Friday, April 1, 2016

அன்புமணியா இல்லை வன்னியர்மணியா...எல்லோருக்கும் முதல்வராக இருக்கமுடியுமா.....

பாமகவை பற்றிய பேச்சை எடுத்தாலே மக்களின் மனதில் வருவது வன்னியர் கட்சிக்கு எதுக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் வைத்தார்கள் என்றதும். வன்னியர்களின் உரிமை போராட்டம் என்று சாலையோர மரங்களை வெட்டி வீசியதும், தென்னார்காடு மாவட்டத்தில் பற்ற வைத்த சாதி மோதல்கள் மட்டும் தான்.

எதோ 1947ல் நடந்தது போல் பதில் சொல்வார்கள் இவைகளை பற்றி இராமதாசும், அன்புமணியும்.

இப்போது கூட வன்னியர் கட்சி, இயக்கங்கள் பற்றி ஏதாவது கேட்டுப்பாருங்களேன் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் பதில் தருகிறார் என்று பார்க்கலாம்.

இதிலே உங்கள் ஊர் உங்கள் அன்புமணி என்ற வாசகம் வேறு. ஓகோ வன்னியர்களை நோக்கி வன்னியர் ஊர் வன்னியர் அன்புமணி என்றதை தான் இப்படி மாற்றி எழுதுகிறார்களோ என்னவோ. ஒரு ஒப்புக்கு சொல்வோமானால் எனது பாரதம் என்று பாசக மூச்சுக்கு 300 தடவை சொல்வது போல் போலும்.

நிலைமை இப்படி இருக்க நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என்று சொல்லிக்கொண்டு ஊர் ஊராக கூட்டம் நடத்துகிறார்.

அன்புமணியையும் வன்னியர் கட்சியையும் வன்னியர்கள் தவிர வேறு யார் எல்லாம் விரும்புகிறார்கள் என்று பார்ப்போம்.

வன்னியர்கள் வசிக்கும் ஊர்களில் இருக்கும் மற்ற சாதியினர்களும் மதத்தினர்கள் அனைவரும் இவர்களின் ஆட்டம் கண்டு என்னப்பா இந்த ஆட்டம் ஆடுகிறார்கள் என்று தான் நினைக்கும்படியாக நடந்துகொள்கிறார்கள்.

நான் விவசாயி எனது வீட்டில் மண்வெட்டியும் அருவாளும் கடப்பாறையும் தான் இருக்கும் அவைகளை நாங்கள் தேவை என்று வந்தால் ஆயுதமாகவும் பயன்படுத்துவோம் என்று மேடை போட்டு எச்சரிக்கை விடுத்தவர்கள் தானே இவர்கள்.

இளைஞர்களுக்கு வன்னியர் கட்சியை தான் பிடிக்கின்றதாம் அன்புமணி கூட்டத்திற்கு கூட்டம் சொல்கிறார். என்ன வன்னியர் இளைஞர்கள் என்று சொல்லாமல் இளைஞர் என்று மட்டும் சொல்கிறார் அவ்வளவு தான்.

வீட்டில் ஒருவருக்கு வேலை என்றும் கூட்டத்திற்கு கூட்டம் சொல்கிறார், வன்னியர் வீட்டில் ஒருவருக்கு வேலை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அது சரி படித்தவர்களுக்கு வேலை என்று அதிமுக டாசுமார்க்கில் உட்காரவைத்து ஊத்திகொடுக்க வைத்தார்களே அந்த மாதிரி வன்னியர் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு கனவு திட்டம் வைத்து இருப்பார் அன்புமணி.

இவர் மத்திய அமைச்சராக இருந்த போது நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக இலாப நோக்கு இல்லாமல் இயங்கி வந்த மருந்து ஆலைகள் 4 மூடி வெளி நாட்டு மருந்து நிறுவனம் வந்து இப்போது அத்தியா அவசிய மருந்தள் எல்லாம் கிடைக்கமலும் பெரும் பொருள் செலவிலும் கிடைக்க வழி செய்த்த உத்தமர். இதில் வன்னியர் மக்களும் தான் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள் என்றது வேறு செய்தி.

இதை ஏன்யா இழுத்து மூடினீர்கள் என்றால் உலக தரத்தில் இல்லை என்று சொன்னார்களாம். ஏன் தரத்தை உயர்த்த முடியாத நிலையில் தான் நிலைமை அந்த 4 நிறுவனங்களும் இருந்ததா என்ன.........

இதை அன்புமணியின் பாணியில் சொல்வது என்றால் தலை இருந்தால் தானே தலைவலி வரும்...... தலையே இல்லை என்றால் எப்படி தலைவலி வரும் எப்படி என்னோடு மருத்துவ அறிவு என்று சொல்லி கண் சிமிட்டுவார் அந்த வன்னியர்மணி ..... ஒ ஓ அன்புமணி..

கடந்த 20 ஆண்டுகளில் வன்னியர் கட்சி இவ்வளவு பொருள் செலவில் எப்போதாவது கூட்டங்கள் நடத்தி பார்த்து இருக்கிறோமா........

எப்படி இப்போது மட்டும் என்று கேட்டீர்கள் என்றால், அரசியலில் தனித்து விடப்பட்ட அனாதை இந்த வன்னியர் கட்சி. காரணம் 4 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்த இந்த வன்னியர்மணி அடித்த கொட்டம் சொல்லிக்கொள்ள முடியாதவைகள். சான்றாக தமிழகத்தில் திறந்த மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ப்பு கல்லூரிகளின் இலட்சனத்தை பார்த்தால் புரியும்.

அடித்த கொள்ளையை எல்லாம் வைத்து என்ன அழகாக மேடைகள் அமைத்து திரைபட நடிகர்களை போல் அழகாக வசனம் பேசி நடிக்கிறார் மேடைக்கு மேடை. படங்களில் நடித்து இருந்தால் ஒவ்வொரு படத்திற்கு ஆசுகர் விருதே கிடைத்து இருக்கும். வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டுவிட்டார்.

மேடைகளில் நாகரீகமாக கூட பேசத்தெரியாத வன்னியர்மணி இவர், எதிர்கட்சிகளையும் அதன் தலைவர்களையும் என்ன எல்லாம் பேசி இருக்கிறார் பாருங்கள்.

 நடக்கவே முடியாதவர், நடக்க கூடாதவர், நிக்க முடியாதவர் என்று ஏகவசனம்.

ஐயா வன்னியர்மணி முதுமை உங்களுக்கும் வரும் அப்போது வன்னியர்மணி பறந்து பறந்து வருவதை பார்க்கத்தானே போகின்றோம்.

மோடைக்கு மேடை திமுக அதிமுக பாசக காங்கிரசு நாட்டிற்கு என்ன செய்தது என்று கேட்டு ஆடிப்பாடுகிறார், நாம் இப்போது கேட்ப்போம் இந்த வன்னியர்மணியை, சென்னை, கடலூர் பெருவெள்ளத்தின் போது வன்னியர்கட்சி என்ன என்ன பணிகளை செய்தது........

பாதிக்க பட்ட இந்த இரண்டு இடங்களிலும் வன்னியர்களும் இருந்தார்கள் வன்னியர்மணி எங்கே ஓடி ஒளிந்தீர்கள் வன்னியர்மணி. மற்ற இயக்கங்களை விமர்சனம் செய்ய உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது....

நல்லவேளை வைகோ வன்னியர்மணியை முதல்வர் ஆக்குங்கள் என்று குடை பிடிக்காமல் போனார்.........

0 comments: