Tuesday, July 28, 2015

அப்துல் கலாம் - இந்தியாவின் சாதாரண மக்களின் நம்பிக்கை

கலாமின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒரு இழப்பு. நல்ல மனிதர்களின் மறைவு எவ்வளவு பெரிய இழப்பு என்று மறுபடியும் காட்டிய நிகழ்வு இது.

பொதுவாக பணக்கார மக்களுக்கு மட்டும் தான் பெரிய படிப்பு எல்லாம் சாத்தியம் என்று மாய்ந்து இருந்த காலத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் நன்றாக படிக்கும் பட்ச்சத்தில் நல்ல படிப்பு படிக்கலாம் என்று நிகழ்த்திக்காட்டியவர்.

வள்ளுவர் சொன்னது போல் எல்லா சொத்தையும் விட கல்விதான் முதன்மையான சொத்து என்று தேடி, வளர்த்துக்கொண்ட திறமையும் ஆற்றலும் அவரை இந்தியாவின் அறிவியல் முன்னேற்ற திட்டங்களை வகுத்து எடுக்கவும், முன் நடத்தி செல்லவும் வைத்தது.

பொதுவாக தனது திறமை என்ன என்ன பதிவிகள் கிடைக்கும் என்று தெரிந்துக்கொண்டு காய்களை நகர்த்தும் இந்த காலத்திலும் இவரை தேடி பதவி வரும் விதத்தில் தன்னை தயார்படுத்தி கொண்டவர். வந்த வாய்ப்பை இந்தியா இருக்கும் காலம் வரை இவரது பேரும் இருக்கும் விதத்தில் செவ்வனே பயனாக்கி கொடுத்தார் இந்தியாவிற்கு.

அனைத்து ஊடகமும் கொண்டாடுவதை போல், மொழி, மதம், இனம் கடந்த மாமனிதர் இவர்.

ஆசான் என்றைக்கும் ஆசான் தான் என்று உலக்கு மறுமுறையும் நிறுவியவர்.

இந்தியாவின் உயரிய விருதுகளில் அத்தனையும் பெற்றவர், அந்த விருதகள் எல்லாம் இவரை சேர்ந்ததில் தான் மகிழ்ந்து இருக்கும்.

ஒரு படித்த பண்டிதர்க்கு பதவி கொடுத்தால் அதை எப்படி எல்லாம் சிறப்பாக செயலாற்றமுடியும் என்ற வித்தியாசத்தை விதைத்து சென்றவர் இவர்.

இந்தியாவின் கடைசி எளிய குடும்பத்து தந்தை கூட நன்றாக படிடா எல்லாம் தன்னால வரும் என்ற நம்பிக்கையை நாட வைத்த நாயகன் இவர்.

எவ்வளவு நாள் வாழ்ந்தார் என்றது முக்கியம் இல்லை ஆனால் எப்படி வாழ்ந்தர் என்றதே முக்கியம் என்ற இலக்கணத்தை மறுமுறையும் வாழ்ந்து காட்டி உலக்கு காட்டிய உத்தமரே உங்கள் புகழ் வாழ்க ஓங்குக.............

2 comments:

')) said...

அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலிகள்...

')) said...

உலகம் போற்றும் உத்தமருக்கு அஞ்சலி செலுத்துவோம்.