Wednesday, November 20, 2013

ஆரம்பம் - Swordfishம் திரைவிமர்சனம் மணிரத்தினம் போல் அல்லாமல் மிசுகின் வழியில்


ஆரம்பம் இந்த ஆங்கிலப்படத்தை அப்படியே தமிழில் எடுக்க நினைத்து பிறகு கதைகளில் சிறு சிறு மாற்றங்களை மட்டும் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதிலும் இந்திய அரசியலில் நடந்த பேரங்களையும் அதன் தொடர்பு கொண்ட நிகழ்வுகளையும் நுழைத்துள்ளதால் மக்கள் படத்தையும் இந்திய அரசியலையும் தாண்டி சிந்திக்க முடியாமல் திறமையாக கட்டிப்போட்டுள்ளார் இயக்குனர் பாராட்டுக்கள்.

ஆங்கில கதையை அப்படியே தமிழில் எடுத்து இருக்கவும் முடியாது தான் காரணம் ஆர்யாவின் பாத்திரத்திற்கு ஒரு முன்னாள் மனைவியும் குழந்தையும் உண்டு. அந்த மனைவி நீலப்படம் எடுக்கும் மனிதருடன் வாழ்ந்துக்கொண்டு மகளை தந்தையிடம் இருந்து பிரித்து போதைக்காக வாழும் ஒரு பெண்ணாக படைக்கப்பட்ட ஒரு பாத்திரம் தமிழில் எப்படி எடுப்பது.

அப்பாவுக்கு பீர் வாங்கொடுத்து மகிழும் மகளை காட்டியதற்கே வாங்கி கட்டிக்கொண்ட நிலையில் இப்படி எல்லாம் கதை எழுதினால் எப்படி என்று தான் ஆர்யாவை காதலனாக மாற்றிவிட்டார்கள்.

சரி அச்சித்தின் பாத்திரமாவது அப்படியே தேசபக்தி வழிய விட்டு வைத்து இருக்கலாம். எப்படி அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் தாக்கும் எவனுக்கும் 10 மடங்காவது திருப்பி தருவது என்று அரசாங்கத்தால் நடத்தபடும் ஒரு நிழல் அமைப்பின் தலைவன் ஆங்கிலத்தில். தமிழிலும் அப்படியே காட்டி இருக்கலாம், சமீபத்தில் D-Dayல் வந்தது போல்.

ஆனால் என்னவோ சவபெட்டி ஊழல், கைதடி ஊழல் என்று ஊதிவிட்டு விட்டார்கள் தமிழில்.

ஆரம்பமே விருவிருப்பாக இருக்கிறது என்றால் இந்த ஆங்கிலப்படத்தை எப்படி சொல்வார்கள் என்று படம் பார்த்தவர்கள் சொல்லட்டும்.

நயனின் பாத்திரம் தான் ஐயோ பாவம் என்று வந்து நிற்கிறது. ஆங்கிலத்தில் ஒரு வீராங்கனையாக காட்டபட்ட பாத்திரம் தமிழில் துபையில் மாடியில் இருந்து தள்ளிவிடும் பாத்திரமாக படைக்கப்பட்டிருப்பது கொடுமையே.

ஒரு நல்ல படத்தை அப்படியே மொழிபெயர்கவும் நல்ல திறமை வேண்டும், நன்றாக தமிழில் வந்திருக்கிறது வாழ்த்துகள்.

0 comments: