Monday, November 24, 2014

அமெரிக்காவின் காமராசரர்கள்

காலை மணி 6:00 வெளியிலோ குளிர் -10 C,  இதில் மணிக்கு 20 மைல் வேகத்தில் காற்று வேறு. 6:30க்கு அங்கு இருப்பதாக பேச்சு, இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும்.

சரியாக 6:40க்கு மூவருமாக கிளம்பினோம். மொத்தம் 71 மாணவர்களை ஏற்றி செல்லும் வண்டியில் சென்றோம். டெபியும், க்காபியும் தான் வழக்கமாக செல்வார்கள் இந்த வேலைக்கு, அன்றைக்கு ஆர்வமாக கேட்டதால் உடன் அழைத்து சென்றார்கள். நினைத்த உடன் கூட செல்ல எல்லாம் அனுமதி இல்லை. முறையாக அனுமதி பெற்ற பிறது தான் இன்றைக்கு...

வானம் விடிந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வர துவங்கி இருந்தது. அந்த தெரு முனையில் வந்து நின்றதும் வீட்டின் கதவை திறந்து வயதான ஒருவருடன் அந்த சிறுவன் வண்டியை நோக்கி வருகிறான். முதலில் பார்க்க ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. பிறகு வண்டிக்கு வந்து உள்ளே ஏறும் போது தான் வித்தியாசம் தெரிந்தது.

இரண்டு நொடிக்கு மேல் பார்க்க முடியமால் தலையை எதிர்திசையில் பின்னுக்கு செல்லும் மொட்டை மரங்களில் புதைத்து உலகத்தின் விந்தைகளை மனதில் அசைபோட்டபடி செல்ல....

அடுத்த நிறுத்தத்தில் ஒரு சிறுமி அதே நிலையில் பார்க்க இன்னமும் கொடுமையாக இருந்தது. உள்ளே வரும் ஒரு இருவரையும் க்காபி இருக்கையில் அமர்த்தி இருக்கையுடன் இணைத்து கட்டிவிட்டு என்னை பார்த்து ஒரு புன்னகைதார்.

இந்த சிறுமியை பார்த்தவுடன் மனது இருப்பு கொள்ளமுடியவில்லை. இறங்கி ஓடிவிடலாம் போல் இருந்தது, இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் இருக்கையில் புதைந்த வண்ணம் மனதுக்குள் இருக்கும் நடுக்கம் வெளியில் தெரியாமல் இருக்க. டெபி மெல்ல துவங்கினார், என்ன எப்படி இருக்கிறது என்று.

விடை சொல்ல தெரியாமல் நெளிவதை பார்த்தவுடன், மிகவும் அழகாக பேச்சை மாற்றினார் டெபி. இதோ பார் இந்த தெரு முனையில் மாலையில் மிகவும் கூட்டமாக இருக்கும் என்றும் அங்கே கன்றுகுட்டி கணக்காக காலை நடைக்கு அழைத்து சென்ற நாய் என்று அவர் எவ்வளவு கூறியும் எனக்கு மனமோ அந்த இறுகிய நினைவில் இருந்து மீளாமல் இருந்ததை கவனித்த டெபி அதற்கு பிறகும் எதுவும் பேசாமல் அவரது வேலையில் மூழ்கினார்.

ஒன்று இரண்டு என்று அங்காங்கே என்று இருந்து வந்தவர்கள் மொத்தம்15 தொட்டது அப்போது க்காபி சொன்னார் இந்த நிறுத்தத்தில் வருபவன் உட்காரும் இடத்தில் தான் நீ உட்கார்ந்து இருக்கிறாய் அவன் வந்ததும் அவனை ஓரத்தில் உட்காரவைத்து நீயும் அங்கேயே உட்காந்துகொள் என்றார். எனக்கோ மனதுக்குள் பதற்றம் முழு அளவில் தொற்றிக்கொண்டது.........

அவனது இடமும் வந்தது அவனும் வந்தான், அருகில் வந்தது தான் தாமதம் எனக்கு மயக்கம் வராத குறைதான். இன்னமும் எவ்வளவு நேரம் இப்படி உட்கார்ந்து இருக்கவேண்டும் என்று கவலையாக இருக்கும் என்னை பார்த்து டெபி இன்னும் கொஞ்ச நேரம் தான் உட்கார்ந்து இரு என்றார்.

மனதை அமைதிப்படுத்திக்கொண்டு உட்கார்ந்து இருக்கையில் வந்தது அந்த பள்ளி. அந்த பள்ளியை பார்த்தது சுற்றும் முற்றும் பார்த்தால் மற்ற மாணவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்க இந்த மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் எப்படி அங்கே படிப்பார்கள் என்ற கேள்வி மனதில் எழ, வண்டியின் அருகே வந்தார் அந்த மாணவர்களின் ஆசிரியர். முகம் நிறைந்த புன்னகையுடன் வந்து அந்த மாணவர்களில் ஒரு பகுதியை அழைத்து கொண்டு செல்ல வண்டி மறுபடியும் அடுத்த பள்ளியை நோக்கி ஓட்ட தொடங்கினார் டெபி.

வண்டி முன்னே செல்ல செல்ல மனது இந்த குழந்தைகளின் நிலைகளை நினைத்து வருத்தத்தில்லும் வேதணையிலும் இறுக துவங்கியது.

மணிரத்தினத்தின் அஞ்சலியில் பார்த்த அஞ்சலியை போல் இந்த குழந்தைகள். வண்டிக்கு வரும் போது அஞ்சலி நடந்து வருவதை போல நடந்து வந்ததும். வண்டிக்குள் வந்ததும் பள்ளி வரும் வரையில் வெளியில் வேடிக்கை கூட பார்க்க தெரியாமல் உடன் பையில் கொண்டு வந்து இருக்கும் பொம்மைகளை வெளியில் எடுத்து அவைகளுடன் விளையாடுவதும், சிலரோ காலை தூக்கம் கூட கலையாமல் வண்டியில் வந்து தொடர்வதும் என்று இருந்ததையும் ஒப்பிட்டு பார்த்த வண்ணமாக இருந்தது.

அடுத்த பள்ளியில் அனைவரும் இறங்க வண்டி மறுபடியும் துவங்கிய இடத்தை நோக்கி சென்றது, இறங்கி அந்த இருவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு அங்கு இருந்து கிளம்பினேன்.

மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்தது, இதுவே இந்தியாவாக இருந்து இருந்தால் என்ன என்ன எல்லாம் நடந்து இருக்கும் என்று..........

என்ன நடந்து இருக்கும் 71 மாணவர்கள் தான் செல்லலாம் என்று சொன்ன அந்த வண்டியில் குறைந்து ஒரு 150 மாணவர்களை வெற்றிலை கட்டு போல் அடுக்கி இருப்பர்கள் அதுமட்டுமா. இங்கே இரண்டு பள்ளிகளுக்கு என்று சென்ற வண்டி குறைந்தது ஒரு 20 பள்ளிகளுக்கு வேண்டிய மாணவர்களையாவது எற்றிகொண்டு சென்று இருக்கும்.

இதுமட்டுமா க்காபி போன்று பார்த்துக்கொள்ள வருபவரின் வசவுகளை நம்மால் எல்லாம் காதுகொடுத்து கேட்க முடியுமா என்ன.

இவை எல்லாம் பரவாயில்லை, இவர்களுக்கு என்று தனியாக ஒரு பள்ளி வைத்து அந்த பக்கம் செல்வதே பாவம் என்று மற்றவர்கள் எல்லாம் பதுங்கும் காட்சி எல்லாம் சாதாரணமாக பார்க்க முடிந்து இருக்கும்.

இங்கே அரசாங்கமே நடத்தும் இந்த விதமான பள்ளிகளை அங்கே இந்தியாவில் தனியார் பள்ளிகளாகவும், குறைக்கு ஏற்றார்போல் பணத்தை அந்தந்த பெற்றோரிடம் கறந்து இருப்பர்கள்.

அமெரிக்காவை பொருத்தவரை பிறந்த குழந்தைகள் அனைவரும் அரசாங்கத்தின் தத்துபிள்ளைகள் 18வயது ஆகும் வரை.

அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது பெற்றோர்களின் கடமை, அப்படி பெற்றோர்களால் முடியவில்லை என்றால் அரசாங்கம் அந்த பொறுப்பை எடுத்துக்கொள்ளும்.

காலை உணவு முதல் இப்படி சிறப்பு தேவைகள் உட்பட அனைத்தையும் அழகாக திட்டமிட்டு முடிந்தவரையில் எந்த குறையும் இல்லாமல் அழகாக நடத்தியும் வருகிறது. அதுவும் அம்மா அப்பா படிக்க வைக்கவோ அல்லது நல்லா பார்த்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்றால், அவர்களுக்கு என்று இல்லம் அமைத்து அவர்களுக்கும் என்று எந்த ஒரு குறையும் இல்லாமல் பார்த்துகொள்வதை பார்க்கும் போது, காங்கிரசு கட்சி சொல்லும் மீண்டும் காமராசர் ஆட்சி என்று சொல்வதில் உள்ள பொருள் அருமையாக விளங்குகிறது.

ஒரு காமராசர் இல்லை ஆயிரம் காமராசர்கள் சேர்ந்து கட்டமைத்த இந்த அமெரிக்க இளைய மாணவ சமுதாயத்தை பார்க்கும் போது, இந்தியா இது போல் வல்லரசாக எப்போது தான் மாறுமோ என்ற ஏக்கம் மனதில் வந்து சேர்வதை தவிர்கமுடியவில்லை........

2 comments:

Anonymous said...

Yes, I had been there in your shoes and felt the same-cried at times. The best part is all the kids are in main stream except that the special ed (not legal to use this term any more) students gets pulled out for an hour or so from regular stream. Thanks for sharing. Well thought out title.

')) said...

பின்னூட்டத்திற்கு நன்றி, தூரத்தில் இருந்து பார்ப்பது போல் இல்லை எதுவும். அதுவும் இது மிகவும் கொடிது, தாங்கிக்கொள்ள இயலாது கொடிது. அவர்களின் பெற்றோர்களை நினைக்கையில் அவர்களது மன தைரியத்தை நினைத்து வியக்க மட்டும் தான் முடியும் என்று நினைக்கின்றேன். ஔவையார் சொன்னது போல் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்ற வாக்கியம் உண்மையில் எவ்வளவு பெரிய வாக்கு என்று விளங்கவைத்த சம்பவம்.

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.