Wednesday, February 24, 2016

பத்தேமாரி - மளையாள பட விமர்சனம்

தாய்க்கு அடுத்து தலைமகன் தாயுமானவன் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லும் படம்.

கிட்டதட்ட சுவர் இல்லாத சித்திரங்கள், வறுமையின் நிறம் சிகப்பு, நிழல்கள் வகையான படைப்பு இந்த படம்.

குடும்பத்தில் வறுமை, தகப்பன் இல்லாத குடும்பம். இந்த நிலையில் குடும்ப பொருப்பை சுமக்கும் கடன் தலைமகனுக்கு விதிக்கப்படுகின்றது.

என்ன செய்வது என்று தெரியாமல் துபைக்கு கள்ள தோனியில் பயணிக்கிறார் நாராயணன், அங்கே சென்றதும் கப்பலில் இருந்து குதித்து கடலில் நீந்தி கரை சேர்ந்து இரவில் கூட்டதோடு கூட்டமாக கலந்து துப்புரவு பணியாளாய் வேலையை தேடிக்கொண்டு கிடைக்கும் சம்பளத்தை குடும்பத்திற்காக கொடுக்கும் ஒரு மெழுகு வர்த்தியின் வாழ்க்கையை வாழ்கிறார் நாராயணன்.

அரும்பு மீசையுடன் அரபு நாட்டிற்கும் வரும் அவன் கிட்டதட்ட ஒரு 30 வயதில் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகிறான். வருபவனுக்கு மேலும் மேலும் கடன் சுமைகளை குடும்பம் ஏற்றுகிறது.

மேலே ஏற்றிய சுமையை அடைக்க மறுபடியும் துபை பயணம். அங்கே மேலும் இருக்கும் நாட்களில் இடையில் அவனது தாய் மரிக்கிறார். சொன்னால் எங்கே வந்துவிட போகிறான் என்று 4 நாட்கள் கழித்து தாமதமாக தெரியப்படுத்தும் காட்சி மனதை பிசைந்து எடுக்கின்றது.

இந்த நிகழ்வுக்கு பிறகு யோசித்து இனி குடும்பத்தை விட்டு வாழ்வதில்லை என்ற உறுதியில் மீண்டும் தாயகம் வருகிறான் நாராயணன். அப்படி வருபவனுக்கு மேலும் பொருளாதார அதிர்ச்சி மறுபடியும் துபைக்கு துரத்துகிறது விதி.

இப்படி வாழ்க்கையில் 50 ஆண்டு கால வாழ்க்கைக்கு பிறகு தனக்கு என்று ஒரு வீட்டை கட்டிக்கொண்டு தனது கடைசி காலத்திலாவது தன்னுடைய குடும்பத்துடன் வாழ நினைத்து வீட்டையும் கட்டி அந்த வீட்டிற்கு என்று ஒரு விளக்கை வாங்கி வீடு திரும்புகிறான் துபையில்.

அன்றைய இரவில் துபையில் இருக்கும் ஒரு மளையாள தொகாவில் துபைவாழ் மளையாளிகளின் வாழ்க்கையை பற்றிய ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு பேட்டி எடுக்கிறார்கள் நாராயணனை.

அந்த பேட்டிக்கு பிறகு இரவு தூக்கும் அவன் அப்படியே இறந்து போவதாக படம் முடிகின்றது.

காலையில் அவனை கண்ட அவனது அறை தோழர்கள் தாயகம் அனுப்புகிறார்கள் அவனது உடலை.

தாயகம் வரும் அவனது உடலை அவன் ஆசையாக கட்டிய வீட்டில் சில வினாடிகளாவது கிடத்திய பின் காரியங்களை மேற்கொள்ளலாம் என்ற கோரிக்கையை பின்னாளில் தெரிந்தால் ஒருவரும் வீட்டை வாங்க மாட்டார்கள் என்று சொல்லி அப்படியே நேராக காரியம் நடத்தும் இடத்திற்கு கொண்டு செல்லும் காட்சி இதயத்தை பிழியாமல் இருந்தால் இரக்கமற்றவராகத்தான் இருப்பர் பார்ப்பவர்கள்.

காரியங்கள் முடிந்து வீட்டில் இருக்கும் போது நாராயணன் கொடுத்த பேட்டி தொகாவில் ஒளிபரப்பு ஆகுகின்றது.

அது வரையில் குடும்பத்தை சுமந்த அந்த மனிதனை வெறும் பணம் செய்து கொடுக்கும் இயந்தரமாக மட்டும் பார்த்து பழகிய அவனுடைய சுற்றத்தாருக்கு அவனது நெஞ்சுக்குள் புதைந்து இருக்கும் அளவு கடந்த பாசத்தின் வெளிபாடாகவும். எவ்வளவு சிரமப்பட்டு அந்த பணத்தை அவன் வீட்டுக்கு அனுபியதாகவும். தான் பட்ட அவ்வளவு சிரமம்களும் தங்கைகளின் நலவாழ்வும் மகன் மகளின் நல்வாழ்க்கையும் தான் அவன் கண்ட வாழ்க்கையின் பலனாகவும் வெற்றியாகவும் அவன் கூறும் இடம் நெகிழ்வோ நெகிழ்வு.

ஒரு நல்ல குடும்பப்படம். பாக்கியதேவதாவுக்கு அடுத்து வந்து இருக்கும் அருமையான குடும்பபடம் இந்த பத்தேமாரி. வாழ்த்துகள்......

0 comments: