Monday, January 15, 2018

ஐயோ பாவம் இந்தியின் நிலை இந்த பரிதாப நிலைக்கா வரவேண்டும் - என்ன ஒரு கெஞ்சல்

தமிழகத்தின் மொழி பாசத்தை இந்திய அளவில் எப்படி தப்பாக புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெளிவாக காட்டும் காணொளி இது.

அதுவும் இந்தி எழுத்தாளர் பிடிவாதம் பிடிப்பதாகவும் மொழி மேலாண்மை காட்டுவதாகவும் நினைத்துக்கொண்டு எங்கள் மொழி எப்படி அழிந்து வருகிறது என்று ஒத்துகொள்கிறார்கள் என்று பாருங்கள்.

வட இந்திய மொழி குடும்பங்களில் அனேக மொழிகள் இந்தியை போல் இருப்பதால் ஒட்டு மொத்த இந்தியாவில் 41% சதவிகிதம் இந்தி மொழி புரியவும் பேசவும் தெரிகின்றது என்று சொல்கிறார்கள் இந்த கூட்டத்தில்.

இப்படி கள்ள கணக்குகள் எல்லாம் காட்டி தான் இந்தி பிழைப்பு நடத்தும் இடத்தில் இருக்கிறது போலும், ஐயோ பாவம் இந்தி மொழி.

இந்த காணொளி 40 நிமிடங்கள் என்றதால் சுவாரசியமான சில செய்திகளை இங்கே எழுதிவிடுவோம்.

கூடி இருக்கும் கூட்டத்தில் தமிழ் பேசும் நபர் ஒருவரும் இல்லை அப்படி இருக்கையில், ஆங்கில விவாதத்தில் இந்தியில் பேச துவங்கிய உடன் ஞாநி தமிழில் ஆட்சோபம் தெரிவித்ததும் கூடி இருந்த மக்கள் கை தட்டி ஆதரிப்பதை ஆச்சரியபடாமல் பார்க்க முடியவில்லை.

சுதந்திர இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்தி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது என்ற புரட்டுக்கு தமிழ் தெலுகு போல் இந்தியும் ஒரு பிராந்திய மொழி தானே தவிர வேறு ஒரு சிறப்பு நிலையிலும் இந்தி இல்லை என்று ஞாநி தெரிவிக்கும் போது நெரியாளர் உட்பட அனைவரும் மௌனம் காப்பதை பார்க்கலாம்.

இந்தி திணிப்புக்குத்தான் எதிர்பே தவிர இந்திக்கு எதிர்ப்பு இல்லை என்று ஆணித்தனமாக அடித்து கூறும் இடங்களில் எல்லாம் எதிர்த்து எதுவுமே பேச இயலாமல் நிற்கும் அந்த இந்தி மொழியாளர்களை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

இந்தியாவிலே இந்தியை திணிக்காத ஒரே மாநிலம் தமிழகம் என்று கூறும் இடத்திலும் அனைவரும் மௌனம் காப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

இந்தி இந்தியாவின் பழமையான மொழி என்றதும் தமிழ் 2500 ஆண்டுகள் பழமையான மொழி என்று சொல்ல மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் இருப்பதையும் காண முடிகின்றது.

சுதந்தரத்திற்கு பிறகு இத்தனை ஆண்டாக இந்தி எதிர்ப்பு என்று துவங்கும் கேள்விக்கு 1937லே ஆரம்பித்த இயக்கம் இது என்றும் சொல்லும் இடத்திலும் மௌனமே என்று அனைவரும் இருப்பது ஆச்சர்யமே.

ஆந்திரத்து பேராசியர் கேட்ட முதல் கேள்விக்கு அந்த இந்தி எழுத்தாளர் கடைசிவரை பதிலே சொல்லாமல் போனது இந்தி இன்றைக்கு எப்படி பல் இளிக்கிறது என்று தெளிவாக காட்டுகிறது. உங்கள் பிள்ளைகள் இந்தி மொழியில் பயில்கிறார்களா ஆங்கிலத்திலா இல்லை உங்கள் பேரன் பேத்திகளாவது இந்தியில் பயில்கிறார்களா என்ற கேள்விக்கு அந்த அம்மா விக்கி விக்கி நிற்கும் காட்சியை பாருங்கள் என்ன ஒரு பரிதாபம்.

அதை கேட்டு விட்டு பிறகு சொல்வார், இந்தியை தாய் மொழியாய் கொண்டவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பயில இந்திக்கு எந்த சம்பந்தமுமே இல்லாத எங்கள் குழந்தைகள் கட்டாயம் இந்தி கற்ற வேண்டும் என்று திணிப்பதா என்ற கேள்விக்கும் அந்த இந்தி எழுத்தாளர் மௌனம் காப்பது பார்க்கும் போது இந்தியின் ஆற்றாமையை தெளிவாக காண முடியும்.......

இது நமக்கும் எழுந்த கேள்வி இது, இந்தியை தாய் மொழியாய் கொண்டவர்கள் வெறும் இந்தியை மட்டும் படித்து பேசினால் போதும் அவனது கையாலாக தனத்திற்கு மற்ற மொழி மக்கள் எல்லாம் இந்தியில் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேரிகள் என்று......

இவை எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற் போல் வெறும் இந்தி மட்டும் தெரிந்தவர்கள் 4 அல்லது 5 ஆயிரம் மட்டுமே சம்பளம் கிடைக்கும் ஆனால் வெறும் ஆங்கிலம் மட்டும் கூட தெரிந்த மக்களுக்கு 10 முதல் இலட்சங்கள் வரை சம்பளம் நீளூம் என்று சொன்னதற்கு அலுவலக மொழி மற்றும் கணணிகளை இந்தி படுத்த வேண்டும் என்று சொல்லும் அந்த மொழி சோம்பேரியின் வாதம் வருவதையும் பார்க்கலாம்.

போங்கடா போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க அதை விடுத்து தானும் படிக்க மாட்டான் அடுத்தவனையும் படிக்க விடமாட்டானுக.........

6 comments:

')) said...

யாரும் இந்தி படிப்பதை இங்கு யாரும் எதிர்ப்பதில்லை.இந்தி திணிப்புக்குதான் எதிர்ப்பு .இது கூட தெரியாமல் இங்கு பலர் பதிவு எழுதுகிறார்கள் .நல்லொதொரு பதிவு பனிமலர் .
தமிழின் அருமை பலருக்கு எப்போது புரியும் என்றால் எப்போது தமிழை விட்டு தள்ளி இருக்க நேர்கிறதோ அப்போது. உங்கள் பதிவுக்கு எனது நன்றி .

')) said...

பாராட்டுகள். நன்றி.

Anonymous said...

Thank you verymuch for this post. Appreciate.

')) said...

நன்றி கரிகாலன் மற்ற மொழிகளை அழிக்க நினைத்து படையெடுத்த இந்திக்கு இந்த நிலை வந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான். நாகரிகம் பேரில் வெளி நாட்டின் பழக்க வழக்கங்களை அப்படியே மேற்கொள்வதில் வட நாட்டார் முதல்லிடத்தில் இருக்கிறார்கள். அதை அவர்களின் படங்களில் தெளிவாக பார்க்கமுடியும்.

சமூக நீதியில் கடைகோடி கடைசியில் இருப்பவர்களும் அவர்களே. இந்த இரண்டும் அவர்களை கூடிய விரைவில் ஒரு கலாச்சார அனாதையாக ஆக்கப்போவது உறுதி.

என்ன தான் வெளி நாட்டிலே வளர்ந்தாலும் தமிழர்களின் பிள்ளைகள் இன்னமும் அப்பா அம்மா என்று தான் விளிக்கிறார்கள். ஆனால வடக்கத்தியர்கள் டாடி மம்மிக்கு மாறி நூற்றாண்டுகள் தாண்டியாச்சு.

தன் மொழியை தன்னால் காக்க முடியவில்லையே என்று அடுத்தவருக்கு தத்துகொடுத்து காக்க நினைக்கிறார்கள் அவர்களின் அரசியல் தலைவர்கள்.

தொழிலுக்கு தேவை என்று வரும் போது C சாவா மொழியை கற்றுக்கொண்டது போல் இந்தியை கற்றுக்கொள்வது ஒன்று முடியாத காரியம் இல்லை என்று எத்தனை முறை விளக்கினாலும் என்னால் ஆங்கிலம் படிக்க முடியாது அதனால் நீ கட்டாயம் இந்தி படி என்று சொல்வது தான் எரிச்சலாக இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

')) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பரமசிவம்

')) said...

அனானி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...