Friday, April 1, 2016

முத்து நிலவன் ஐயா ஏன் இப்படி நேர்மாறாகவே சிந்தித்து எழுதுகிறார் - பெண்களை கேவலப்படுத்தும் விளம்பரம்.

இதோ அவரது பதிவு

இந்த விளம்பரத்தில் காட்டுவது உண்மையில் என்ன

இந்த ஆளை பார்த்தால் நன்றாக உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் உள்ளவனாக இருக்கிறானே, பிறகு எதற்கு இந்த சிறு பிள்ளைகள் ஓட்டி விளையாடும் இந்த 125 சீசி வண்டியை எடுத்துக்கொண்டு அதிவேக சாலையிலும் அதிக வாகன நெருக்கடியும் உள்ள வீதியில் பாதுகாப்பு இல்லாமல் செல்கிறானே! என்ன என்று பார்ப்போம் என்ற அக்கறையோடு சென்று பார்ப்பதாக அல்லவா இந்த விளம்பரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஏன் பெண்களுக்கு தெரியாதா 350, 500 சீசி வண்டிகளை தான் இப்போது அவர்களே ஓட்டுகிறார்கள், அந்த அளவுக்காவது வேண்டாமா என்று பார்க்கும் பார்வையாளர்களும் கேட்ப்பார்கள்.

அவசர பட்டு விட்டீர்களே ஐயா.....

8 comments:

')) said...

ஒரு நாணயத்திற்கு இருபுறம் உண்டு.

')) said...

நான் கூட பயந்துட்டேன்... (எங்க என்னைப் புகழ்ந்திட்டிங்களோன்னு!)
நல்ல வேளை! அந்தப் பெண்களைத்தான் பெரிய பெரிய வண்டிகளையெல்லாம் ஓட்டுறாங்கன்னு புகழ்ந்திருக்கீங்க இல்ல? அருமை அருமை!
நல்லா வருவீங்கம்மா நீங்க நல்லாவே வருவீங்க.

')) said...

அடடா! இந்த விளம்பரத்துக்கு இப்படி ஒரு உரையும் உண்டா?

')) said...

ஆஹா நல்லாத்தான் சமாளிக்கிறீங்க . கிண்டலாத்தான் சொல்றீங்கன்னு நினைக்கிறன்

')) said...

உண்மை, இரு புறமும் உண்டு. கேவலப்படுத்துவதாக அவர்களுக்கு நினைப்பு.......வருகைக்கும் கருதிற்கும் நன்றி ஐயா.

')) said...

எங்கே என்னை வசை பாடுவீகளோன்னு பயந்தேன். இவனுக கொஞ்சம் விட்ட ஒரு சைக்கிளை கொண்டு வந்து அது பின்னாடி ஓடுதுக என்று கூட காட்டுவானுக....... வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி முத்து நிலவன் ஐயா.

')) said...

இப்படி தான் வாழ்க்கையில் பாதி சம்பவங்கள் நிகழுது, அந்த காலத்தில் TR பாட்டு ஒன்று உண்டு, "அவ யார பார்த்தோ சிரிக்க இவன் தன்னை தான்னு நினைக்க பவுடர் அள்ளி பூசி அவன் பரட்டை தலைய சீவி...." அது போல இந்த விளம்பரமும். எந்த காலத்துல 125 CC வண்டிய வச்சுகிட்டு அதுவும் ஊரே ஓடி வர மாதிரி. கொஞ்சம் விட்டா TVS 50 ஓட்டி கூட இப்படி காட்டுவானுக. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி யோகன்.

')) said...

யார் சமாளிப்பது நானா அவர்களா....... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முரளிதரன்.