Tuesday, January 10, 2017

மோடியின் அல்வா படலம் ஆரம்பம் - அம்பாணியில் இருந்து துவங்குகிறார்

பணமில்லா பரிவத்தனை என்றதும், தனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை அண்ணாச்சி கடைபோல் வைத்து இருப்பவருக்கு ஒரு கண்ணாவது போகனும் என்ற பொறாமையை சாதாரண மக்களின் மனதில் தூவி. தாளம் போடும் விதம் எல்லாம் ஆட வைத்தார் மோடி.

இந்த அழகில் எல்லையில் நிற்கும் இராணுவ வீரர்களின் மானம் கப்பல் ஏறியது தான் மிச்சம்.

50 நாளுக்கு பிறகு சொர்க பூமியாக இந்தியா மாறும் என்று அன்று ஊட்டிய போதையில் நாட்டுக்காக நின்றால் என்ன என்று பொது மக்களையே கேட்க்க வைத்தார் என்றால் அவர் ஏற்றிய அந்த பொறாமை தீ எந்த அளவிற்கு மக்களின் மனதில் பற்றிக்கொண்டு எரிகின்றது என்று அவதானிக்க முடிகின்றது.

50 நாளின் முடிவில் பணமில்லா பரிவர்த்தனை என்றதும் மீண்டும் மக்கள் அப்பாடி இனிமே அண்ணாச்சி தனது வரவு செலவுகளை எல்லாம் அரசுக்கு கணக்கு காட்டியாகனும் என்று தங்களுக்குள் இரகசியாமக பாசகவுடன் இணைத்து சிரித்துக்கொண்டார்கள்.

ஒருவரும் எதிர்பார்க்கா வண்ணம் பெட்ரோல் வங்கிகளில் பணமில்லா பரிவர்த்தனைகள் செய்தால் எங்களுக்கு 1.15% விகிதம் சேவை வரியை வசூலிக்க போவதாக வங்கிகள் தெரிவித்தபடியால் நாங்கள் பணமில்லா பரிவர்த்தனையை நிறுத்திக்கொள்கின்றோம் என்று அறிவித்தார்கள்.

உடனே தடாலடியாக மைய அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு எட்டப்படும் வரை அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என்ற உத்திரவாதத்துடன் பணமில்லா பரிவர்த்தனை தொடரும் என்று சுமூகமாக முடித்து வைத்தார்கள்.

அத்துடன் நிறுத்தாமல் பணமில்லா பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ஊக்கமாக 0.75% தள்ளுபடியும், பணமில்லா பரிவத்தையால் ஏற்படும் கூடுதல் பண சுமையை யார் ஏற்பது என்று ஆலோசனை நடப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

என்ன நடக்கும் பணமில்லா பரிவர்த்தனை நாட்டுக்கா செய்யும் பெட்ரோல் நிறுவனத்தின் சுமையை குறைப்பதற்காக சும்மனாச்சும் கொஞ்சூண்டு 2762 கோடி ரூபாயை மட்டும் பெட்ரோல் கம்பெனிக்கு நட்ட ஈடாக ஆண்டு தோரும் அரசு வழங்கும் என்று பட்சட்டில் தெரிவிப்பார்கள்.

மக்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகையான 0.75% தள்ளுபடி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பட்சட்டு படித்து முடித்த நிமிடத்தில் இருந்து நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள் என்று மோடி அடவுகட்டி மறுபடியும் கூத்தாடுவார்.

பிறகு என்ன பாசகவினர் வீதிக்கு வீதி தொகாவுக்கு தொகா எல்லையில இராணுவவீரன் எந்த கேள்வியும் கேட்க்காம குளிரிலும் மழையிலும் நிக்கல என்று சொல்லி பாரத மாதாகி சேன்னு சொல்லி மெய் சிலிர்ப்பார்கள். அந்த நடிகர்களின் (இங்கே S.V.சேகரின் நினைவு உங்களுக்கு வரவே கூடாது) பேச்சை கேட்கும் பொறாமை போதை ஏறியவர்கள் ஆமாம் எங்களுக்கு மாத சம்பளத்தில் இன்னமும் இவ்வளவு பாக்கி இருக்கிறது அதையும் பிடிங்கி அதாணியும் அம்பாணிக்கும் கொடுங்கள் என்று சொல்லி மறுபடியும் பழக்க தோசத்தில் வங்கி வாசலில் சென்று வரிசையில் நிற்பார்கள்.

அரசாங்க குறிப்பேட்டில் சொல்வதை வைத்து சொன்னால் வெறும் 4 கோடி மக்கள் கட்டும் வருமான வரியையும் மிச்சம் இருக்கும் மக்கள் கட்டும் விற்பனை வரியையும் எடுத்து அம்பாணிக்கும் அதாணிக்கும் ஒரே ஒரு துறையில் கூடுதலாக 2762 கோடி ரூபாய்க்கள் கொடுக்க முடியும் என்றால், இன்னமும் மிச்சம் இருக்கும் வர்த்தகங்களை இதே கணக்கு காட்டி எத்தனை இலட்சம் கோடிகளை மோடி அள்ளிவிடப்போகிறார் என்று சிதம்பரம் போன்ற ஆட்கள் தெளிவு படுத்தினால் எளிமையாக இருக்கும்.

விளக்குவார்களா பொருத்து இருந்து பார்ப்போம்.

பின் குறிப்பு:
தினசரி இந்தியாவின் கச்சா எண்ணை உபயோகம் 3,660,000 பேரல்கள், ஒரு பேரலில் கிட்டத்தட்ட 117 லிட்டர் பெட்ரோலும் டீசலும் கிடைக்கும். ஒரு லிட்டர் பெட்ரோல் டீசலின் சராசரி விலை 58 ரூபாய் என்ற தோராய கணக்கின் படி 1.15% அதிக சேவை வரி என்று கணக்கிட்டால் இந்த ஆண்டிற்கு 2762 கோடி கிடைக்கும்.

0 comments: