Sunday, January 28, 2018

தேசம் தேசிய கொடி தேசிய கீதம் என்றாலே வெறுப்பாக இருக்கிறது

ஒரு காலத்தில் உலகின் இனிமையான உயிர் மூச்சான சொல் அம்மா என்ற சொல்லை எங்காவது கேட்டாலே கேவலமாகவும் வெறுப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது. பிறகு மெல்ல அந்த அதிர்வில் இருந்து மீண்டோம். அந்த வரிசையில் இப்போது தேசம் தேசப்பற்று தேசிய கொடி தேசிய கீதம் இன்றைகு சேர்ந்துக்கொண்டுள்ளது.

தற்பொழுது பரப்பப் பட்டுவரும் வன்முறையும் மதவாதமும் பார்க்கும் போது இந்த வார்த்தைகளை கேட்டாளே எரிச்சலும் வெறுப்பும் தான் வருகின்றது.

காரணம் இந்த எல்லா சொல்லுக்கும் தற்பொழுது சொல்லப்படும் பொருள் 'இந்துக்கள்' அல்லாத இந்தியாவில் வாழும் அனைவரையும் வெறுத்து ஒழிப்பது தான் தேசியம் என்று விளக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக நடைமுறை படுத்தி வருவதும் தான் இந்த வெறுப்புக்கு காரணமாக இருக்கிறது.

நேற்று ஒரு 'தேசப்பற்றாளர்' சொல்கிறார் எங்களுடைய தமிழ்த்தாய் வாழ்த்து இது இல்லை என்று சொல்கிறார்.

நாளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'இந்துகளின்' கடவுள் வாழ்த்தை பாடுவதோடு நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மிகவும் வெளிப்படையாக எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் பட்டவர்தாமவே சொல்கிறார்.

இந்த 'இந்துக்கள்' அவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் என்ன உண்ண உடுத்த மற்றும் இத்தியாதி இத்தியாதிகளை எல்லாம் சட்டமாக சொல்கிறார்கள்.

பள்ளி காலங்களில் "ஒருபோதும் வன்முறையை நாடேன் என்றும், சமயம் மொழி வட்டாரம் முதலியவை காரணமாக எழும் வேறுபடுகளுக்கும் பூசல்களுக்கும் ஏனைய அரசியல் - பொருளாதாரக் குறைபாடுகளுக்கும் அமைதி நெறியிலும் அரசியல் அமைப்பின் வழியிலும் நின்று தீர்வு காண்பேன் என்று நான் மேலும் உறுதியளிக்கின்றேன்" என்று தினம்தோறும் சொன்னவைகள் எல்லாம் இன்றைக்கு காற்றில் பறக்கவிட்டுக்கொண்டு இருப்பதை பார்கின்றோம்.


இந்தியர்கள் என்றால் அவர்கள் அந்த 'இந்துகள்' மட்டும் தான் மற்றவர்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லை என்றும். அந்த 'இந்துகள்' அல்லாத மற்றவர்களை அழித்து ஒழிப்பது ஒன்றே தேசியமும் தேசப்பற்றும் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளிலும் தொகாகளிலும் காண்பது மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் இருக்கின்றது.


இந்த 3 ஆண்டுகளில் அரசு ஆணை மட்டும் தான் பிறப்பிக்கவில்லை மற்ற அளவில் இந்த 'இந்துக்களின்' இந்தியர் தேசம் கோட்பாடுகள் நாடுமுழுவதும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றது.

நாட்டில் எங்கு பார்த்தாலும் மத மற்றும் சாதி கலவரங்கள். யாராவது ஏதாவது சொன்னால் அவர் கிருத்துவர் அல்லது முசுலீம் அதனால் சொல்கிறார்கள் என்ற தப்பு அர்த்தங்கள் பறைசாற்றப்படுகின்றது.

அடுத்த வீட்டுகாரர்களையும் நம்முடன் பணியாற்றும் நண்பர்கள் வரை சந்தேகிக்கும் மனட்பாண்மை வரை அழகாக கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார்கள் இந்த 'இந்துக்கள் இந்தியர்கள்'.

இவைகளை எல்லாம் பார்க்க பார்க்க இந்த தேசம், தேசியம், தேச பற்று, தேசிய கீதம், தேசிய கொடி, என்றாலே அடுத்து என்ன கலவரம் வெடிக்க போகின்றதோ என்ற ஒரு பரபரபுக்குள் நம்மை தள்ளி விடுகின்றது. போதா குறைக்கு நான் கொடி ஏற்றினால் என்ன என்ற புரட்சி வேறு.

சாமி ஆளைவிடுங்கடா உங்க தேசமும் தேசியமும், இனி வரும் காலங்களில் தேசம் தேசியம் என்றால் அது 'இந்துக்களின்' மொழி என்று ஆக்கப்பட்டு விடும். ஆக்குங்கள், பிறகு அகமகிழுங்கள்...........எங்களையும் விட்டு விடுங்கள்........வீட்டிற்கு ஒரு கோடி ரூபாய் பணத்தை வங்கியில் போடுவோம், வீட்டிற்கு ஒருவனுக்கு வேலை கொடுப்போம் என்று பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் எதுவும் செய்யாமல் ஏமாற்றியது மட்டும் அல்லாது சாமானியனின் பணம் அனைத்தையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி குறி வைத்து பிடுங்கப்படுவதை அவனும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான்..............

0 comments: