Thursday, August 3, 2017

கலாமும் திருவள்ளுவரும் -- திக காரங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் போல

அரசியல் மேடை பேச்சுக்களை கேட்க சுவையாக திகழ்வது தி கவும் பொதுவுடமையாளர்களுடையதும் தான். காரணம் இவர்களிடம் தான் அதிகமான பொருளடக்கம் இருக்கும் எடுத்துக்கொண்ட தலைப்பில் மணிக்கணக்கில் உதாரணங்களுடன் கொட்டுவார்கள்.

தி கவினர் பேசும் போது அதிகம் ஆளும் சொல்லாடல்களில் முக்கியமானது இந்து மதம் எப்படி எல்லா மதத்தையும் விழுங்கி ஏப்பம்விட்டது என்றதாகும். அந்த வகையில் அவர்கள் காட்டும் மேற்க்காட்டுதல் திருவள்ளுவரை.

ஒரு காலத்தில் திருவள்ளுவர் சிலை என்றால் ஒரு முனிவனின் சிலையாக இருக்கும், தலையில் முடிந்த கொண்டையும் கையில் ஓலை சுவடி என்றும் மட்டும் தான் இருந்தது. பிறகு அதுவே நெற்றியுல் திருநீர் அணிந்து வர துவங்கியது. பிறகு மெல்ல அந்த சிலையி பூணூலுடன் வரத்துவங்கி இன்றைக்கு திருவள்ளுவர் சிலையில் பூணூல் இல்லை என்றால் பொருட்குற்றமாக பார்க்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

இதை விளக்கும் போது திகாவினர் சொல்லும் வியாக்யாஞானம் இது தான், எது எல்லாம் அறிவில் சிறந்து விளங்குகின்றதோ அல்லது சிறப்பாக இருக்கின்றதோ அவைகள் எல்லாம் எங்களுடையவைகள் மட்டும் தான் அல்லது எங்களால் மட்டும் தான் சிறந்தவைகளை கொடுக்க முடியும் என்று பறைச்சாற்றுவது அவர்களது இயல்பு.

அந்த அளவில் உலகப்பொதுமறையாக திருக்குறளுகு ஒரு அங்கிகாரம் கிடத்ததும் திருவள்ளுவருக்கு பூணூல் சூட்டும் சடங்கும் நடந்தேறியது என்று கூறி இன்னும் கொஞ்ச நாள் பொருங்கள் ஐயா பெரியாருக்கும் பூணூல் போட்டு இவர்களே பேசுவார்கள் பாருங்கள் என்று நகைப்பாக சொல்வார்கள்.

அந்த வரிசையில் இந்து மதம் கலாமுக்கு பூணூல் அணிவிக்காமல் இருந்தால் சரி தான்.

கலாம் ஐ நா சபை கூட்டதில் பேசும் போது கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றதை அழகாக குறிப்பிட்டு பேசினார் அது போல் மேற்கோள் காட்டும் இடங்களில் எல்லாம் தமிழ் நூட்களையே தான் மேற்கோள் காட்டினாரே அன்று கீதையில் தான் எல்லாம் இருக்கிறது என்று, காலை மாலை மதியம் இரவு உணவுக்கு முன் இரவுக்கு பின் என்று கீதை படித்தாகவோ அல்லது கீதையை என்னுடனே எப்பொழுதும் வைத்து இருப்பதாகவோ அல்லது தனக்கு பிடித்த புனித நூல் கீதை என்றோ என்றைக்கும் கலாம் குறிப்பிட்டது கிடையாது.

அதே சமயத்தில் கீதையை அவர் விமர்சிக்கவும் இல்லை, நல்ல பகுதிகளை எடுத்துக்கொண்டும் கெட்டபகுதிகளை உதாசிக்கவும் தயங்கவில்லை.

தி க காரர்கள் சொல்வதை போல் எது சிறந்ததோ அவைகள் எங்களிடையவைகள் மட்டுமாகத்தான் இருக்க முடியும் என்று மேலும் பறைசாற்றி இருக்கிறது இந்து மதம். நாளையே பூணூலுடன் கலாமைக்கண்டால் ஆச்சர்யப்படாதீர்கள்.....

1 comments:

')) said...

​நண்பர்கள் வட்டத்தில் கலாம் அய்யாவின் பெயர் கலாம் ஐயர் தான். ​

Jayakumar