Tuesday, March 20, 2018

எடப்பாடி பழனிசாமி கமல் மற்றும் தலைவரின் ஆட்சியும் இப்படி தான் இருக்கும்

பாசக தனது ஆக்டோபசு கரங்களை இடத்திற்கு தகுந்தார்போல் நிறம் மாற்றி உருமாற்றி வலைவிரித்து காத்து இருந்தது. தகப்பன் இல்லாத வீடாக தமிழகம் இருக்கவே ஆளும் கட்சி கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில். கலைத்துவிட்டு நாம் ஆட்சிக்கு வருவோம் என்று நினைத்து தேர்தலிலும் இறங்கியது. பிறகு தான் நோட்டாவை கூட தாண்டாத தனது நிலையை அறிந்த பாசக தனது வியூகத்தை மாற்றி கமல் விசயகாந்து மற்றும் தலைவர் மூலமாக தனது ஆக்டோபசு கரங்களை நிறம் மாற்றி உரு மாற்றி வெவேற பெயர்களில் அரசியலில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றது.

இந்த அழகில் எதற்கு ஆகாத எடப்பாடியை கைப்பாவையாக வைத்துக்கொண்டு நீட்டும் இடத்தில் எல்லாம் கையோப்பம் இடவைத்து அரசையும் சட்டத்தையும் கேலி செய்கிறது பாசக.

தமிழகத்தில் இருக்கும் இசுலாமிய மற்றும் கிருத்துவ தேவாலையங்களை அடித்து நொறுக்கும் துவக்கமாக தேர் பயணம் ஒன்றை ஓடவிட்டு வெள்ளோட்டம் பார்க்கிறது. மக்கள் கொதித்து எழவே ஊரங்கு உத்தரவை பிறபித்துவிட்டு ஊரங்கு உத்தரவு என்றால் அது உன்னை தான் என்னையோ இல்லை எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களோ இல்லை என்ற இந்துத்துவாவின் அடிப்படை கொள்கையை மறுபடியும் நிறுவி நிற்கிறது பாசகவின் அடிபொடி எடப்பாடி எடுபுடி அரசு.

எந்தவித நேரடி பங்குமே இல்லாத நிலையில் கலவரத்தை தூண்டி குளிர்காய நினைக்கும் பாசக ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல் மக்களை தெருவில் நிற்க வைப்பது திண்ணம்........

0 comments: