Wednesday, August 16, 2017

இந்தியாவை நாம் ஏன் வெறுக்கனும்

இந்தியா எனது தாய் நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள், சமூகத்தின் பால் வரும் வேறுபாடுகளை அரசியல் அமைப்பின் பாலும் சட்டத்தின் வழியிலும் நின்று தீர்வு காண்பேன் என்று உறுதி கூறிய நாட்கள் நினைவுக்கு வந்து போகின்றது.

அந்த மூவர்ணக்கொடியை பார்த்ததும் மனதுக்குள் வரும் அந்த சிலிப்பும் பெருமிதமும் கனவாகவும் அந்த கால நினைவுகளாகவும் மட்டுமே ஆகிவிட்டுமோ என்ற அச்சமே வருகின்றது.

நாளை நள்ளிரவில் இந்த மூவர்ணக்கொடு செல்லாது நாளையில் இருந்து இனி எல்லோரும் பச்சை நிறக்கொடியை தான் இந்தியாவின் கொடியாக வணங்கவேண்டும் என்று சொல்லிவிடுவார்களே என்று கிலியாகவும் இருக்கிறது.

வீட்டு நலனையும் உனது சொந்த நலனையும் விட நாட்டின் நலம் தான் முக்கியம் என்றும் அதற்காக நீ அனைத்தையும் விட்டுக்கொடுத்தால் தவறில்லை என்று வா உ சி யை உதாரணமாய் காட்டி பேசுவார்கள். வெள்ளையர்களை எதிர்த்து சுதேசி கப்பல் விட்டவரை அந்த கப்பலை கடைசியில் வெள்ளையரிடமே விற்ற கொடுமை இந்தியாவில் மட்டுமே நடக்கும். அதை விடக்கொடுமை எல்லாம் இப்போது நடந்துக்கொண்டு இருக்கிறது.

உணவு பாதுகப்பு திட்டமாம், அந்த திட்டத்தால் மக்கள் எல்லாம் அதிகவிலை கொடுத்து தான் உணவை வாங்க வேண்டும், திட்டத்திற்கு பெயர் உணவு பாதுகப்புத்திட்டம். என்னே கொடுமையடா

கதிராமங்கலத்தில் குடி நீர் நன்றாகத்தான் இருக்கின்றதாக ஒரு சாதிக்கட்சி தலைவர் சொல்கிறார், ஆனால் அவர் கோவையில் நல்ல குடி நீரைக்குடித்துக்கொண்டு கதிராமங்கலத்து மக்களின் நீருக்கு சான்றிதழ் வழங்குகிறார்.

மைய அரசில் அங்கம் வகிக்காத மாநிலங்களை எல்லாம் சுடுகாடாக மாற்றும் திட்டத்துடன் இயங்கும் அரசியல் நகர்வுகளை தமிழகத்தில் நடத்தி எங்கே எல்லாம் விவசாயம் நடந்ததோ அங்கே எல்லாம் தரிசு நிலங்களாக கானும் கொடுமை அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

நீதிமன்றங்கள் செல்லரித்து உளுத்துக்கொட்டும் நிலையில் இருக்கின்றது, கணக்கு பாடம் படிக்கும் மாணவர்கள் எல்லாம் 2 + 2 = 5 என்று எள்ளி நகையாடுகிறார்கள், 1000 கோடி ரூபாய் கொடுத்தால் 2 + 2 = 1 என்றும் கூட தீர்புகிடைக்கும் என்று நகைக்கிறார்கள்.....

கொலை செய்வது பாவம் என்றும் மரண தண்டனைக்கு உரிய குற்றம் என்று தான் இது வரையில் கேள்விப்பட்டு இருக்கின்றோம் ஆனால் மாகாத்துமா என்று உலகமே கொண்டாடியவரை கொன்றது ஒன்றும் குற்றமே இல்லை என்று பகவத் கீதையை சாட்சியாக கூறும் கொடுமைகளை எல்லாம் பார்க்கிறோமே என்று மனம் பதறுகின்றது.

எந்த மொழி பேச வேண்டும் என்றதில் இருந்து என்ன உண்ண வேண்டும் உடுத்தவேண்டும் தெய்வமாக வேண்டும் என்று கட்டளையிடும் அரசை இந்தியா என்றுமே கண்டது இல்லை ஆனால் இன்று இவைகள் தான் நாள்ளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நடந்துக்கொண்டு இருக்கிறது.

 நாடு முன்னேறுகிறது என்று தான் அடிக்கடி சொல்கிறார்கள் ஆனால் சாமானியனை இனிமேல் தனது அத்தியா அவசிய பொருட்களை கூட அதிகப்படியாக பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும் என்ற நிலை முன்னேற்றம் இல்லை என்றது பொருளாதாரம் தெரியாதவர்களுக்கு கூட தெளிவாக தெரியும், ஆனால் மைய அரசை சேர்ந்த தமிழக அரசியல்வாதிகள் தமிழகத்திலும் இந்தியாவிலும் பாலாறும் தேனாறும் ஓடுவதாக சொல்கிறார்கள்.

நாளைக்கு நாள் வேலை வாய்ப்புகள் குறந்துக்கொண்டே வருகின்றது, விலைவாசியே வின்கல வேகத்தில் பறக்கின்றது.

4 வருட பட்டம் பயின்றால் தான் அமெரிக்கவில் வேலை கிடைக்கும் என்று ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு என்று ஆங்கில வழி கல்வி பள்ளிகளும் கல்லூரிகளும் கல்லா கட்டியது, இந்த வருடம் இயந்திர பொறியியல் படிப்பு படிக்க ஆளே இல்லை, பொறியிலே வேண்டாம் என்று மக்கள் ஒதுக்க ஆரம்பித்து வருடங்கள் ஆகுகின்றது ஆனால் நாடு நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கிறது என்று மாதம் ஒரு முறை வானொலியிலும் தொகாவிலும் பேட்டிகள் பறக்கின்றது.

நாட்டில் அனைத்து மக்களும் ஒரே பாடத்திட்ட தேர்வு முறை தான் எழுதவேண்டும் என்கிறார்கள் அப்படியானால் ஏழைகள் படிக்க அரசுபள்ளி பாடத்திட்டமும், கொஞ்சம் பணம் உள்ளவர்களுக்கு மக்காலே பாடதிட்டமும், பெரும் செல்வந்தர்களுக்கு என்று சொகுசு படசாலைகளும் நாட்டில் எதற்கு. அப்படி எந்த கல்வி சிறந்ததோ அதை அரசு கல்வியாக வழங்க வேண்டியது தானே ஆனால் அந்த மட்டமான படிப்பை தான் அரசு வழங்குமாம் ஆனால் மேற்படிப்பு சொகுசு படிப்புபடித்தவர்களுக்கு மட்டும் தானாம்.

இதை எல்லாம் பார்க்கும் போது இது என்ன நாடு என்று வெறுப்பே வருகின்றது. ஆனால் இது என்னுடைய நாடாச்சே, இந்த வெறுப்பு அரசு நடத்தும் அந்த அரசியல்வாதிகள் மேலும் ஆட்சியின் மேலும் அல்லவா வெறுப்பு வரவேண்டும் அதை விட்டு நாட்டின் மீது ஏன் கோபம் வருகின்றது.

அது சரி சொந்த நாட்டிலே அகதியாய் வாழ யாருக்கு தான் பிடிக்கும், என்ன உண்ண வேண்டும், உடுத்த வேண்டும், படிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று வாழும் வீட்டிலேயே வாழ முடியாதவர்களை அப்படி ஒரு நாட்டில் வசிக்க சொன்னால் எப்படி அதுவும் எப்படி சொல் பேச்சு கேட்கவில்லை என்றால் எப்படி கொல்லப்படுவீர்கள் என்று மக்களை நடுத்தெருவில் கொண்டு வந்து அடித்தே கொன்று அல்லவா உதாரணம் காட்டுகிறார்கள்.... என்னே ஒரு கொடுமை.

0 comments: