Tuesday, May 12, 2015

அடுத்ததாக கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரிக்க இருக்கும் வழக்குகள்

1) குசராத்து இன கலவரம் - ஒரு திட்டமிட்ட பரப்புரை
2) தருமபுரி பேரூந்து எரிப்பு வழக்கு - அருகில் இருந்த மக்களை கணகில் எடுத்ததில் 3 மாணவிகள் 1/4 விழுக்காடுக்கும் குறைவே, ஆகவே குற்றமாகாது.
3) அண்ணல் காந்தி கொலை வழக்கு - கோட்சே துப்பாக்கி சுட பழகும் போது காந்தி குறுக்கே பாய்ந்துவிட்டார்
4) அன்னை இந்திரா படு கொலை - காவலர்கள் காலை நேர பயிற்சியில் இருக்கும் போது முன் அறிவிப்பு இல்லாமல் இந்திரா அந்த பக்கம் வந்தது தவறு
5) தில்லி நிர்பயா கொலை வழக்கு - அந்த நேரத்தில் தனியார் பேருந்தில் நிர்பயா பயணித்தி இருக்க வேண்டியது இல்லை, பாதுகாப்பாக ஆட்டோவில் சென்று இருக்க வெண்டும்.
6) பாபர் மசூதி இடிப்பு வழக்கு - நாட்டில் இருக்கும் இது போல் பழையகால மசூதிகள் எல்லாம் பாழடைந்துள்ளது, இடிக்கவில்லை என்றால் கொஞ்ச நாளில் அது தானாக விழுந்து இருக்கும்.
7) இலங்கை போர் குற்ற வழக்கு - இலங்கை இராணுவத்திற்கு பயிற்சிக்காக சுட்டதில் மாண்ட 10 லட்சம் மக்களும் அந்த இடங்களுக்கு சுடும் போதும் குண்டு வீசும் போது வந்திருக்க கூடாது.

இப்படி பட்டியல் நீண்டுக்கொண்டே போவதால் இதோடு நிறுத்திக்கொள்வோம்.

5 comments:

Anonymous said...

நீங்க சரியா காட்டிக்கொடுத்துடுவீங்க போலிருக்கு. ரொம்ப டேஞ்சரான பேர்வழியா இருக்கீங்க.

')) said...

சிரிப்பாய்ச் சிரிக்குது.

Anonymous said...

thandanai ellavatraiyum sattathilirundhu neekki vidalaam!!

')) said...

உஸ்... உண்மையைச சொல்லி விட்டீர்களா..????

Anonymous said...

அட்டகாசம். இனி எல்லோரும் குறிப்பிட்ட அரசு வழக்கறிஞர் மட்டுமே வேண்டும் என்றும் குறிப்பிட்ட நீதிபதி மட்டுமே வேண்டும் என்றும் கேட்பார்கள். நீதி நிச்சயம் வழங்கப்படும்.