Saturday, January 28, 2017

அந்த 7 நாட்களும் அந்த 50 நாட்களும் - புரியாத மாதிரி நடிக்கும் பாசகவும்

சல்லிக்கட்டு போராட்டத்திற்கு யார் காரணம் ஆராய்கிறார்கள் - வாழ்த்துகள்

சல்லிக்கட்டு போராட்டத்திற்கு யார் காரணம். வித்திட்டது யார், வழி நடத்தியது யார். ஏன் கலவரத்தில் முடிந்தது.

சல்லிக்கட்டு மட்டும் தான் இப்போ தமிழத்தில் பிரச்சனையா மற்றபடி என்ன பாலாறும் தேனாறுமா ஓடுது. பிறகு ஏன் சல்லிக்கட்டுக்கு இத்தனை போராட்டம். அப்போ உண்மையில் எந்த அடிப்படையில் இந்த கூட்டம் கூட்டப்பட்டது. அதைவிட இதை கூட்டியவர்கள் யார்....

களத்தில் இருந்து வந்த அனைவரும் வன்முறையா அப்படினா என்னமா என்று கேட்கும் அளவிற்கு இருந்த போராட்டம் கலவரமாக அதுவும் கூட்டம் இருக்கும் இடத்திற்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் வன்முறை முளைக்க இந்த சல்லிக்கட்டு போராட்ட கூட்டம் எப்படி காரணமாக இருந்தது என்று ஆராய்ச்சி செய்கிறார்கள்.

மாணவர்கள் போராடினால் - நக்சல் பாரிகள்
இளைஞர்கள் போராடினால் - தனி தமிழக போராளிகள், இசுலாமிய தீவிரவாதம்
அரசியல் கட்சிகள் போராடினால் - தேச விரோத சக்திகள்

இப்படி தான் இது வரையில் போராட்டங்கள் வகைப்படுத்த பட்டுள்ளது.

நல்லவேளை சல்லிக்கட்டுகாக போராடும் அனைவரும் கருப்பு பண ஆட்கள் என்று சொல்லாமல் விட்டார்களே என்று மனதளவில் ஆருதல் அடைவோம்.

போராட்டம் என்றால் கொடிபிப்பார்கள், கோசம் போடுவார்கள் அதை தொடர்ந்து கல்லெறிவார்கள். பிறகு காவல் துறை அவர்களை சிறைபிடிக்கும், அடைக்கும் நீதிமன்றத்தில் அவர்கள் விடுவிப்பார்கள். பொது சொத்துக்கு விளைவித்த சேதத்தை போராட்ட குழுக்களிடம் வசூலிக்க நீதிமன்றம் ஆணையிடும். இது தான் காலம் காலமாக நடக்கும் போராட்டத்தின் இயல்பு.

ஆனால் மெரினாவில் நடந்தது என்ன, கூட்டம் கூட்டமாக மக்கள் அமர்ந்து இருப்பதும் கோசங்களை எழுப்புவதுமாக இருந்தார்கள். ஆனால் தடுப்புகளை தாண்டி வந்து சாலை மறியலில் கூட ஈடுபடவில்லை.

மேலும் தினமும் புதியவர்கள் வந்து சேர்ந்துகொண்டே இருந்தார்கள், அதுவும் பெண்களும் குழந்தைகளும் என்று தினமும் ஒரு திருவிழா போல் கலந்துகொண்டதை பெருமையாக கருதவும் பேசவும் செய்தார்கள்.

தமிழக அரசும் இந்திய அரசும் இந்த போராட்டத்தை பார்த்து ஏதோ தசரா பண்டிகை நடப்பது போல பார்த்து ஏளனமாக சிரித்தது. அதிலே டெல்லி போகிறேன், புதிய சட்டம் இயற்ற போகிறேன் எல்லோரும் வீட்டிற்கு போய் ஓய்வு எடுங்கள் என்று அறிக்கைகள் வேறு.

போராட்டகுழுவில் யார் தலைவர்கள் என்று தெரியவில்லை பேச்சு வார்த்தை நடத்த என்று ஒரு குற்றசாட்டு. இல்லை என்றால் அமையாக கலைந்து போய் இருக்கும் என்று ஆரூடம் வேறு இப்போது காவல்துறை சார்பில் சொல்கிறார்கள்.

இந்த பசப்பு வார்த்தைகளை நம்பி போராட்ட ஒத்துழைப்பு குழுவை காட்டிக்கொடுப்பார்கள் என்றும் நம்புகிறார்கள். இந்த நல்லவர்களை நம்பி நம்மவர்களை காட்டி கொடுத்துவிடாதீர்கள் நண்பர்களே வேரறுத்துவிடுவார்கள்.

உண்மையில் போராட்டதிற்கு என்ன காரணம், 50 நாட்கள் மக்களை தெருத்தெருவாக அலையவிட்டார்களே அது தான் காரணம்.

அதோடு நில்லாமல் தினம் தினம் அவதிபடும் மக்களை பார்த்து கள்ளபணம் வைத்து இருப்பவர்கள், கருப்புபணம் வைத்து இருப்பவர்கள் என்றி எள்ளி சிரித்தார்கள் அந்த 50 நாட்களை முடக்கியவர்கள்.

இந்த 50 நாட்களில் எத்தனை விதமான மக்களை தினம் மக்கள் சந்தித்து இருக்க கூடும். பாராபட்சம் இல்லாமல் அன்றாட கட்சி மக்கள் முதல் மாத சம்பளம் பெறும் மக்கள் வரை ஆண் பெண் இளைஞர்கள் மாணவர்கள் என்று வரிசையில் நின்ற மக்கள் அதுவும் மணிக்கணக்கில் நின்றவர்கள் எல்லாம் என்ன மௌனமாகவா நின்றுக்கொண்டு பணம் எடுத்தது தாமே என்று விட்டிற்கு சென்ன்றார்கள் என்று நம்பும் அந்த 50 நாட்கள் அரசை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

அந்த 50 நாட்களில் எவ்வளவு கேவலமாக மைய அரசு வார்த்தைகளை வீசியது அதுவும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளான நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களை என்னமோ இவர்கள் வீட்டில் பிச்சைக்கு வந்து நிற்கும் மக்களாக நினைத்து என்ன என்ன பேசினார்கள்.

அந்த கோமாளிதனத்தின் உச்சம் வங்கியில் செலுத்திய உங்களது பணம் வெளியே எடுக்காதீர்கள் அதற்கு பதிலாக இன்னும் கொஞ்சம் காசை எடுத்து இறையுங்கள் என்று புனித பிரச்சாரம் வேறு என்று தொடர்ந்து வெறுப்பேற்றினார்கள்.

பார்க்கும் இடங்களில் எல்லாம் பேடியம் என்று அறிவிப்புகளை காட்டி காட்டி வெறுபேற்றினார்கள். அது மட்டும் இல்லாது எல்லா தொகாவும் மக்களை கூட்டி வைத்துக்கொண்டு மக்கள் தேசத்துக்காக அவர்களது சொந்த காசை இறைத்தால் தான் என்ன குறைந்துவிடப்போகிறார்கள் என்று எள்ளி நகையாடினார்கள்.

 நாங்கள் நாடாளுமன்றத்தில் தனி பெரும்பான்மை நாங்கள் நிங்கள் இருந்தால் எனக்கு என்ன செத்தால் எனக்கு என்ன, அந்த 50 நாட்கள் மட்டும் இல்லை இன்னும் அந்த 2 1/2 வருடம் கூட கொடுப்போம். வந்து வரிசையில் நில் என்றால் நிற்கனும் கை எழுத்து போடு என்றால் போடனும் இல்லை என்றால் பிறகு என்ன ஆகும் என்று தெரிந்துதிருக்கும் என்று நினைக்கின்றோம் என்று வசனங்களை டெல்லியில் இருந்து இந்தியில் ஒலி பரப்பினார்கள்.

அந்த 50 நாட்களில் சந்தித்த அனைவரிடம் இருக்கும் மனப்போராட்டம் பகிரப்பட்டது, என்னையா இது இப்படி எதேச்சதிர்காரம் செய்கிறார்கள் என்ற வெறுப்பு அனைவரது மனதிலும் புழுங்கிக்கிடந்தது.

தமிழகத்தில் பண்டிகை என்றால் அது தீபாவளியும் பொங்கலும் தான் மற்றவைகளை பற்றி அதிகம் கவலைபடுவது பாசகவினர்கள் தான்.

அந்த 50 நாட்களின் விளைவாக பொங்கல் இல்லை என்று ஆனது, 1000 ரூபாய் நோட்டில் வேர்கடலை சாப்பிடும் கூட்டம் எல்லாம் எளியவர்களை பார்த்து பொங்கல் கொண்டாட முடியலையாம் என்று நகைத்து ஏளனமாக பேசியது. என்ன தேச நலனுக்காக பண்டிகைய கொண்டாடாம இருங்கள் என்று தான் சொல்லவில்லை மற்றபடி அனைத்தையும் செய்த்தது அந்த திமிர் பிடிச்ச அரசு.

அது வரை பொருமை காத்தவனுக்கு என்னடா ஏதாவது செய்ஞ்சே ஆகனும் என்று தோன்றவே அந்த 7 நாட்களை அரங்கேற்றினார்கள் மாணவர்களும் இளைஞர்களும்.

இது ஆராய்ந்து செய்து கண்டுபிடிக்க வேண்டியதாம் தொகாவில் விவாத்திற்கு வரும் பாசக மக்களும் நடு நிலை என்று சொல்லிக்கொள்ளும் மக்களும். கைபுண்ணுக்கு கண்ணாடி தேவையா.

சந்தேகம் இருந்தால் இன்னும் ஒரு அந்த 50 நாட்களை மைய அரசால் கொண்டுவர சொல்லிப்பாருங்களேன், தமிழகம் மட்டும் இல்லை மற்ற மானிலங்களிலும் இதே போராட்டம் வெடிக்கும்.

போய் வேற எந்த முதளாலிய வாழவைக்க இந்த மக்களை சாக அடிச்சு அவன் உழைத்து சம்பாத்தித்த பணத்தை எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று கொள்கை வகுங்கள் பாசகவினர்களே.........

0 comments: