பட்டு மேலங்கி ஆனால் நிறம் சிகப்பு அங்கியில் மோ குசல்லுக்கு பதில் இந்தியா என்று பெயர் மாற்றம்.
ஆங்கிலத்தில் அந்த இறுதி சண்டைக்கு பிறகு படம் இன்னமும் 30 நிமிடத்திற்கு மிகவும் உருக்கமாகவும் அழுத்தமாகவும் சென்று மிகவும் சோகமாக முடிகின்றது. தமிழிலோ அந்த இறுதி சண்டையோடு மகளிர் குத்து வீரர்களுக்கு சமர்பணம் என்று முடித்து விட்டார்கள்.
ஆங்கிலத்தில், பார்த்தது முதல் கடைசி மூச்சு வரை பயிற்சியாளரை பாசு என்று பக்தியுடனும் மரியாதையுடனும் விளிப்பாள் நாயகி, தமிழில் என்னை கோச்சு என்று மரியாதை என்று கேட்டு வாங்குவதாக மாற்றியுள்ளார்கள்.
ஒரு குத்துச்சண்டையாளியாக ஆன பிறகும் அந்த சின்ன வீட்டில் ஒரு தொகா பெட்டி கூட இல்லாமல் இருப்பாள் தான் முன்னே பார்த்த அதே உணவு பரிமாளியாக.
தமிழில் வீட்டை விட்டு விரட்டப்பட்டு ஒரு ஒன்டு வீட்டு மாடியில் வசிப்பதாக மாற்றிவிட்டார்கள்.
இப்படி காட்சிக்கு காட்சி வசனத்துக்கு வசனம் என்று எடுத்து காட்டும் படியாக ஆங்கில படத்தை அப்படியே 360 டிகிரிக்கு மாற்றி வேறு ஒரு படமாக மணிரத்னம் பாணியில் அவரது சீடர் சுதா எடுத்துள்ளார்.
என்ன மணியாக இருந்தால் இன்னேரம் இராமாயணம் மகாபாரதம் என்று எதையாவது கதையாக விட்டு அசலில் சாயலை மக்கள் மறந்து போகும் விதமாக விளம்பரப்படுத்தி இருப்பார். சுதாவோ அப்படியே விட்டு விட்டார்.
இவ்வளவும் இருப்பினும் தமிழில் படம் நன்றாக வந்து இருக்கிறது மக்களுக்கும் பிடித்து இருக்கிறது. சக்குதே இந்தியா படத்தில் எப்படி ஆக்கியை மையமாக அமைத்த படமாக இருந்தாலும் ஆக்கியை பற்றி ஒன்று கூட சொல்லாமல் வெறும் உணர்ச்சிகர வசனங்களும் தேசபற்றும் மட்டும் காட்டி செல்வது போல் குத்துச்சண்டை என்று சொல்லி என்ன எப்படி என்ற எந்த விளக்கங்களும் இல்லாமல் பாலியல் தொல்லை அரசியல் என்று அழகாக இரசிகர்களை மோடிவித்தையாக் ஏமாற்றி போகிறார் சுதா.
பார்க்கலாம் அடுத்து எந்த படத்தை 360 டிகிரி மாற்றி எடுகிறார் என்று.
மணிரத்னத்தின் இராவணன் ஒரு ஆங்கிலப்படம்
ஓ காதல் கண்மணி - மணிரத்தினம் மறுபடியும் தனது பாணியில் The Notebook
இந்த இறுதிச்சுற்று படத்தை பார்த்த பாலா ஏன் இவ்வள உணர்ச்சி வசப்பட்டார் என்று பிறகு சொல்கிறேன்.

5 comments:
You mean Tamil film is not all related to English film ? All I could see are differences. Not similarities or copied.
இரண்டும் ஒன்றே ஆனால் வித்தியாசமாக இருப்பதற்காக பட்டியல் இட்ட மாற்றங்களை மட்டும் பயன் படுத்தி வேறு படம் போல் ஆக்கி இருக்கிறார்கள்.
படத்தின் விமர்சனத்தைப் படித்தபோதே தெரிந்துவிட்டது இது பில்லியன் டாலர் பேபி படத்தின் காப்பி என்று.
படத்தை பிரதி எடுத்து கொண்டு தமிழிலோ அல்லது வேறு மெழியிலோ தரட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால், கதை, திரைகதை வசனம் இயக்கம் என்று எல்லா துறையிலுமே அசலுக்கு குறையாத பிரதியாக எடுத்துவிட்டு, இன்னமும் இளப்பமான சொன்னால் ஈ அடிச்சான் பிரதியாக எடுத்துவிட்டு கதை, திரைகதை, வசனம், இயக்கம் சுதா என்று போடும் போது தான் பிரச்சனை வருகிறது. வெறும் இயக்கம் என்று மட்டும் அல்லது இணை கதை, இணை திரைகதை, இணை வசனம் என்று எழுதினால் கூட பரவாயில்லை. அடுத்தவன் கடினப்பட்டு கட்டிய வீட்டின் அமைப்பில் அப்படியே இன்னும் ஒரு வீடு கொத்தானார் கட்டுவது போல் கட்டிவிட்டு இது என்னுடைய படைப்பு என்று சொல்வது அது மஞ்சள் வீடு இது சிகப்பு அதனால் தனி படைப்பு என்று சொல்வதும் தான் வேடிக்கையாக இருக்கிறது.மணியை போல் இவரும் ஒரு சுற்று வருவார் அடுத்தது எந்த ஆங்கிலப்படம் பலியாக போகின்றதோ....
இதுல மைக்கு டைசன் படத்தை பார்க்க விறும்பியதாக ஒரு விளம்பரம் வேறு படத்திற்கு ஆனாளாப்பட்ட ராக்கி படத்திலே குத்துச்சண்டையை பற்றிய எந்த விபரமும் பார்வையாளர்களுக்கு சொல்லப்படவில்லை வெறும் உணர்ச்சி வசப்படும் வசனங்களும் ஓங்கி அடிக்கும் அல்லது அடிவாங்கும் காட்சிகளை தவிர்.... அட போங்கப்பா......
அப்படினா எந்த படத்தல தான் காட்டி இருக்கிறார்கள் என்று கேட்பது புரிகின்றது, பாடி லைன் என்று கிரிகட்டு ஆட்டம் பற்றிய ஒரு படம் உண்டு அதில் ஆட்டம் எப்படி ஆடப்படுகின்றது அதை எப்படி பிளப்பது என்று அழக்காக காட்டுவதை போல் உள்ள படமாக இருந்தால் மைக்கு டைசன் பார்க்க வேண்டும் என்று சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அல்லது ரிமம்பரிங்கு த டைட்டன் படமாகட்டும் எப்படி விளையாடுவது என்று அழக்காக காட்டி இருப்பார்கள். இந்த படத்தில் தன் மேல் கொண்டுள்ள நிறவெறியையும் கடந்து ஒரு பயிற்சியாளனாய் எப்படி வெற்றி பெருகிறார் என்று அழகாக நுட்பங்களுடன் காட்டி இருப்பார்கள், அப்படியல்லவா காட்டி இருக்க வேண்டும்.
சரி இது எல்லாம் கூட போகட்டும் MDBயில் காட்டியது போல் முதல் விதி தன்னை காத்துகொள்வது தான் என்று கிளின்ட்டு சொல்லும் பேச்சை கேட்காமல் கவனக்குறைவால் தாக்குண்டு பரிதாபமாக இறக்கும் அந்த அப்பாவி பெண்ணின் கதையை போலவாது காட்டி இருக்கனும் அதைவிடுத்து மானே தேனே பொன்மானே மட்டும் போட்டு மெட்டை நிரப்பியது போல் அமைத்துவிட்டது ஏமாற்றமே.....
காரிகன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
BGM interstellaroda copy adha vittutteengale?
Post a Comment