The 33 movie
அறம் படம் பார்த்ததும் எழுத வேண்டும் என்று இருந்தேன் மற்ற பதிவுகள் வந்ததில் தள்ளி போனது.
ஆங்கிலத்தில் வந்த The 33 படத்தை அப்படியே தமிழாக்கம் செய்து எடுத்துள்ளார்கள். தமிழாக்கம் என்று சொல்வதை விட கம்மனாக்கம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
பெயர் போடும் காட்சியில் இருந்து கடைசியில் காட்டும் எழுத்துகள், இவர்கள் யாரும் தண்டிக்கபடவில்லை என்று சொல்லும் வரை அழகாக மாற்றி எழுதி எடுத்து இருப்பார்கள்.
ஆங்கிலத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஒரு சுரங்கத்தில் நடக்கும் விபத்தில் 33 பேர் உள்ளே மாட்டிக்கொள்வார்கள். அவர்களை எப்படி மீட்கிறார்கள் என்றது தான் கதை.
தமிழில் அழாக அதை ஒரே குழந்தையாக மாற்றிவிட்டார்கள்.
ஆங்கிலத்தில் நாட்டை ஆளுபவரின் மகன் அரசியலுக்கு புதிதாக வந்திருபவரின் முதல் கள அனுபவம். தமிழில் மாவட்ட ஆட்சியர் பெண் என்று அழகாக மாற்றியுள்ளார்கள்.
ஆங்கிலத்தில் எங்கள் அனுபவத்தில் இது மாதிரியான விபத்துகளில் அதை செய்வோம் இதை செய்வோம் என்று காலம் கடத்துவோம் பிறகு எல்லோரும் இறந்த பிறகு இரக்க செய்திகளை மட்டும் அலங்காரமாக வெளியிட்டு பணம் மட்டும் கொடுப்போம் என்று சொல்வார்கள்.
தமிழில் கிட்ட தட்ட அதே வசன பிரயோகங்களை பார்க்க முடியும்.
ஆங்கிலத்தில் அந்த முதல் காட்சியில் அந்த சுரங்க தொழிலாளிகளின் எளிய வாழ்கையை காட்சிபடுத்தி இருப்பார்கள் அதையே வறுமைக்கு பிறந்தவர்களாக தமிழில் காட்டி இருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் ஒரு கட்டதில் மீட்பு பணிகளை கைவிடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும், பிறகு பாதிக்கப்பட்டவரின் அக்கா சொல்லும் வசனம், 'எப்பவுமே நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைத்து தான் செயல்படுவேன் ஆனால் என்னவோ அது எப்பவுமே தப்பியே போகின்றது. ஒரு வேளை எல்லாவற்றையும் தப்பியே செய்யும் பிரவியோ" என்று சொல்லும் வசனத்தில் துளிர்ந்து எழுந்து தப்பி போகின்றாபடியே துளையிட்டல் தான் அந்த அடைத்து இருக்கும் தூணைய் தவிர்த்து துளையிடமுடியும் என்று மீண்டும் ஒரு வழியில் துளையிட்டு வெற்றி காண்பார்கள்.
தமிழில் இனி ஒன்றும் செய்யமுடியாது என்றது ஏன் எதற்கு என்ற காரணமே இல்லாமல் நயன் அழுவதும் பிறகு அந்த பையனை துளைக்குள் அனுப்புவதும் என்று சொதப்பி இருப்பார்கள்.
ஆங்கிலத்தில் கிட்ட தட்ட அந்த போராட்டம் 1 1/2 மாதம் நடக்கும் அதனால் அவர்களின் சொந்த காரர்கள் அங்கேயே தங்கவும் படிக்கவும் வீட்டிற்கு சிலராக சேர்த்து வைத்து உணவு இடம் என்று காட்டி இருப்பார்கள். தமிழிலோ ஒரே நாள் வேலை முடிந்தது என்று காட்டி முடித்திருப்பார்கள்.
இப்போது இரண்டாம் பாகம் எடுப்பதாக வெளியிட்டு இருக்கிறார்கள் எந்த படம் என்று காத்திருந்து பார்ப்போம்.
அறம் படத்தில் அரசியல் சார்ந்த வசனங்களுக்கா பாராட்டியே தீர வேண்டும், அதுவும் வல்லரசு இந்தியாவின் மீட்பு கருவி வெறும் கயிறு மட்டும் தானா என்று கேட்கும் கேள்வி 60 ஆண்டுகால வளர்சியையும் மீண்டும் ஒரு முறை பரீசிக்க வேண்டிய கட்டாயத்தை காட்டியது.