Wednesday, September 20, 2017

திருமுருகன் விடுவிப்பு புயலுக்கு முன் அமைதியா

நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்திருக்கும் திருமுருகனுக்கும் அவரது தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

சாதாரணமாக இப்படி வழக்கில் எல்லாம் விடுவிப்பது அபூர்வம், என்ன என்ன காரணங்களை எல்லாம் சொல்ல முடியுமோ அவைகளை எல்லாம் பூடகமாக வாய்வழி வாதமாக வைத்துவிட்டு அவைகளை எழுத்துபூர்வமாக கொடுக்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஆண்டுகளை எளிதாக கடத்த முடியும்.

அதுவும் மைய அரசும் மா நில அரசும் சேர்ந்து நடத்திய நாடகம் என்றதால் என்ன என்ன தில்லு முல்லுகளை செய்யலாமோ அவ்வளவும் செய்ய அவர்களுக்கு முழு பலமும் ஆசிர்வாதமும் உண்டு.

இருப்பினும் எப்படி இவ்வளவு விரைவில் வெளியே விட சம்மதித்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை இப்போதைக்கு விடுங்கள் நாளை எங்காவது ஊருக்கு போகும் போது அங்கே பொது சொத்துக்கு தீயை வைத்துவிட்டு திருமுருகன் தான் வைத்தார் என்று அள்ளிக்கொண்டு வருவோம் என்ற திட்டத்தில் வெளியில் விட்டார்களா என்று தெரியவில்லை.

பொங்கல் சென்று தீபாவளி நெருங்கிக்கொண்டு இருக்கிறது இன்னமும் அந்த சல்லிகட்டு போராட்டத்தில் தீ வைத்த நல்லவர்கள் யார் என்றும் அவர்களுக்கு என்ன தண்டனை என்றும் இது வரையில் தெரியவில்லை. ஆனால் அதற்குள்ளாக போராட்ட குழுவை 6 மாதம் சிறையில் வைத்தாகிவிட்டது.

திருமுருகன் உள்ளே இருந்த நாட்களில் நீட்டும் அது சார்ந்தும் நிறைய நடந்துவிட்டது. நீட் சம்பந்தமாக என்ன என்ன செய்ய போகிறார் என்று பார்ப்போம்.

0 comments: