Tuesday, May 12, 2015

நீதி என்றால் என்ன என்று உலகுக்கு காட்டிய மூத்த குடியின் தற்பொழுதிய நிலை - கைப்பிள்ளை

வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் கேட்கிறார்கள், நீதிபதிகளுக்கு கூட்டல் கணக்கு கூடவா தெரியாது என்று கடுபேத்துகிறார்கள் யுவர் ஆனர். தீர்பின் நகலில் இருந்து எடுத்து கட்டம் கட்டி காட்டி விமர்சனம் செய்கிறார்கள் யுவர் ஆனர், வெளியில் தலை காட்டமுடியவில்லை யுவர் ஆனர். சரி தமிழகத்தை தான் கிண்டல் செய்வார்கள் என்று பார்த்தால் ஒட்டு மொத்த இந்தியாவையும் கேலி பேசுகிறார்கள் யுவர் ஆனர்.

வடக்கில் ஒரு நீதிபதி அப்துல் கலாம் குடியரது தலைவராக இருக்கும் போதே அவருக்கு பிடியாணை வழங்கியதை எல்லாம் ஞாபக படுத்தி சிரிக்கிறார்கள் யுவர் ஆனர்.

செயாவைவிடுங்கள் யுவர் ஆனர் அவர் இந்த நீதிமன்றம் இல்லை உலக நீதிமன்றம் சென்றால் கூட எல்லோரையும் விலைக்கு வாங்கும் வலிமையும் வல்லமையும் அவரிடம் இருக்கிறது அது உலகம் அறிந்த உணமை.

மறுபடியும் திரும்ப திரும்ப அண்ணா துறை சொன்னது தான் ஞாபகத்து வருகிறது யுவர் ஆனர், சட்டம் ஒரு இருட்டு அறை, அதில் வக்கிலின் வாதம் ஒரு விளக்கு அது ஏழைக்கு எட்டாத விளக்கு.

ஒரு வேளை அண்ணா இதை எல்லாம் பார்க்க நேர்ந்து இருந்தால் இப்படி சொல்லி இருப்பார், சட்டம் ஒரு இருட்டு அறை அதில் நீதி என்பது ஒரு விளக்கு அது ஏழைகளுக்கு என்றுமே எட்டாத விளக்கு என்று..........

இந்தியா வல்லரசு ஆவது உறுதி, 2020 நாம் தான் உலகை ஆளப்போகின்றோம், மற்ற நாடுகள் எல்லாம் நம்மிடம் பாடம் படிக்க வர போகின்றது............

செயா நாட்டின் நிலைமையையும், நிகழ்கால யதார்த்தையும் அழகாக படம் பிடித்து காட்டி வருகிறார். 2000ல் இருந்து இன்று வரை இவரிடம் சிக்கி சின்னா பின்னமாகாத நீதிமான்கள் இல்லை.

நீதியரசர் தினகரில் இருந்து இன்று நீதியரசர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து வரை பிழைப்பு சிரிப்பாய் சிரிக்கின்றது. இதை எல்லாம் பார்க்கும் போது புள்ளியியல் துறையில் ஒரு சிரிப்பு சொல்வது ஞாபகத்து வருகிறது.

ஒரு மனிதன் கொதிக்கும் நீரில் ஒரு காலும் குளிர்ந்த நீரில் மறு காலையிம் வைத்துகொண்டு நின்றால் அவனது சராசரி நிலைமை சீராக உள்ளது என்று சொல்லி சிரிப்பாகள் அது போல் உள்ளது இந்திய நீதித்துறையின் தீர்புகள், உங்க கடமை உணர்ச்சி எங்களை எல்லாம் உணர்சி பொங்க வைக்கிறது. எங்களுக்கு எல்லாம் இவங்க செட்டாக மாட்டாங்க ஊர்பக்கம் போய் எதாவது கனிமொழி, தேன்மொழின்னு தேட வேண்டியது தான் போல.................

3 comments:

Anonymous said...

டான்சி வழக்கில் திருடியதை திருப்பி கொடுத்து விட்டதால் விடுதலை. இப்போது திருடியதில் ௨௦% வைத்து கொண்டால் தவறு இல்லை அதனால் விடுதலை. அட்டகாசம் அற்புதம்.. அனைத்து நாடுகளும் இந்தியா வந்து சட்டம் கற்று செல்ல வேண்டும்.

')) said...

இந்திய நீதித்துறையின் தீர்புகள், உங்க கடமை உணர்ச்சி எங்களை எல்லாம் உணர்சி பொங்க வைக்கிறது. எங்களுக்கு எல்லாம் இவங்க செட்டாக மாட்டாங்க ஊர்பக்கம் போய் எதாவது கனிமொழி, தேன்மொழின்னு தேட வேண்டியது தான் போல..-----அங்கேயும் எதுவும் செட்டாக விடமாட்டாங்களே.... சாதிவெறி இரமதாசு வகையறாக்கள்..?????

')) said...

இந்திய நீதித்துறையின் தீர்புகள், உங்க கடமை உணர்ச்சி எங்களை எல்லாம் உணர்சி பொங்க வைக்கிறது. எங்களுக்கு எல்லாம் இவங்க செட்டாக மாட்டாங்க ஊர்பக்கம் போய் எதாவது கனிமொழி, தேன்மொழின்னு தேட வேண்டியது தான் போல.. அங்கேயும் செட்டாக விடமாட்டாரகள். இராமதாசு வகையாறாக்கள்......நண்பரே...