Monday, September 18, 2017

இராசீவ்காந்தியும் தூர்தர்சனும் மோடியும் நவோதயாவும்

முன்னொரு காலத்தில் இப்படி ஒரு சிரிப்பு தமிழ் நாளிதழில் வந்தது. மன நல மருத்துவரிடம் கணவனை மனைவி அழைத்து வந்து சொல்வார், "டிவி பாக்கும் போது கரண்டு போனா உடனே இராசீவ் காந்தி படத்தையே பார்த்துகிட்டு இருக்கார்ன்னு" சொல்வதாக இருக்கும் அந்த நகைப்பு.

அந்த கால கட்டத்தில் தூர்தர்சனை விட்ட வேற நாதியில்ல ஆகையால் என்னை நீங்க பார்த்து தான் தொலையனும் என்று எப்போது பார்த்தாலும் இராசீவின் படத்தையே காட்டியதன் விளைவு இந்த நகைப்பில் வந்து நின்றது.

பிறகு இந்தி நிகழ்சிகளை தேசிய நிகழ்ச்சிகள் என்ற பெயரில் திணித்தார்கள். வயலும் வாழ்வும் செய்தியும் முடிந்த பிறகு தேசிய நிகழ்ச்சிகள் என்று இரவு 9:00 வரை காக்க வைத்துவிட்டு பிறகு பாருங்கள் என்று சொல்வார்கள்.

ஞாயிறு இரவில் ஒரு படம் காட்டுவார்கள், அந்த படமோ மிகவும் பாடாவதியான படமாக இருந்தாலும் முடிவு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள இரவு 9:00 வரையில் காத்துகிடக்கனும்.

எங்க ஆட்சி எங்கள் முடியு நீங்கள் எல்லாம் என்ன செஞ்சாலும் இப்படியாது இந்திய கற்றுக்கொள் என்று அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்சனில் இவர்கள் படுத்திய பாடு கொஞ்சமா நஞ்சமா. விளம்பரம் கூட இந்தியில் தான் வரும். என்னே கொடுமை என்று தமிழக மக்களுக்கும் இருந்து விட்டு போனார்கள்.

ஆனால் இன்றைக்கு அந்த தூர்தர்சனும் அகில இந்திய வானொலியின் செய்திகளைக்கூட மக்கள் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை. 2 நிமிடத்திற்கு ஒரு முறை அமிதாப் வடக்கின் ஒரு குக்கிராமத்தில் இயற்கை உபாதைக்காக போகின்றவனை விசில் அடித்து இங்கே வா என்று கூப்பிடும் சொத்த பாரத்து விளம்பரம் மட்டும் தான் ஒளிபரப்பாகின்றது. அவ்வப்போது 30 ஆணுகளுக்கு முன்னால் ஒளிபரப்பிய படங்கள் மறைந்த இயக்குனர்களின் அந்தகால பேட்டி என்று காலாவதியான நிகழ்ச்சிகளாகவே வழங்குகின்றது.

ஒரு வேளை நவோதயா பள்ளியில் இந்தியில் பயின்றால் தான் மருத்துவம் என்று மோடி திணிக்கும் கால் தமிழகத்தில் இன்னும் 20 ஆண்டுகளில் சொத்த பாரத்துக்கு விளம்பரம் போட்ட நவோதயா ஆசிரியர்கள் தயாராக்குகின்றது என்றது மட்டுமே பொருள்.

தமிழகத்தில் மோடியைவிட அதிக அதிகார சம்பத்தை எல்லாம் செயலலிதாவின் ஆட்டத்தில் கண்டவர்கள் நாம், கிட்டதட்ட 25 ஆண்டுகளி அவர் கொடுத்த கசப்பு மருந்தை விழுங்கியவர்கள் நாம். நீங்கள் செய்யும் பந்தாக்களை விட 1000 மடங்கு பந்தாக்களை எல்லாம் தனது முதலாவது ஆட்சிகாலத்தில் நிகழ்த்தி மக்களின் சாபத்தை வாங்கிக்கட்டி கொண்ட செயலலிதாவின் காட்டாட்சி போல் இருக்கிறது உங்களி பேயாட்சி.

நாமும் மிரட்டினோம் அவர்களும் மிரண்டுவிட்டார்கள் என்று எண்ணாதீர்கள்.

இன்னும் 20 ஆண்டுகளில் நவோதயா பள்ளிகளில் பசுமாடுகளை கட்டி பராமரிக்கும் பகுதி நேர மைய அரசு ஆசிரியர்கள் ஏக் காவும் மே ஏக் கிசான் ரகுதாத்தா என்று சொல்வதை கற்பனையில் பார்க்கவே வேடிக்கையாக இருக்கின்றது...........

0 comments: