Monday, November 24, 2014

அமெரிக்காவின் காமராசரர்கள்

காலை மணி 6:00 வெளியிலோ குளிர் -10 C,  இதில் மணிக்கு 20 மைல் வேகத்தில் காற்று வேறு. 6:30க்கு அங்கு இருப்பதாக பேச்சு, இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும்.

சரியாக 6:40க்கு மூவருமாக கிளம்பினோம். மொத்தம் 71 மாணவர்களை ஏற்றி செல்லும் வண்டியில் சென்றோம். டெபியும், க்காபியும் தான் வழக்கமாக செல்வார்கள் இந்த வேலைக்கு, அன்றைக்கு ஆர்வமாக கேட்டதால் உடன் அழைத்து சென்றார்கள். நினைத்த உடன் கூட செல்ல எல்லாம் அனுமதி இல்லை. முறையாக அனுமதி பெற்ற பிறது தான் இன்றைக்கு...

வானம் விடிந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வர துவங்கி இருந்தது. அந்த தெரு முனையில் வந்து நின்றதும் வீட்டின் கதவை திறந்து வயதான ஒருவருடன் அந்த சிறுவன் வண்டியை நோக்கி வருகிறான். முதலில் பார்க்க ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. பிறகு வண்டிக்கு வந்து உள்ளே ஏறும் போது தான் வித்தியாசம் தெரிந்தது.

இரண்டு நொடிக்கு மேல் பார்க்க முடியமால் தலையை எதிர்திசையில் பின்னுக்கு செல்லும் மொட்டை மரங்களில் புதைத்து உலகத்தின் விந்தைகளை மனதில் அசைபோட்டபடி செல்ல....

அடுத்த நிறுத்தத்தில் ஒரு சிறுமி அதே நிலையில் பார்க்க இன்னமும் கொடுமையாக இருந்தது. உள்ளே வரும் ஒரு இருவரையும் க்காபி இருக்கையில் அமர்த்தி இருக்கையுடன் இணைத்து கட்டிவிட்டு என்னை பார்த்து ஒரு புன்னகைதார்.

இந்த சிறுமியை பார்த்தவுடன் மனது இருப்பு கொள்ளமுடியவில்லை. இறங்கி ஓடிவிடலாம் போல் இருந்தது, இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் இருக்கையில் புதைந்த வண்ணம் மனதுக்குள் இருக்கும் நடுக்கம் வெளியில் தெரியாமல் இருக்க. டெபி மெல்ல துவங்கினார், என்ன எப்படி இருக்கிறது என்று.

விடை சொல்ல தெரியாமல் நெளிவதை பார்த்தவுடன், மிகவும் அழகாக பேச்சை மாற்றினார் டெபி. இதோ பார் இந்த தெரு முனையில் மாலையில் மிகவும் கூட்டமாக இருக்கும் என்றும் அங்கே கன்றுகுட்டி கணக்காக காலை நடைக்கு அழைத்து சென்ற நாய் என்று அவர் எவ்வளவு கூறியும் எனக்கு மனமோ அந்த இறுகிய நினைவில் இருந்து மீளாமல் இருந்ததை கவனித்த டெபி அதற்கு பிறகும் எதுவும் பேசாமல் அவரது வேலையில் மூழ்கினார்.

ஒன்று இரண்டு என்று அங்காங்கே என்று இருந்து வந்தவர்கள் மொத்தம்15 தொட்டது அப்போது க்காபி சொன்னார் இந்த நிறுத்தத்தில் வருபவன் உட்காரும் இடத்தில் தான் நீ உட்கார்ந்து இருக்கிறாய் அவன் வந்ததும் அவனை ஓரத்தில் உட்காரவைத்து நீயும் அங்கேயே உட்காந்துகொள் என்றார். எனக்கோ மனதுக்குள் பதற்றம் முழு அளவில் தொற்றிக்கொண்டது.........

அவனது இடமும் வந்தது அவனும் வந்தான், அருகில் வந்தது தான் தாமதம் எனக்கு மயக்கம் வராத குறைதான். இன்னமும் எவ்வளவு நேரம் இப்படி உட்கார்ந்து இருக்கவேண்டும் என்று கவலையாக இருக்கும் என்னை பார்த்து டெபி இன்னும் கொஞ்ச நேரம் தான் உட்கார்ந்து இரு என்றார்.

மனதை அமைதிப்படுத்திக்கொண்டு உட்கார்ந்து இருக்கையில் வந்தது அந்த பள்ளி. அந்த பள்ளியை பார்த்தது சுற்றும் முற்றும் பார்த்தால் மற்ற மாணவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்க இந்த மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் எப்படி அங்கே படிப்பார்கள் என்ற கேள்வி மனதில் எழ, வண்டியின் அருகே வந்தார் அந்த மாணவர்களின் ஆசிரியர். முகம் நிறைந்த புன்னகையுடன் வந்து அந்த மாணவர்களில் ஒரு பகுதியை அழைத்து கொண்டு செல்ல வண்டி மறுபடியும் அடுத்த பள்ளியை நோக்கி ஓட்ட தொடங்கினார் டெபி.

வண்டி முன்னே செல்ல செல்ல மனது இந்த குழந்தைகளின் நிலைகளை நினைத்து வருத்தத்தில்லும் வேதணையிலும் இறுக துவங்கியது.

மணிரத்தினத்தின் அஞ்சலியில் பார்த்த அஞ்சலியை போல் இந்த குழந்தைகள். வண்டிக்கு வரும் போது அஞ்சலி நடந்து வருவதை போல நடந்து வந்ததும். வண்டிக்குள் வந்ததும் பள்ளி வரும் வரையில் வெளியில் வேடிக்கை கூட பார்க்க தெரியாமல் உடன் பையில் கொண்டு வந்து இருக்கும் பொம்மைகளை வெளியில் எடுத்து அவைகளுடன் விளையாடுவதும், சிலரோ காலை தூக்கம் கூட கலையாமல் வண்டியில் வந்து தொடர்வதும் என்று இருந்ததையும் ஒப்பிட்டு பார்த்த வண்ணமாக இருந்தது.

அடுத்த பள்ளியில் அனைவரும் இறங்க வண்டி மறுபடியும் துவங்கிய இடத்தை நோக்கி சென்றது, இறங்கி அந்த இருவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு அங்கு இருந்து கிளம்பினேன்.

மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்தது, இதுவே இந்தியாவாக இருந்து இருந்தால் என்ன என்ன எல்லாம் நடந்து இருக்கும் என்று..........

என்ன நடந்து இருக்கும் 71 மாணவர்கள் தான் செல்லலாம் என்று சொன்ன அந்த வண்டியில் குறைந்து ஒரு 150 மாணவர்களை வெற்றிலை கட்டு போல் அடுக்கி இருப்பர்கள் அதுமட்டுமா. இங்கே இரண்டு பள்ளிகளுக்கு என்று சென்ற வண்டி குறைந்தது ஒரு 20 பள்ளிகளுக்கு வேண்டிய மாணவர்களையாவது எற்றிகொண்டு சென்று இருக்கும்.

இதுமட்டுமா க்காபி போன்று பார்த்துக்கொள்ள வருபவரின் வசவுகளை நம்மால் எல்லாம் காதுகொடுத்து கேட்க முடியுமா என்ன.

இவை எல்லாம் பரவாயில்லை, இவர்களுக்கு என்று தனியாக ஒரு பள்ளி வைத்து அந்த பக்கம் செல்வதே பாவம் என்று மற்றவர்கள் எல்லாம் பதுங்கும் காட்சி எல்லாம் சாதாரணமாக பார்க்க முடிந்து இருக்கும்.

இங்கே அரசாங்கமே நடத்தும் இந்த விதமான பள்ளிகளை அங்கே இந்தியாவில் தனியார் பள்ளிகளாகவும், குறைக்கு ஏற்றார்போல் பணத்தை அந்தந்த பெற்றோரிடம் கறந்து இருப்பர்கள்.

அமெரிக்காவை பொருத்தவரை பிறந்த குழந்தைகள் அனைவரும் அரசாங்கத்தின் தத்துபிள்ளைகள் 18வயது ஆகும் வரை.

அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது பெற்றோர்களின் கடமை, அப்படி பெற்றோர்களால் முடியவில்லை என்றால் அரசாங்கம் அந்த பொறுப்பை எடுத்துக்கொள்ளும்.

காலை உணவு முதல் இப்படி சிறப்பு தேவைகள் உட்பட அனைத்தையும் அழகாக திட்டமிட்டு முடிந்தவரையில் எந்த குறையும் இல்லாமல் அழகாக நடத்தியும் வருகிறது. அதுவும் அம்மா அப்பா படிக்க வைக்கவோ அல்லது நல்லா பார்த்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்றால், அவர்களுக்கு என்று இல்லம் அமைத்து அவர்களுக்கும் என்று எந்த ஒரு குறையும் இல்லாமல் பார்த்துகொள்வதை பார்க்கும் போது, காங்கிரசு கட்சி சொல்லும் மீண்டும் காமராசர் ஆட்சி என்று சொல்வதில் உள்ள பொருள் அருமையாக விளங்குகிறது.

ஒரு காமராசர் இல்லை ஆயிரம் காமராசர்கள் சேர்ந்து கட்டமைத்த இந்த அமெரிக்க இளைய மாணவ சமுதாயத்தை பார்க்கும் போது, இந்தியா இது போல் வல்லரசாக எப்போது தான் மாறுமோ என்ற ஏக்கம் மனதில் வந்து சேர்வதை தவிர்கமுடியவில்லை........

Friday, November 21, 2014

ஒரு ஊர்ல இரண்டு ராசாவும் Edge of Darknessவும்

http://www.rottentomatoes.com/m/edge_of_darkness/

மேலோட்டமாக பார்த்தால் இந்த படம் புதிதாக முளைக்கும் முதலளிகளின் பேராசையை காட்டிக்கொடுக்கும் படம் போல தெரிந்தாலும். இது ஆங்கிலப்படம் தி எட்சு ஆப் தி டார்க்னசு
படத்தை அப்படியே தமிழ் மசாலா தூவி எடுத்துள்ளார்கள்.

என்ன தந்தையும் மகளுமாக இருக்கும் அந்த உறவை இரண்டு ஆட்களாகவும் இன்னமும் இத்தியாதி இத்தியாதி என்று மாற்றம் மட்டும் கொடுத்துள்ளார்கள்.

மற்றபடி இவர்கள் தேடி செல்லும் வழக்கறிஞர் ஏமாற்றுவதில் இருந்து சம்மந்தபட்ட  அனைவரையும் தீர்த்துகட்டும் காட்சிகள்வரை அப்படியே எடுத்துள்ளார்கள். என்ன கடைசியில் வில்லனை கொன்றுவிட்டு தந்தையும் மறைவார், அதை மட்டும் மாற்றி திருந்தியதாக கொடுத்துள்ளார்கள் மற்றபடு மூலத்திற்கும் இதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.


இளையராசா பற்றிய நெல்சன் சேவியர் பதிவுக்கு எனது பதில்

ஏராளமான முறை விளக்கியது போல் இராசாவின் இசை கலப்பிசையாக இருக்கும் அல்லது நமது இசையாக இருக்கும். அந்த எல்லையை தாண்டி திரைபாடலுக்குள் அதிகம் இரசா புகுத்தவில்லை என்றது தான் உண்மை.

ஆனால் இரகுமானின் இசை இதே பாணியில் பயணித்த வரையில் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் விதமாகத்தான் இருந்தது. ஆனால் சமீபத்தில் இரகுமானை பார்த்து குட்டி குட்டி இசையமைப்பாளர்கள் எல்லாம் போடும் போடை பார்த்த இரகுமானும் தனக்கும் இதைவிட அதிகம் தெரியும் என்று காட்ட அப்படியே மேற்கத்திய இசையை தமிழ் வார்த்தைகளில் கொடுக்க துவங்கியதில் இருந்து இரகுமானின் பாடல்கள் மனதில் பதிவது இல்லை என்றதே உண்மை.

விச்சை தொக போட்டிகளிலும் கூட இரகுமானின் சமீபத்திய பாடல்கள் வருவது இல்லை என்றதையும் நம்மால் கானமுடியும்.

காரணம் மேற்கத்திய இசை தான் வேண்டும் என்றால் காட்டுவதற்கு இன்றைகு நிறைய தொக இருக்கின்றது. அவைகளை பார்த்து பழக்கப்பட்டவர்கள் தாம் இரகுமானின் அனேக இரசிகர்கள். அவர்களில் அதிகமானோர் தாங்கள் மிகவும் அறிவும் திறனும் மிக்கவர்கள் என்று காட்டுவதற்காக ஆங்கில இதழ்கள் படிப்பதில் இருந்து ஒரு மேற்கத்தைய வாடையும் வாழ்பவர்கள். அவர்களுக்காக இசையமைபதை குறைத்துக்கொண்டு சாமனியனுக்காக இரகுமான் இசையமைப்பாரானால் மீண்டும் மனதுக்குள் நிற்கும் பாடல்கள் வரும் என்றதில் சந்தேகம் இல்லை.

இரசிகர்களை ஏமாற்றுகிறாரா அல்லது இசையை வாரி வழங்குகிறாரா இரகுமான் என்று பார்ப்போம். பூங்காற்றிலே போன்ற பாடல்கள் மீண்டும் வருமா என்று காத்திருந்து பார்ப்போம்.

Thursday, November 20, 2014

மோடி வித்தை காட்டும் இராசபட்சேவும் சுசாமியும்

செயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து தூக்கு தண்டனையை நிறுத்தினாரோ அன்றில் இருந்து என்ன செய்தால் தமிழகத்தில் பலமாக காலூன்ற முடியும் என்று எந்த எந்த வழி என்று சளித்து எடுத்து ஒன்று ஒன்றாக செயல் படுத்துகிறது போலும் மோடி அரசு.

வழக்கம் போல் எல்லா சதி வேலைகளையும் காட்டிக்கொடுக்கும் வேலைகளையும் அழகாக செயல்படுத்தும் சுசாமி இந்த செயலிலும் அழகாக செயலாற்றியுள்ளார்.

அப்படி ஒரு தீர்மானத்தை செயலலிதா கொண்டு வந்தர்காக செறைக்கு செல்ல வேண்டி வந்ததும். பிணையில் வெளியில் வந்ததும் மீனவர்களை பிடித்து வைக்க சொல்லிவிட்டு அதிமுக,செயலலிதா எதுவும் அதிரடியாக செய்கிறார்களா என்று நோட்டம் விட்ட பிறகு தனது இரகசிய பேரத்தை மோடி அரசு சுசா வழியா நிறைவேற்றியுள்ளது எத்தனை மக்களுக்கு புரிய போகிறது.

ஒரு வேளை செயலலிதா ஏதேனும் அதிரடியாக செய்து இருந்தால் அல்பமாக ஒரு காரணத்தை சொல்லி அவரின் பிணையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதாக திட்டமாக இருந்து இருக்கும் போலும். தற்கொலை செய்துகொள்ள போகின்றேன் என்று மிரட்டும் விடலைகளை போலும் தேள் கொட்டிய திருடனாகவும் செயலலிதாவின் மௌனத்தை எதிர்கொள்ள முடியாமல் என்னவோ மோடி கேட்டுக்கொண்டாராம் சுசா சட்டங்களை எடுத்து சொன்னாராம் இராசபட்சே விட்டு விடுங்கள் என்று நீதிமன்றம் சொன்ன தீர்பை எடுத்து குப்பையில் வீசினாராம்.

பொய் வழக்கு என்று சொல்லாமல் நாடு இராசபட்சேக்கு கடமைபட்டிருக்கிறது என்று சுசா சொல்கிறார். நல்லவேளை இராமருக்கு கோவில் கட்டுவது போல் இராசபட்சேக்கு கோவில் கட்டவேண்டும் என்றும் அதற்கு ஒரு தேர் அணிவகுப்பு தொடங்குவதாக மோடி அரசு சார்பாக சுசா அறிவிப்பதாக செய்தி வெளியிடாமல் இருப்பது ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.

மோடி மிகவும் பலமான அரசியல் தலைவர் என்று காட்ட மேலும் தமிழக மீனவர்கள் மற்றும் மற்ற வேலைகளில் இருக்கும் தமிழர்களை சுமத்ரா, மியான்மர், பிலிபைன்சு, மொரிசியசு என்று குட்டி குட்டி நாடுகளில் இது போல பொய் வழக்குகளில் தூக்கு தண்டனை என்று சொல்வதும். அவரின் சொந்த காரர்கள் போராடுவதும் சுசா என்ன செய்யலாம் என்றும் சொல்வதும் மோடி அவர்களை விடுவிக்குமாறு சொல்லவும் உடனே அவர்களும் விடுவதும் இனி வாடிக்கயாகிவரும். இதை எல்லாம் பார்க்கும் மக்கள் மோடி கட்சி தான் பலம் வார்ய்ந்த கட்சி என்று நம்பி தமிழகத்தில் மோடி கட்சியின் அரசு அமையூமாறு மன நிலைக்கு வரும் என்ற நம்பிக்கை சுசாக்கும் அவரது வகையராவுக்கும்.

திருத்தி அமைக்கும் வரலாறு பாட புத்தகங்களில் மோடி எப்படி பலம் வாய்ந்தவராக இருந்தார் என்று இந்த சம்பவங்களை கொண்டு விவரிப்புகள் வரும். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த அரசு ஒரு துரும்பை கூட தூக்கு வைக்கவில்லை என்றும் உண்மையான அக்கறை கொண்டவர்களும் பலம் உள்ள்வர்கள் அவர்களே என்றும் எழுதுவார்கள்.

இந்த பிழைப்பு பிழைப்பதற்கு பதில் அந்த தொழிலை சுசாவும் மோடியும் அவரது ஆலோசகர்களும் செய்யலாம். இலங்கை அடுத்த பாக்கிட்தானம் ஆகிறது என்று வெளிப்படையாக தம்பட்டம் அடித்திருக்கிறது. யார் யார் எல்லாம் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்காக இலங்கையின் இராணுவம் முதல் நீதிமன்றம் வரை கூலி வேலை பார்கும் என்று அழகாக காட்டி சந்தையை திறந்துள்ளது இலங்கை.

மோடிக்கும் அவரது சாகாக்களும் உண்மையிலே அரசியல் பலம் இருப்பதான நினைத்தால் செயலலிதா கொண்டுவந்த தீர்மானம் போல் ஏதேனும் செய்யட்டும். அதைவிடுத்து ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று அப்பாவி மக்களின் வாழ்கையை பலியிடுவதை நிறுத்திகொள்ளவும். இத்த மானம் இல்லா சுசா இந்த அரசியல் பொறுக்கிதனத்தை எப்போது தான் நிறுத்துவாரோ, தாங்க முடியல அவரது கொசுத்தொல்லை...................யாராவது கொசு மருத்து இருந்தால் கொஞ்சம் உதவுங்களேன்.