Tuesday, June 30, 2015

இன்று நேற்று நாளை படமும் - Frequency படமும்

Frequency
முதலில் இந்த ஆங்கிலப்படத்தை பார்க்கும் போதே ஏதோ ஒரு தமிழ்படம் பார்ப்பது போல் ஒரு உணர்வு வரும்.

காரணம் கதை, பாசமான அப்பா. பிள்ளைகாகவும் மனைவிக்காகவும் உயிரையும் கொடுக்கும் அப்பா.

கணவனின் மறைவுக்கு பிறகு மனகே உலகம் என்று வாழும் ஒரு தாய், காதலின் முறிவில் என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவின் வீட்டிற்கு சென்று தங்கும் மகன். அவளோ பிரிந்து சென்ற காதிலியை பாராட்டுவதும் மகனை ஆற்றுவதும் என்ற ஒரு அன்பு.

அப்பா தீயணைப்பு வீரர் மகனோ துப்பரிவாளனாக காவல் துறையில், அவனுக்கு வேட்டையாடு விளையாடு இராகவன் போல் எப்பவும் அவனது யூகம் சரியாக அமைதல்.

கருணாவை போல் ஒரு உயிர் நண்பன் என்று கதை இருக்க.

எப்படி பொழுது போக்குவது என்று இருக்க அப்பாவின் பழைய ரேடியோவில் யாரோ அழைக்க யார் என்ற ஆர்வத்தில் பேச அது கடைசியில் அவனது அப்பாவிடம் தான் பேசுகின்றோம் என்று தெரிய, தந்தையோ யாரோ தனது குடும்பத்தை கலைக்க இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று கோபம் கொண்டு பிறகு புரிந்துக்கொண்டு இவனோடு சேர்ந்து செயல்படும் போது கதையில் ஒரு வேகம் பிறக்கும்.

அப்பா இளம் வயது மகனிடம் வளர்ந்த மகனை பேச வைப்பதும் அவனது உயிர் தோழனிடமும் பேசுவதையும் தமிழில் நாயகியின் பாத்திரமாக மாற்றிவிட்டார்கள்.

கிட்டதட்ட தான் துப்பரியும் ஒரு கொலையை பற்றிய துப்பை துலக்க அப்பாவின் உதவியை அந்த காலத்தில் செய்ய சொல்ல, அது கடைசியில் அவனது அம்மாவின் கொலையில் வந்து முடிகின்றது.

அதை அப்படியே தமிழில் நாயகி சாவதாக காட்டுகிறார்கள். அந்த ஆங்கில பாசக்கார அப்பாவை காட்ட நாயகியின் அப்பா பாத்திரம் ஆனால் அந்த ஆங்கில அப்பா காட்டும் வீர சாகசங்கள் தமிழில் இல்லை.

வழியில் ஏதோ மாற்றிவிட்டோம் என்று பழையபடியே அமைத்து வைக்க யார் அந்த கொலைகாரன் என்று கண்டு பிடிக்க மகனும் அப்பாவும் சேர்ந்து படும் பாடு ஆங்கிலத்தில் அவ்வளவு அழகாக வந்து இருக்கும்.

என்ன எந்த படத்தில் இருந்து உருவி இருக்கிறார்கள் என்று எளிதில் கண்டு பிடித்துவிடுவார்கள் என்ற பயத்தில் BACK TO THE FUTURE படத்தில் வரும் காட்சிகளை எல்லாம் வெட்டி ஒட்டியுள்ளார்கள். கதையோடு அந்த காட்சிகள் ஒட்டாமல் இருக்க இது தான் காரணம்.

தமிழில் இன்னமும் முயன்று இருக்கலாம். பாதி சமையலாக போச்சு. ஆங்கிலத்தில் மனதை தொடும் அந்த உணர்வு தமிழில் இல்லை.............

ஒரு சமயத்தில் ஒரு தடயத்தை அப்பா அதே வீட்டில் ஒரு பெட்டியில் மறைத்து வைக்க அதை உடனடியாக இந்த காலகட்டதில் எடுப்பதை ஒரு நாணயத்தை புதைத்து வைத்து எடுப்பதாக தமிழில் காட்டி இருப்பதை பார்க்கமுடியும்.


0 comments: