Friday, November 21, 2014

இளையராசா பற்றிய நெல்சன் சேவியர் பதிவுக்கு எனது பதில்

ஏராளமான முறை விளக்கியது போல் இராசாவின் இசை கலப்பிசையாக இருக்கும் அல்லது நமது இசையாக இருக்கும். அந்த எல்லையை தாண்டி திரைபாடலுக்குள் அதிகம் இரசா புகுத்தவில்லை என்றது தான் உண்மை.

ஆனால் இரகுமானின் இசை இதே பாணியில் பயணித்த வரையில் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் விதமாகத்தான் இருந்தது. ஆனால் சமீபத்தில் இரகுமானை பார்த்து குட்டி குட்டி இசையமைப்பாளர்கள் எல்லாம் போடும் போடை பார்த்த இரகுமானும் தனக்கும் இதைவிட அதிகம் தெரியும் என்று காட்ட அப்படியே மேற்கத்திய இசையை தமிழ் வார்த்தைகளில் கொடுக்க துவங்கியதில் இருந்து இரகுமானின் பாடல்கள் மனதில் பதிவது இல்லை என்றதே உண்மை.

விச்சை தொக போட்டிகளிலும் கூட இரகுமானின் சமீபத்திய பாடல்கள் வருவது இல்லை என்றதையும் நம்மால் கானமுடியும்.

காரணம் மேற்கத்திய இசை தான் வேண்டும் என்றால் காட்டுவதற்கு இன்றைகு நிறைய தொக இருக்கின்றது. அவைகளை பார்த்து பழக்கப்பட்டவர்கள் தாம் இரகுமானின் அனேக இரசிகர்கள். அவர்களில் அதிகமானோர் தாங்கள் மிகவும் அறிவும் திறனும் மிக்கவர்கள் என்று காட்டுவதற்காக ஆங்கில இதழ்கள் படிப்பதில் இருந்து ஒரு மேற்கத்தைய வாடையும் வாழ்பவர்கள். அவர்களுக்காக இசையமைபதை குறைத்துக்கொண்டு சாமனியனுக்காக இரகுமான் இசையமைப்பாரானால் மீண்டும் மனதுக்குள் நிற்கும் பாடல்கள் வரும் என்றதில் சந்தேகம் இல்லை.

இரசிகர்களை ஏமாற்றுகிறாரா அல்லது இசையை வாரி வழங்குகிறாரா இரகுமான் என்று பார்ப்போம். பூங்காற்றிலே போன்ற பாடல்கள் மீண்டும் வருமா என்று காத்திருந்து பார்ப்போம்.

8 comments:

')) said...

காத்து இருப்போம்...ரகுமான் தருவார் என்று...

')) said...

ராஜா ராஜா தான்...

Anonymous said...

சாரி, நீங்கள் தமிழ் பதிவர் என்று நினைத்து உள்ளே வந்து விட்டேன். வந்ததும் தான் தெரிந்தது நீங்கள் எழுதுவது வேறு மொழி என்று...
ஸாரி மீண்டும்.

')) said...

நெல்சன் சேவியர் பதிவு என்னவென்று தெரியவில்லை. நிறைய ஆளுமைகள் உச்சத்தைத் தொட்டப்பிறகு கொஞ்சம் தடுமாறிப் போவது சகஜம்தான். சிம்பொனிக்கு பிறகு ராஜா.. ஆஸ்காருக்குப் பிறகு ரகுமான்.. இப்படி நிறைய...!

கொஞ்சம் எழுத்துப் பிழையை சரி செய்யுங்கள்.

')) said...

காத்து இருப்போம் நம்மால் முடிந்தது அது மட்டும் தானே. இந்தி பாடல்களை விட தமிழ்பாடல்களே இனிமை என்று காட்டிய இராசா கூட்டணி போல் மறுபடியும் ஒரு கூட்டணி வந்தால் தான் இந்த போக்கு மாறும் அதுவரையில் இங்கேயும் அங்கேயும் தாவும் நிகழ்வுகள் தான் நடக்கும்.........வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

')) said...

நன்றி தனபாலன், திண்டுகல் எப்படி இருக்கிறது, காந்தி கிராமம், சிறுமலையும் தான்.....

')) said...

மணிமாறன், உங்கள் கருத்துடன் வேறுபடுகிறேன். இரகுமான் உச்சத்தை தொட்டது அவரது முதல் படத்திலேயே அதற்கும் பிறகு நல்ல படைபுகளை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார். என்ன முழுமையாக மேற்கத்தியமாக மாறும் வரை நன்றாகவும் திருப்பி பாடவும் முடிந்தது தான், விதவ படம் பாடல்கள் எல்லாம் கூட அருமையாக வந்தன. ஆனால் ஏதோ ஒரு இரண்டு என்று மாறிவிட்டது தான் பொருக்கமுடியவில்லை.

சிம்பொனியின் இடைவெளியில் இராசா இழந்த வாப்புகள் ஏராளம். அந்த இழப்பில் இருந்து மீண்டு இன்னமும் இசைத்துக்கொண்டு தான் இருக்கிறார் அவரது பாணியில். என்ன முன்பு போல் அவரது இசை அவசியம் வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு படங்களும் அதிகம் வருவது இல்லை. அப்படி வரும் ஒன்று இரண்டு படங்களும் அவரது இசையில்லாமல் அவரது பாணியில் அடுத்தவர் அமைக்கும் இசையை கேட்கும் போது இராசாவின் தேவை அனைவருக்கும் புரியும். எகவாக பரதேசியை சொல்லலாம்.

எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும், சுட்டியமைக்கு மிக்க நன்றி.

')) said...

வாங்க அனானிமசு, உங்களுக்கு தெரிந்த அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது. வளவு தளம் சென்று படியுங்கள் http://valavu.blogspot.com/ அது தான் நீங்கள் தேடும் சரியான தமிழ் பதிவு என்று நினைக்கின்றேன்.